under review

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது

From Tamil Wiki
Revision as of 14:07, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது, 2020-ம் ஆண்டு முதல், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில், ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் இதழ் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருது வழங்கப்படுகிறது.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது

தமிழ்மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழிக் கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில், ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் இதழைத் தேர்ந்தெடுத்து தமிழக அரசு விருதுகள் வழங்கி வருகிறது. ‘தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது’, ‘தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் வார இதழ் விருது’, ‘தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது’ என்ற பெயரில் தமிழக அரசு அவ்விருதுகளை வழங்குகிறது

2020-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதுகள், இரண்டு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும், கேடயமும், பாராட்டுச் சான்றிதழும், பொன்னாடையும் கொண்டவை.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது பெற்ற இதழ்கள்

ஆண்டு இதழ் இதழின் வகை
2020 தினமணி நாளிதழ்
2020 கல்கி வாரஇதழ்
2020 செந்தமிழ் திங்களிதழ்
2021 உயிர்மை திங்களிதழ்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Dec-2023, 04:32:34 IST