under review

இந்திரா பார்த்தசாரதி: Difference between revisions

From Tamil Wiki
(Spell Check done)
Line 8: Line 8:
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952-ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சில ஆண்டுகள் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஸா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக (visiting professor) பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

====== குடும்பம் ======
 
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இ. பா.வின் தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்துதான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கை கூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைபெயரின் முதல் பகுதியான இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.
தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிடைத்தது. இ. பா.வின் தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்துதான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கை கூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைபெயரின் முதல் பகுதியான இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.
== இலக்கிய பங்களிப்பு ==
== இலக்கிய பங்களிப்பு ==
===== சிறுகதைகள் =====
===== சிறுகதைகள் =====
Line 18: Line 18:
"சிறுகதையின் வடிவம் அந்தந்த படைப்பாளியின் உள்மனத் தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளை பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.

===== நாவல்கள் =====
===== நாவல்கள் =====
இவருடைய முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968-ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புகளைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடையே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும்.  
இந்திரா பார்த்தசாரதியின்  முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968-ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புகளைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடையே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். இந்திரா பார்த்தசாரதி டெல்லியில் குடியேறிய பின் அங்குள்ள அரசியல் சூழலை பகடியாக சித்தரித்து எழுதிய சுதந்திரபூமி, தந்திரபூமி ஆகிய நாவல்கள் அவருக்கு புகழ்தேடித் தந்தவை.  
[[File:Kuruthipunal.jpg|thumb|குருதிப்புனல்]]

இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா.வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை.  
இந்திரா பார்த்தசாரதியின் சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா.வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவும் படைப்பு.  

கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் மிக நுட்பமாகச் சுட்டியிருக்கும்.
கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய [[குருதிப்புனல்]] என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் விவாதித்தது.
===== நாடகங்கள் =====
===== நாடகங்கள் =====
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.
நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். போர்வை போர்த்திய உடல்கள் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் முதன்மையானது. இது இருத்தலியல் பார்வையை முன்வைக்கும் நாடகம். அவசரநிலைக் காலத்துப் பின்னணியில் வெளிவந்தமையால் இந்நாடகம் பெரிதும் விவாதிக்கப்பட்டது

மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இவருடைய பெரும்பாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதை விட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மற்றும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இந்திரா பார்த்தசாரதியின் பெரும்பாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதை விட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஔரங்கசீப் மற்றும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் புகழ்பெற்றவை.  

டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் நாடகப் பேராசிரியராக மட்டும்தான் நான் பணியாற்ற விரும்புகிறேன் என்று அப்பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.
டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராக பொறுப்பேற்று அங்கே நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.

ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு 'சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.
இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமாநுஜர் நாடகத்துக்கு 'சரஸ்வதி சம்மான்’ விருது வழங்கப்பட்டது.
== இலக்கிய முக்கியத்துவம் ==
== இலக்கிய இடம் ==
பெருநகர் வாழ்க்கையின் அடையாளமாக உள்ள அதிகாரச் சிடுக்குகள், ஆடம்பரங்களின் விளையாட்டுகள், அறிவார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை தமிழில் முன் வைத்தவர் இந்திரா பார்த்தசாரதி. அதிகாரத்தை நேரடியாகக் கையாளும் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகள் மற்றும் அவ்வதிகாரத்தின் பகுதியாகவும் அதே சமயம் அடிமையாகவும் இருந்து அதை ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் குமாஸ்தா வர்க்கம் என்ற இரு சாராரின் மனத்திரிபுகளையும் நுட்பமான கிண்டல் வழியாக சித்தரிப்பவை இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள். ஆரம்ப கட்ட நாவல்களான தந்திரபூமி, சுதந்திரபூமி போன்றவை மிகச் சிறந்த உதாரணங்கள்.  

மனிதர்களின் பாவனைகளை அதிகமாகச் சொன்னவர் இந்திரா பார்த்தசாரதி. உணர்ச்சியற்ற அறிவார்ந்த ஆய்வு நோக்கு கொண்ட பார்வை அது. ஆகவே அவரது புனைவுகள் ஃப்ராய்டிய உளவியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தன. கதை மாந்தரின் உளவியலை கதைக்குள்ளேயே அலசிச் செல்லும் எழுத்துமுறை.
மனிதர்களின் பாவனைகளை அதிகமாகச் சொன்னவர் இந்திரா பார்த்தசாரதி. உணர்ச்சியற்ற அறிவார்ந்த ஆய்வு நோக்கு கொண்ட பார்வை அது. ஆகவே அவரது புனைவுகள் ஃப்ராய்டிய உளவியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தன. கதை மாந்தரின் உளவியலை கதைக்குள்ளேயே அலசிச் செல்லும் எழுத்துமுறை இந்திரா பார்த்தசாரதி கடைப்பிடித்தது.

எழுபதுகளில் மெல்ல இந்திரா பார்த்தசாரதி இருத்தலியல் சிந்தனைகளை நோக்கிச் சென்றார். அறிவார்ந்த அங்கதம் மெல்ல அர்த்தமின்மை என்னும் தரிசனம் நோக்கிச் சென்றது. இந்திரா பார்த்தசாரதி இந்தக் காலகட்டத்தில் இதற்கான சிறந்த வடிவமாக நாடகம் நோக்கிச் சென்றார். தமிழ் நவீன நாடகத்தின் மூலவர்களில் ஒருவராக இந்திரா பார்த்தசாரதி கருதப்படுவது இந்நாடகங்கள் வழியாகவே. குறிப்பாக போர்வை போர்த்திய உடல்கள் தமிழின் மிகச் சிறந்த யதார்த்த நாடகம் என அன்றும் இன்றும் கருதப்படுகிறது.
எழுபதுகளில் மெல்ல இந்திரா பார்த்தசாரதி இருத்தலியல் சிந்தனைகளை நோக்கிச் சென்றார். அறிவார்ந்த அங்கதம் மெல்ல அர்த்தமின்மை என்னும் தரிசனம் நோக்கிச் சென்றது. இந்திரா பார்த்தசாரதி இந்தக் காலகட்டத்தில் இதற்கான சிறந்த வடிவமாக நாடகத்தை தேர்வுசெய்தார்.. தமிழ் நவீன நாடகத்தின் மூலவர்களில் ஒருவராக இந்திரா பார்த்தசாரதி கருதப்படுவது இந்நாடகங்கள் வழியாகவே. குறிப்பாக போர்வை போர்த்திய உடல்கள் தமிழின் மிகச் சிறந்த யதார்த்த நாடகம் என அன்றும் இன்றும் கருதப்படுகிறது.

இந்திரா பார்த்தசாரதியின் பிற்கால நாவல்கள் நம் அரசியலின் அறவீழ்ச்சியை நோக்கிய அங்கதம் கொண்டவை. மாயமான் வேட்டை, வேதபுரத்து வியாபாரிகள் போன்றவை அவாது அங்கத தரிசனத்தின் உதாரணங்கள்.

பெருநகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என முரண்களின் (oxymoron) தொகுப்பு இவர். ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.
== விருதுகள் ==
== விருதுகள் ==
# [[சாகித்ய அகாடமி விருது]]
# சாகித்ய அகாடமி விருது ( குருதிப்புனல் நாவல் )
# [[சரஸ்வதி சம்மான் விருது]]
# சரஸ்வதி சம்மான் விருது (ராமானுஜர் நாடகம்)
# சங்கீத் நாடக அகாடமி விருது
# சங்கீத் நாடக அகாடமி விருது
# பாரதிய பாஷா பரிஷத்
# பாரதிய பாஷா பரிஷத்
Line 59: Line 57:
# திரைகளுக்கு அப்பால்
# திரைகளுக்கு அப்பால்
# சத்திய சோதனை
# சத்திய சோதனை
# குருதிப்புனல் (சாஹித்ய அகாடெமி விருது)
# குருதிப்புனல்
# கிருஷ்ணா கிருஷ்ணா
# கிருஷ்ணா கிருஷ்ணா
# வேதபுரத்து வியாபாரிகள்
# வேதபுரத்து வியாபாரிகள்
Line 69: Line 67:
# அக்னி
# அக்னி
# தீவுகள்
# தீவுகள்
# ஏசுவின் தோழர்கள்
# [[ஏசுவின் தோழர்கள்]]
# நிலம் என்னும் நல்லாள் (மழை என்ற நாடகத்தின் மூலக்கதை)

# உச்சி வெயில் (திரைப்படமாகவும் வந்தது)
# உச்சி வெயில்
====== நாடகங்கள் ======
====== நாடகங்கள் ======
# மழை (மூலக்கதை: நிலம் என்னும் நல்லாள் நாவல்)

Line 89: Line 87:
# வீடு
# வீடு
====== மொழிபெயர்ப்புகள் ======
====== மொழிபெயர்ப்புகள் ======
இவருடைய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாகும்.
இந்திரா பார்த்தசாரதி எழுதிய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாகும்.
====== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் ======

இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால்.  

Revision as of 22:40, 28 November 2022

To read the article in English: Indira Parthasarathy. ‎

இந்திரா பார்த்தசாரதி.jpg

இந்திரா பார்த்தசாரதி (இ.பா.) (ஜூலை 10, 1930) தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். குருதிப்புனல் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். சாகித்ய அகாதமியின் ஃபெல்லோவாக இருக்கிறார். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர்.

இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை. அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர வாழ்வினை சித்தரிப்பவை.

பிறப்பு, இளமை

இயற்பெயர் பார்த்தசாரதி. ஜூலை 10, 1930-ல் சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது. தி.ஜானகிராமன் இவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952-ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். சில ஆண்டுகள் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஸா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக (visiting professor) பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிடைத்தது. இ. பா.வின் தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்துதான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கை கூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைபெயரின் முதல் பகுதியான இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.

இலக்கிய பங்களிப்பு

சிறுகதைகள்

தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை அது.

முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை 'மனித எந்திரம்'. 1964-ல் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.

"சிறுகதையின் வடிவம் அந்தந்த படைப்பாளியின் உள்மனத் தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளை பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.

நாவல்கள்

இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாவல் 'காலவெள்ளம்' 1968-ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புகளைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடையே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும். இந்திரா பார்த்தசாரதி டெல்லியில் குடியேறிய பின் அங்குள்ள அரசியல் சூழலை பகடியாக சித்தரித்து எழுதிய சுதந்திரபூமி, தந்திரபூமி ஆகிய நாவல்கள் அவருக்கு புகழ்தேடித் தந்தவை.

குருதிப்புனல்

இந்திரா பார்த்தசாரதியின் சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா.வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவும் படைப்பு.

கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பண்புகளை வெறும் புறவய காரணியான பொருளாதாரம் மட்டுமே நிர்ணயிப்பதில்லை; பண்பாடு, தொன்மம் போன்ற அகவயக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிப்பதை இந்நாவல் விவாதித்தது.

நாடகங்கள்

நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர் இ.பா. இ.பா.வின் முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். போர்வை போர்த்திய உடல்கள் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் முதன்மையானது. இது இருத்தலியல் பார்வையை முன்வைக்கும் நாடகம். அவசரநிலைக் காலத்துப் பின்னணியில் வெளிவந்தமையால் இந்நாடகம் பெரிதும் விவாதிக்கப்பட்டது

டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கை இந்திரா பார்த்தசாரதியின் பெரும்பாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதை விட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஔரங்கசீப் மற்றும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் புகழ்பெற்றவை.

டில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராக பொறுப்பேற்று அங்கே நாடகத்துறை ஒன்று உருவாகக் காரணமாக இருந்தார்.

இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமாநுஜர் நாடகத்துக்கு 'சரஸ்வதி சம்மான்’ விருது வழங்கப்பட்டது.

இலக்கிய இடம்

பெருநகர் வாழ்க்கையின் அடையாளமாக உள்ள அதிகாரச் சிடுக்குகள், ஆடம்பரங்களின் விளையாட்டுகள், அறிவார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை தமிழில் முன் வைத்தவர் இந்திரா பார்த்தசாரதி. அதிகாரத்தை நேரடியாகக் கையாளும் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகள் மற்றும் அவ்வதிகாரத்தின் பகுதியாகவும் அதே சமயம் அடிமையாகவும் இருந்து அதை ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் குமாஸ்தா வர்க்கம் என்ற இரு சாராரின் மனத்திரிபுகளையும் நுட்பமான கிண்டல் வழியாக சித்தரிப்பவை இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள். ஆரம்ப கட்ட நாவல்களான தந்திரபூமி, சுதந்திரபூமி போன்றவை மிகச் சிறந்த உதாரணங்கள்.

மனிதர்களின் பாவனைகளை அதிகமாகச் சொன்னவர் இந்திரா பார்த்தசாரதி. உணர்ச்சியற்ற அறிவார்ந்த ஆய்வு நோக்கு கொண்ட பார்வை அது. ஆகவே அவரது புனைவுகள் ஃப்ராய்டிய உளவியலுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தன. கதை மாந்தரின் உளவியலை கதைக்குள்ளேயே அலசிச் செல்லும் எழுத்துமுறை இந்திரா பார்த்தசாரதி கடைப்பிடித்தது.

எழுபதுகளில் மெல்ல இந்திரா பார்த்தசாரதி இருத்தலியல் சிந்தனைகளை நோக்கிச் சென்றார். அறிவார்ந்த அங்கதம் மெல்ல அர்த்தமின்மை என்னும் தரிசனம் நோக்கிச் சென்றது. இந்திரா பார்த்தசாரதி இந்தக் காலகட்டத்தில் இதற்கான சிறந்த வடிவமாக நாடகத்தை தேர்வுசெய்தார்.. தமிழ் நவீன நாடகத்தின் மூலவர்களில் ஒருவராக இந்திரா பார்த்தசாரதி கருதப்படுவது இந்நாடகங்கள் வழியாகவே. குறிப்பாக போர்வை போர்த்திய உடல்கள் தமிழின் மிகச் சிறந்த யதார்த்த நாடகம் என அன்றும் இன்றும் கருதப்படுகிறது.

இந்திரா பார்த்தசாரதியின் பிற்கால நாவல்கள் நம் அரசியலின் அறவீழ்ச்சியை நோக்கிய அங்கதம் கொண்டவை. மாயமான் வேட்டை, வேதபுரத்து வியாபாரிகள் போன்றவை அவாது அங்கத தரிசனத்தின் உதாரணங்கள்.

விருதுகள்

  1. சாகித்ய அகாடமி விருது ( குருதிப்புனல் நாவல் )
  2. சரஸ்வதி சம்மான் விருது (ராமானுஜர் நாடகம்)
  3. சங்கீத் நாடக அகாடமி விருது
  4. பாரதிய பாஷா பரிஷத்
  5. பத்மஸ்ரீ விருது (2010)
  6. தி இந்து லிட் ஃபார் லைஃப் - வாழ்நாள் சாதனையாளர் விருது
  7. சாகித்ய அகாடமி ஃபெல்லோஷிப்

படைப்புகள்

சிறுகதைகள்

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புகளாக இவை வெளியிடப்பட்டுள்ளன.

நாவல்கள்
  1. கால வெள்ளம் (1968)
  2. ஆகாசத் தாமரை
  3. மாயமான் வேட்டை
  4. தந்திர பூமி
  5. திரைகளுக்கு அப்பால்
  6. சத்திய சோதனை
  7. குருதிப்புனல்
  8. கிருஷ்ணா கிருஷ்ணா
  9. வேதபுரத்து வியாபாரிகள்
  10. சுதந்திர பூமி
  11. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
  12. காலவெள்ளம்
  13. வேர்ப்பற்று
  14. வெந்து தணிந்த காடுகள்
  15. அக்னி
  16. தீவுகள்
  17. ஏசுவின் தோழர்கள்
  18. நிலம் என்னும் நல்லாள் (மழை என்ற நாடகத்தின் மூலக்கதை)
  19. உச்சி வெயில்
நாடகங்கள்
  1. மழை (மூலக்கதை: நிலம் என்னும் நல்லாள் நாவல்)
  2. போர்வை போர்த்திய உடல்கள்
  3. கால யந்திரங்கள்
  4. நந்தன் கதை
  5. கொங்கைத் தீ
  6. ஔரங்கசீப்
  7. ராமாநுஜர்
  8. இறுதி ஆட்டம்
  9. சூறாவளி
  10. பசி
  11. கோயில்
  12. தர்மம்
  13. நட்டக்கல்
  14. புனரபி ஜனனம், புனரபி மரணம்
  15. வீடு
மொழிபெயர்ப்புகள்

இந்திரா பார்த்தசாரதி எழுதிய இறுதி ஆட்டம் மற்றும் சூறாவளி எனும் நாடகங்கள் முறையே ஷேக்ஸ்பியரின் King Lear மற்றும் The Tempest எனும் நாடகங்களின் தழுவலாகும்.

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

இவருடைய பெரும்பாலான நாடகங்கள் டில்லியில் இயங்கி வந்த Enact பத்திரிக்கையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாடகங்களுக்காகவே நடத்தப்பட்ட இப்பத்திரிக்கையை நடத்தியவரின் பெயர் ராஜேந்திரபால்.

பின்வரும் நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

  1. கிருஷ்ணா கிருஷ்ணா - இ.பா. வே மொழி பெயர்த்திருக்கிறார்.
  2. குருதிப்புனல் - 'River of Blood' என க.நா.சு
  3. திரைகளுக்கு அப்பால் - 'Through the veils' என லட்சுமி கண்ணன்

உசாத்துணை

✅Finalised Page