first review completed

இலக்கண விளக்கம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Moved categories to bottom of article)
Line 35: Line 35:
==அடிக்குறிப்புகள்==
==அடிக்குறிப்புகள்==
<references />
<references />
[[Category:Tamil Content]]
 


{{First review completed}}
{{First review completed}}
[[Category:Tamil Content]]

Revision as of 15:40, 29 December 2022

இலக்கண விளக்கம் (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு ) வைத்தியநாத தேசிகர் இயற்றிய ஒரு தமிழ் இலக்கண நூல். , இயற்றிய ஆசிரியரே உரையும் எழுதிய இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவதுடன் பாட்டியல் பற்றியும் விளக்குகிறது. தமிழ் இலக்கணத்தை முழுமையாகவும் விரிவாகவும் கூறும் இலக்கண விளக்கம் குட்டித் தொல்காப்பியம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆசிரியர்

இலக்கண விளக்கத்தை இயற்றியவர் வைத்தியநாத தேசிகர். திருவாரூரைச் சேர்ந்த வன்மீகநாத தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். அகோர முனிவரிடம் கல்வி கற்றார். தருமை ஆதீனத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் பரம்பரையில் தோன்றியவர். நாயக்கர் மன்னரின் கவர்னர் ஒருவருக்குச் சிலகாலம் தமிழ் கற்பித்தார். தம் மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தபோது நன்னூல் முதைய இலக்கண நூல்களின் உரைகள் ஆசிரியரின் கருத்திற்கு மாறாக அமைந்ததைக்கண்டு தான் இயற்றிய இலக்கண விளக்கம் நூலுக்குத் தானே உரையும் எழுதினார்.

வைத்தியநாத தேசிகரின் சமகாலத்தவரான அந்தகக்கவி வீரராகவ முதலியார் தேசிகரைப் புகழ்ந்து எழுதிய பாடல்

ஐம்பதின்மர் சங்கத்தார் ஆகிவிடா ரோநாற்பத்து
ஒன்பதின்மர் என்றே உரைப்பாரோ-இம்பர்புகழ்
வன்மீக நாதனருள் வைத்தியநா தன்புடவி
தன்மீதந் நாள்சரித்தக் கால்

பதிப்பு

சி. வை. தாமோதரம்பிள்ளை 1889-ல் இலக்கண விளக்கத்தை முதன் முதலில் பதிப்பித்தார். 1941-ல் இதன் பொருளதிகாரம் மட்டும் தனி நூலாக சோமசுந்தர தேசிகரால் பதிப்பித்து வெளியிடப்பட்டது. 1973-ல் எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் சேயொளி என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கழக வெளியீடாக வெளிவந்தன. 1974-ல் தி. வே. கோபாலையர் இலக்கண விளக்கம் முழுவதையும் தரப்படுத்தி விளக்கக் குறிப்புக்களுடன் பதிப்பித்தார் [1].

நூல் அமைப்பு

இலக்கண விளக்கம் நூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களில் 914 பாடல்கள் உள்ளன.

  • எழுத்ததிகாரத்தில் (158 பாடல்கள்), எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுப் புணரியல் என ஐந்து இயல்களும்
  • சொல்லதிகாரத்தில் (214 பாடல்கள்) பெயரியல், வினையியல், உரிச்சொல்லியல், இடைச்சொல்லியல், பொதுவியல் என்னும் ஐந்து இயல்களும்
  • பொருளதிகாரத்தில் (569 பாடல்கள்) அகத்திணையியல், புறத்திணையியல், அணியியல், செய்யுளியல், பாட்டியல் என்னும் ஐந்து இயல்களும் உள்ளன.

வைத்தியநாத தேசிகர் தொல்காப்பியத்தை நன்கு பயின்றவர். காலத்தை ஒட்டிப் பெரும்பாலும் தொல்காப்பியத்தோடு ஒத்ததாகவும் பின்வந்த நன்னூல் போன்றவற்றின் கருத்துகளை ஏற்றும்,மறுத்தும், இலக்கண விளக்கத்தை இயற்றி அதற்குத் தாமே உரையும் எழுதினார்.

சமணரான பவணந்தி முனிவர் மாயையை மறுப்பவராதலால் நன்னூலில் ஆதிகாரணமாகிய ஒலியணுக்களையே எழுத்தின் தோற்றத்துக்குக் காரணமாகக் கூறியுள்ளார். ஆனால் சைவசமயத்துத்தவரான தேசிகர் இறைவன் மாயையிலிருந்து தோன்றிய நாதத்தின் காரியமே ஒலி என்பதைத் வலியுறுத்துகிறார்.

தொல்காப்பியர் காலத்தில் அணி இலக்கணம் தோன்றியிருக்கவில்லை. உவமை மட்டுமே இருந்தது. இலக்கண விளக்கத்தில் தண்டியலங்காரம், மாறன் அகப்பொருள் முதலிய அணியிலக்கண நூல்களைப் பின்பற்றி தேசிகர் விரிவான அணியியலை உருவாக்கியிருக்கிறார்.

இந்நூலின் பாட்டியலை உரையுடன் இயற்றியவர் வைத்தியநாத தேசிகருடைய இளைய மகனான தியாகராச தேசிகர் என்றும் கருதப்படுகிறது. பாட்டியல் நூல்களில் மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்து ஆசிரியராலேயே உரையும் வரையப்பெற்ற சிறப்பினை உடையது.

உசாத்துணை

இலக்கண விளக்கம், தமிழ் இணைய கல்விக் கழகம்

இலக்கண விளக்கம், பதிப்பாசிரியர் திவே.கோபாலையர், தமிழ் இணைய கல்விக் கழகம்

அடிக்குறிப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.