under review

108 சிவ தாண்டவ விளக்கம்-புஜங்கத்ராஸிதம்

From Tamil Wiki
Revision as of 14:05, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
புஜங்கத்ராஸிதம் (அரவச்சம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - புஜங்கத்ராஸிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று புஜங்கத்ராஸிதம். தமிழில் இது 'அரவச்சம்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தி நான்காவது கரணம்.

சிவனின் ஆடல்

காலை வளைத்து உயரத் தூக்கி, முக்கோண வளைவாகத் தொடையைத் தூக்கி வளைத்து, இடுப்பு முழங்கால்களையும் வளைத்து நின்று ஆடுவது. பாம்பைக் கண்டு அஞ்சி ஓடுவது போன்ற நிலை. வலது கையை டோலஹஸ்தமாகவும், இடது கையை கடகாமுகமாகவும் வைத்துக் கொள்வது புஜங்கத்ராஸிதம் என அழைக்கப்படும்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 02:26:45 IST