கி.சாவித்ரி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 23:24, 27 February 2022 by Jeyamohan (talk | contribs)
கி.சாவித்ரி அம்மாள்

கி.சாவித்ரி அம்மாள் (1898- 1992) தமிழில் எழுதிவந்த எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர்.தொடக்ககால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். பொதுவாசிப்புக்கான கதைகளை வார இதழ்களில் எழுதினார்.

பிறப்பு, கல்வி

கி.சாவித்ரி அம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தின் புகழ்பெற்ற நீதிபதியும் இந்தியன் வங்கி நிறுவனர்களில் ஒருவருமான வி.கிருஷ்ணசாமி ஐயர்-ன் மகள். இந்திய தேசிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். மிதவாதியான கோக்கலேயின் ஆதரவாளர் (இவரை கண்டித்து சி.சுப்ரமணிய பாரதியார் எழுதியிருக்கிறார்) கிருஷ்ணசாமி ஐயர் பாலாம்பாளை மணாந்து இரண்டு மகன்களையும் நான்கு மகள்களையும் பெற்றார். கி.பாலசுப்ரமணியன், கி.சந்திரசேகரன்,கி.பாலசுந்தரி அம்மாள், கி.சாவித்ரி அம்மாள், கி.சுப்புலட்சுமி அம்மாள், கி.சரஸ்வதி அம்மாள்.

இவர்களில் கி.சந்திரசேகரன் சிறுகதை எழுத்தாளர். தன் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். இவருடைய இரு தங்கைகளுமே எழுத்தாளர்கள். கி.சாவித்ரி அம்மாளும் கி.சரஸ்வதி அம்மாளும் கதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார்கள். கி. சாவித்ரி அம்மாள்5-மே-1898 ல் பிறந்தார். மைலாப்பூர் ராணி விஜயநகரம் பள்ளியில் ஆரம்பக்கல்வியை மட்டுமே அடைந்தார். வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் கற்றார்..

தனிவாழ்க்கை

தன் பத்து வயதில் 1908 ஜூன் மாதம் சாவித்ரி அம்மாள் தஞ்சை மருத்துவக்குடி சிவராம ஐயரின் மகன் பட்டாபிராம ஐயரை மணந்தார். 1948ல் பட்டாமிராம ஐயர் மறைந்தார்.. கி.பாலசுப்ரமணிய ஐயர் இளமையிலேயே மனைவியை இழந்தார். சாவித்ரி அம்மாள் அவருடைய குழந்தைகளுக்கு பாதுகாவலராக அவ்வீட்டிலேயே தன் கணவருடன் வாழ்ந்தார்.சாவித்திரி அம்மாளுக்குக் குழந்தைகள் இல்லை.

1958ல் அவரிடமிருந்த சொத்தில் பெரும்பகுதியை ஒரு பள்ளிக்கூடம் தொடங்க தானமாகக் கொடுத்தார். அதுதான் மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளி. மேலும் மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் பள்ளிக்கூடத்திற்கும், லேடி சிவஸ்வாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் அவர் பெரும் தொகையை தானமாகக் கொடுத்தார்

இலக்கிய வாழ்க்கை

கி.சாவித்ரி அம்மாள் பதினைந்து வய்தில் எழுதத் தொடங்கினார். ஆங்கில துப்பறியும் நாவல் ஒன்றினை "ஹேமலதை" என்ற பெயரில் மொழி பெயர்த்தார்.பின்னர் இது நூலாக வந்தது. F.W. Bains எழுதிய ’Digit of the moon’ எனும் நூல் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு ‘காலைப்பிறை’ என்ற தலைப்பில் வெளிவந்தது. கி. வா. ஜகந்நாதன்அதற்கு முன்னுரை எழுதியிருந்தார். 1956ல் "கல்பகம்" என்ற நாவலை. எழுதினார். கல்கி, கலைமகள் ஆகிய இதழ்களில் கதைகள் வெளி வந்தன.

தன் குடும்பநண்பரான

மறைவு

1992ஆம் ஆண்டு மறைந்தார்.

நூல்கள்

நாவல்கள்
  • கன்றின் குரல்
  • கல்பகம்
மொழிபெயர்ப்புகள்
  • ஹேமலதை
  • காலைப்பிறை
ஆங்கிலம்

உசாத்துணை