under review

தென்னாட்டுப் போர்க்களங்கள்

From Tamil Wiki
Revision as of 22:25, 16 April 2022 by Tamizhkalai (talk | contribs)
தென்னாட்டுப் போர்க்களங்கள்

தென்னாட்டுப் போர்க்களங்கள் (1961) கா. அப்பாத்துரை எழுதிய வரலாற்று விவரிப்பு நூல். சங்ககாலம் தொட்டு தமிழக நிலத்தில் நடந்த போர்களை இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு சித்தரித்திருக்கிறார்.

வெளியீடு

1961-ல் இந்நூலை கா.அப்பாத்துரை எழுதினார். 1971-ல் அவரே அலமேலு நிலைய வெளியீடாக விரிவான முன்னுரையுடன் வெளியிட்டார்.

உள்ளடக்கம்

தென்னாட்டுப் போர்க்களங்கள் கீழ்க்கண்ட அத்தியாயங்கள் கொண்ட நூல்

  • வீரமரபு
  • வான விளிம்பு
  • அகல் உலகத் தொடர்பு
  • வடதிசைத் தொடர்புகள்
  • சங்ககாலப் போர்கள், 3 பகுதிகள்
  • பேரரசுப் போட்டி
  • சோழப்பெரும்பேரரசு
  • தேசியவாழ்வும் புதுமறுமலர்ச்சியும்

இவற்றில் கா.அப்பாத்துரை தமிழகத்தில் தொல்சான்றாதாரங்கள் கிடைக்காத முற்சங்க காலத்தை நூலாதாரங்களைக் கொண்டு அணுகுகிறார். சங்ககாலத்தில் நிகழ்ந்த போர்கள், பேரரசுகள் உருவாதல் ஆகியவற்றை விரித்துரைத்து சோழர்காலத்திய போர்களை விளக்குகிறார். ஆங்கிலேய ஆட்சிக்காலத்து போர்கள் , 1947- வரையிலான விடுதலைப்போராட்டங்கள் வரையிலான போர்களின் சித்திரம் இந்நூலில் உள்ளது.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.