இலக்கணக் கொத்து
இலக்கணக்கொத்து (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) தமிழ் இலக்கண நூல். வடமொழி இலக்கண மரபைத் தழுவி சுவாமிநாத தேசிகரால் உரையுடன் இயற்றப்பட்டது. சைவ மடாலயங்களில் தமிழிலக்கணப் பாடமாகப் பயிலப்பட்டது.
பதிப்பு, வெளியீடு
இலக்கணக்கொத்து முதன்முதலில் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரால் 1866-ல் பதிப்பிக்கப்பட்டது. 1973-ல் தி. வே. கோபாலையர் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்.
ஆசிரியர்
இலக்கணக்கொத்து நூலை இயற்றியவர் சுவாமிநாத தேசிகர். திருநெல்வேலி ஈசான மடத்தில் இருந்தார். வடமொழியிலிருந்து தமிழ் பிறந்தது என்னும் கொள்கையைக் கொண்டிருந்தார்.
நூல் அமைப்பு
இந்நூல் பாயிரத்துடன் 131 பாடல்கள் உள்ளன, பாயிரம் 85 அடிகளைக் கொண்டது. சிறப்புப் பாயிரம் 31 அடிகளைக்கொண்ட நேரிசை ஆசிரியப்பா.
இலக்கணக்கொத்து வேற்றுமையியல்(52 பாடல்கள்), வினையியல் 22 பாடல்கள்), ஒழிபியல்(45 பாடல்கள்) என்னும் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.