பெரிய திருமொழி: Difference between revisions
No edit summary |
|||
| Line 12: | Line 12: | ||
108 திருமொழிகள் ஒவ்வொன்றிலும் 10 பாசுரங்கள்.பத்தாம் பத்தின் ஏழாவது திருமொழியில் மட்டும் 14 பாசுரங்கள். 108*10 +4 =1084 பாசுரங்கள். | 108 திருமொழிகள் ஒவ்வொன்றிலும் 10 பாசுரங்கள்.பத்தாம் பத்தின் ஏழாவது திருமொழியில் மட்டும் 14 பாசுரங்கள். 108*10 +4 =1084 பாசுரங்கள். | ||
====== பாயிரங்கள் (தனியன்) ====== | |||
திருக்கோட்டியூர் நம்பி, எம்பெருமானார், கூரத்தாழ்வார் மூவரும் பெரிய திருமொழிக்கு பாயிரம் (தனியன்) எழுதியுள்ளனர். | |||
எம்பெருமானார் இயற்றிய தனியன் | எம்பெருமானார் இயற்றிய தனியன் | ||
| Line 78: | Line 79: | ||
* திருச்சாழல்--எம் பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் பாடுதல் (திருச்சாழல் அம்மானை போன்ற ஓர் விளையாட்டு) | * திருச்சாழல்--எம் பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் பாடுதல் (திருச்சாழல் அம்மானை போன்ற ஓர் விளையாட்டு) | ||
* உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம்பெருமான் காத்ததைக் கூறி, உலகிற்கு உபதேசித்தல் | * உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம்பெருமான் காத்ததைக் கூறி, உலகிற்கு உபதேசித்தல் | ||
* இறைவனின் சேவைக்கு உதவாத உடல் அவயவங்கள் | * இறைவனின் சேவைக்கு உதவாத உடல் அவயவங்கள் பயனற்றவை எனக் கூறல் | ||
* பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் | * பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் | ||
== சிறப்புகள் == | |||
| Line 97: | Line 100: | ||
== உசாத்துணை == | |||
[https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2022-html-p202254-28726 திருமங்கையாழ்வார்-தமிழ் இணைய கல்விக் கழகம்] | |||
https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2022-html-p202254-28726 | |||
{{Being created}} | {{Being created}} | ||
பெருமானின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிர் எதிராகக் கூறும் வினா விடையில் காட்டும் நிலையில் அமைந்தது திருச்சாழல் என்னும் இலக்கியவகை. இதைத் திருமங்கையாழ்வார் கையாள்கிறார் (1992 -2001). இது பக்தியைப் பரப்ப நாட்டுப்புற இலக்கிய வகை பயன்பட்டதற்குச் சான்று, | பெருமானின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிர் எதிராகக் கூறும் வினா விடையில் காட்டும் நிலையில் அமைந்தது திருச்சாழல் என்னும் இலக்கியவகை. இதைத் திருமங்கையாழ்வார் கையாள்கிறார் (1992 -2001). இது பக்தியைப் பரப்ப நாட்டுப்புற இலக்கிய வகை பயன்பட்டதற்குச் சான்று, | ||
Revision as of 07:11, 18 January 2023
பெரிய திருமொழி திருமங்கையாழ்வார் இயற்றிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இரண்டாம் ஆயிரத்தில் இடம்பெறும் பிரபந்தம். 1084 பாசுரங்களைக் கொண்டது. வைணவ திவ்யதேசங்களுக்கு சென்று அங்கு கோவில் கொண்ட தெய்வத்தின்மீது பாடிய பாசுரங்களும், அகத்துறைப் பாடல்களும் கொண்டது.
ஆசிரியர்
பெரிய திருமொழியை இயற்றியவர் திருமங்கையாழ்வார். நீலன், பரகாலன், கலியன் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர்.
பெயர்க்காரணம்
திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழி, பெருமாள் திருமொழி, நாச்சியர் திருமொழி, திருவாய்மொழி என ஐந்து திருமொழிகள் உள்ளன. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் பாசுரங்களைக் கொண்டதால் பெரிய திருமொழி எனப் பெயர் வந்தது என அறிஞர்கள் கருதுகின்றனர்.
நூல் அமைப்பு
பெரிய திருமொழி நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இரண்டாம் ஆயிரத்தில் , 948 முதல் 2031 வரையிலான பாடல்களாக இடம்பெற்றுள்ளது. 11 பத்துகளைக் கொண்டது. ஒவ்வொரு பத்தும் பத்து பாசுரங்களைக்கொண்ட பத்து திருமொழிகளால் ஆனது. பதினோராம் பத்து மட்டும் 8 திருமொழிகளைக் கொண்டது.
108 திருமொழிகள் ஒவ்வொன்றிலும் 10 பாசுரங்கள்.பத்தாம் பத்தின் ஏழாவது திருமொழியில் மட்டும் 14 பாசுரங்கள். 108*10 +4 =1084 பாசுரங்கள்.
பாயிரங்கள் (தனியன்)
திருக்கோட்டியூர் நம்பி, எம்பெருமானார், கூரத்தாழ்வார் மூவரும் பெரிய திருமொழிக்கு பாயிரம் (தனியன்) எழுதியுள்ளனர்.
எம்பெருமானார் இயற்றிய தனியன்
வாழிபரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்
முதல் பத்து
முதல்பத்தில் முதல் திருமொழி எட்டெழுத்து மந்திரத்தின், நாராயண நாமத்தின் பெருமையைப் பாடுகிறது. ஒவ்வொரு பாடலும் நாராயணா எனும் நாமமே என முடிவடைகிறது. அடுத்த ஒன்பது திருமொழிகள் திருப்பிரிதி(மானசரோவர்), திருவதரி, திருவதரிஆசிரமம், திருச்சாளக்கிராமம், நைமிசாரண்யம், சிங்கவேள் குன்றம், திருவேங்கடம்(4 திருமொழிகள்) ஆகிய திவ்யதேசங்களையும், அங்கு கோவில் கொண்ட பூசைத்திருமேனியயையும் பாடுபவை.
இரண்டாம் பத்து
இரண்டாம் பத்தில் உள்ள திருமொழிகள் திருவேங்கடம், திருஎவ்வுளூர்(திருவள்ளூர்), திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருக்கடல்மல்லை (2 திருமொழிகள்), திருவிடந்தை (தலைவியின் ஆற்றாமை கண்டு தாய் இரங்கல்), திருவட்டபுயகரம் (தலைவனின் உருவெளிப்பாடு கண்ட தலைவி தோழிக்கும், தாய்க்கும் சொல்வது), திருப்பரமேசுவர விண்ணகரம், திருக்கோவலூர் ஆகிய திருநான்காத்தலங்களைப் பாடுகிறார். அகத்துறைப் பாடல்களில் தன்னை பரகால நாயகியாகப் பாவித்து, நாயகி பாவத்தில் தன் பக்தியை வெளிப்படுத்துகிறார்.
மூன்றாம் பத்து
மூன்றாம் பத்தில் திருவயிந்திபுரம், தில்லைச் திருச்சித்ரகூடம்(2 திருமொழிகள்), திருக்காழிச் சீராம விண்ணகரம், திருவாலி (3 திருமொழிகள்), திருநாங்கூர் மணிமாடக்கோவில், திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம், திருநாங்கூர் அரிமேய விண்ணகரம் ஆகிய திருத்தலங்களைப் பாடியுள்ளார்.
நான்காம் பத்து
நான்காம் பத்தில் திருநாங்கூர் திருதேவனார்த்தொகை, திருநாங்கூர் வண்புருடோத்தமம், திருநாங்கூர் செம்பொன்செய்கோவில், திருநாங்கூர் தெற்றியம்பலம், திருநாங்கூர் திருமணிக்கூடம், திருநாங்கூர் காவளம்பாடி, திருநாங்கூர் திருவெள்ளக்குளம், திருநாங்கூர் பார்த்தன்பள்ளி (தலைவியின் செயல் கண்டு ஆற்றாது நற்றாய் கூறல்) , திருஇந்தளூர், திருவெள்ளியங்குடி ஆகிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.
ஐந்தாம் பத்து
ஐந்தாம் பத்தில் திருப்புள்ளப்பூதங்குடி, திருவரங்கம் (ஐந்து திருமொழிகள்), திருப்பேர்நகர், திருநந்திபுர விண்ணகரம் ஆகிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.
ஆறாம் பத்து
ஆறாம் பத்தில் திருவிண்ணகரம்(3 திருமொழிகள்), திருநறையூர் (7 திருமொழிகள்) ஆகிய திவ்ய தேசங்களைப் பாடியிருக்கிறார் திருமங்கையாழ்வார்.
ஏழாம் பத்து
ஏழாம் பத்தில் திருநறையூர்(3 திருமொழிகள்), திருச்சேறை, திருவழுந்தூர்(4 திருமொழிகள்), திருபுலியூர் சலசயனம், திருக்கண்ணமங்கை ஆகிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.
எட்டாம் பத்து
எட்டாம் பத்து முழுவதும் திருக்கண்ணமங்கை தலமும் அங்கு கோவில் கொண்ட பக்தவத்ஸலப் பெருமாளும் மட்டுமே பாடப்பட்டுள்ளனர். முதல் ஐந்து திருமொழிகள் அகப்பொருள் சார்ந்தவைல. அவ்ற்றின் பாடுபொருள்கள்:
- தலைவன் பால் ஈடுபட்ட தலைவியின் செயல்களைக் கேட்டவர்க்கு நற்றாய் கூறுதல்
- தலைவியின் நிலைகண்ட தாய் தலைவனைப் பழித்தும், தலைவியில் இளமைக்கு இரங்கியும் கூறல்
- தலைவனைப் பிரிந்த தலைவியின் இரங்கல்
- கோத்தும்பி
- தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கல்
ஒன்பதாம் பத்து
ஒன்பதாம் பத்தில் திருக்கண்ணங்குடி, திருநாகை (பிள்ளைத்தமிழ்-அச்சோப்பதிகம்), திருப்புல்லாணி (தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுந்து தலைவனைத் தேடிப் போகத் துணிந்து நெஞ்சையும், தோழியையும் துணை வேண்டுதல்), திருப்புல்லாணி (தலைவி பறவைகளைத் தாதுவிட்டும், பிறை, தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்), திருக்குறுங்குடி (பிறிவு ஆற்றாத தலைவி, தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு, தாயார் தோழியரை வேண்டுதல்), திருக்குறுங்குடி (தலம்), திருவல்லவாழ், திருமாலிருஞ்சோலை(தலம்), திருமாலிருஞ்சோலை(பிரிவு ஆற்றாது தலைவனை மாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்துத் தாய் இரங்கிக் கூறுதல்), திருக்கோட்டியூர்) ஆகிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.
பத்தாம் பத்து
பத்தாம் பத்தில் உள்ள திருமொழிகளின் பாடுபொருள்கள் :
- பதினெண் திருப்பதிகள்,
- பொங்கத்தம் பொங்கோ (தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டுதல்-ஓர் யாப்பு வகை)
- குழமணிதரம்- தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டி ஆடும் கூத்து-ஓர் யாப்பு வகை)
- கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்
- கண்ணனை சப்பாணி கொட்ட வேண்டுதல்
- மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்
- கண்ணனைப் பற்றி யசோதை கேட்டதும், ஆய்ச்சியர் முறையிடுதலும்
- ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்
- பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு-- தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல் தலைமகனைப் பிரிந்த தலைமகள் துன்பம் மீற உரைத்தவை
பதினோராம் பத்து
பதினோராம் பத்திலுள்ள திருமொழிகளின் பாடுபொருள்கள் :
- பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறல்( 3 திருமொழிகள்)
- திருமாலின் திருஅவதாரங்களில் ஈடுபடுதல்
- திருச்சாழல்--எம் பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் பாடுதல் (திருச்சாழல் அம்மானை போன்ற ஓர் விளையாட்டு)
- உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம்பெருமான் காத்ததைக் கூறி, உலகிற்கு உபதேசித்தல்
- இறைவனின் சேவைக்கு உதவாத உடல் அவயவங்கள் பயனற்றவை எனக் கூறல்
- பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்
சிறப்புகள்
திருச்சாழல்
பெருமானின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிர் எதிராகக் கூறும் வினா விடையில் காட்டும் நிலையில் அமைந்தது திருச்சாழல் என்னும் இலக்கியவகை. (1992 -2001). பக்தி இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியம் பயின்று வருவதற்கான சான்று.
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே!
உசாத்துணை
திருமங்கையாழ்வார்-தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
பெருமானின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிர் எதிராகக் கூறும் வினா விடையில் காட்டும் நிலையில் அமைந்தது திருச்சாழல் என்னும் இலக்கியவகை. இதைத் திருமங்கையாழ்வார் கையாள்கிறார் (1992 -2001). இது பக்தியைப் பரப்ப நாட்டுப்புற இலக்கிய வகை பயன்பட்டதற்குச் சான்று,
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே!
தோழி, தாய், மகள் பாசுரங்கள்,தூது விளக்கங்கள் இந்த நூலிலேயே மிகவும் சிறந்த பகுதியாகும். பரகாலர் தாய் நிலையில் பாடுகையில் தம் மகளைக் கண்டு பேசுவதாகவும், அவள் நோய் பற்றி அறிய விரும்பு வதாகவும் திருமாலிடம் தம் மகளின் நிலையை எடுத்துப் பேசுவதாகவும், திருமாலோடு சென்ற மகளைக் குறித்து இரங்குவதாகவும் பல நிலைகளில் பாடுகின்றார். பரகாலர் தாய் நிலையிலிருந்து பாடும் திருப்பதிகள், திருவிடந்தை, திருவாலி, திருப்பார்த்தன்பள்ளி, திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருமாலிருஞ்சோலை, திருநெடுந்தாண்டகம் இடைப் பத்து (11, 20) நற்றாயாகவும், செவிலித் தாயாகவும் பாவித்துப் பாடும் பாடல்களின்
பொங்கத்தம் பொங்கோ’ என முடிகின்றன. இதை ஒரு சங்கேத ஒலிக் குறிப்பு என்பர். இலங்கையில் போர் நடந்து முடிகிறது இராவணன் மாண்டு போனான். மீண்டுள்ள அரக்கர்கள் தங்கள் உயிருக்காக இராமனிடம் மன்றாடுகிறார்கள். அப்போது இராமனின் வெற்றிச் சிறப்பைப் பாடுவதாக இத்திருமொழி அமைந்துள்ளது.
தடம் பொங்கத்தம் பொங்கோ என்பது தோற்றவர்கள் பறையடித்து ஆடும் கூத்தாகும். தடம் என்பது இராமனின் பெருமையைக் குறிக்கும். பொங்க என்பது அப்பெருமை மேல் ஓங்க என்பதையும் பொங்கோ என்பது தங்களுக்கும் அப்பெருமை மேலோங்க வேண்டும் என்பதாகும்.
பத்தாம் பத்து குழமணி தூரம்
உசாத்துணை
https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2022-html-p202254-28726
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.