பதிகம் (சிற்றிலக்கியம்)
பதிகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையில் அமைந்த பத்து பாடல்களால் ஆனது பதிகம்[1]. பத்து வெண்பாக்கள் அமையப் பாடுவதும் உண்டு.[2] இவை நான்கடி அல்லது எட்டடிப் பாடலாக இருக்கும்.
பத்தின் மடங்காக இருபது பாடல்களில் அமைவதும் உண்டு[3].
கருவிநூல்
- பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007
இதர இணைப்புகள்
அடிக்குறிப்பு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
- ↑
ஆசிரியத்துறை அதனது விருத்தம்
கலியின் துறை அவற்றின் நான்கடி
எட்டின் கூறும் உயர்ந்த வெண்பா
மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப்
பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும்- பன்னிரு பாட்டியல் - 197
- ↑
கோதிலோர் பொருளைக் குறித்தையிரண்டு
பாவெடுத்துரைப்பது பதிகமாகும்- முத்துவீரியம் - 1116
- ↑
பதிகம் என்பதுவே பலபொருள் பற்றி
பத்துப் பாட்டால் பாடல் பான்மையே- பிரபந்ததீபிகை -80