under review

சொல்லின் செல்வர் விருது

From Tamil Wiki
Revision as of 12:05, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் சொல்லின் செல்வர் விருதும் ஒன்று. இவ்விருது 2013-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

சொல்லின் செல்வர் விருது

சிறந்த இலக்கியப் பேச்சாளராகவும், தமிழர் நாகரீகத்தையும் பண்பாட்டையும் மக்கள் மனதில் சொற்பொழிவு வழி பதியச் செய்பவராகவும், தமிழ்த் தொண்டு செய்வோராகவும் உள்ளவருக்கு சொல்லின் செல்வர் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2013 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, விருதுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், தகுதிச்சான்று மற்றும் பொன்னாடையும் கொண்டது.

சொல்லின் செல்வர் விருது பெற்றவர்கள் (2021 வரை)

எண் ஆண்டு விருது பெற்றவர்
1 2013 முனைவர் ம. லோகநாயகி
2 2014 டாக்டர் சுதா சேஷையன்
3 2015 முனைவர் சோ. சத்தியசீலன்
4 2016 பி. மணிகண்டன்
5 2017 முனைவர் வைகைச் செல்வன்
6 2018 ஆவடிக்குமார்
7 2019 கவிஞர் முனைவர் கவிதாசன்
8 2020 நாகை முகுந்தன்
9 2021 சூர்யா சேவியர்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Apr-2023, 18:37:07 IST