அரும்பத உரையாசிரியர்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 16: | Line 16: | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category: Tamil | [[Category: Tamil Content]] |
Revision as of 08:48, 28 November 2022
அரும்பத உரையாசிரியர் சிலப்பதிகாரத்திற்கு முதன்முதலில் உரை எழுதியவர். அவரது உரையைப் பெரிதும் பின்பற்றியே பின்வந்த உரைகள் எழுதப்பட்டன.
வாழ்க்கைக் குறிப்பு
அரும்பத உரையாசிரியரின் இயற்பெயர் தெரியவரவில்லை. இவரது உரையில் அரும் பதங்கள் பலவற்றுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவரது பெயர் 'அரும்பத உரையாசிரியர்' என வழங்கப்பட்டு வருகிறது.
பெயர்க்காரணம்
செய்யுளில் காணப்படும் அரிய சொற்களுக்கு மட்டும் விளக்கம் தரும் உரை ‘அரும்பதவுரை’ எனப்படும். இந்த வகையில் மிகப் பழைய அரும்பதவுரை சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்டுள்ள உரையாகும். எனவே 'அரும்பதவுரை' இந்தச் சிலப்பதிகார அரும்பதவுரையைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாக மாறிவிட்டது.
உரை
சிலப்பதிகாரத்திற்கு ழுதப்பட்ட பழமையான உரைகள் மூன்று. அவற்றுள் 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அடியார்க்கு நல்லார் உரையில் அரும்பத உரை பல இடங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. அரும்பதவுரையில் அதற்கும் முந்தைய உரை மேற்கோள் காட்டப்படுகிறது. அவ்வுரையிம் சிறு பகுதியும் கிடைக்கவில்லை.
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார் நாடகம் பற்றிய ஒவ்வொரு தொடருக்கும் அரும்பதவுரையை மேற்கோள் காட்டியே உரை எழுதுகிறார். இதனால் தமிழிசை பற்றிய பழமையான சான்றுகள் அரும்பதவுரையில் உள்ளன எனத் தெரிகிறது.
சிறப்புகள்
"இவ்வுரை அரும்பதவுரை மட்டுமன்று. வினைமுடிபு காட்டுதல், பொருள் தொடர்பு காட்டுதல், அரங்கேற்றுக் காதையிலும் கானல் வரியிலும் இன்று அடியார்க்கு நல்லார் உரை இல்லாத பிற பகுதிகளிலும் பேருரையும் பெருவிளக்கமும் கூறுதல், மேற்கோள் தருதல் முதலிய பகுதிகளைப் பார்க்கும்போது, இவ்வுரை அரும்பதவுரை அன்று, அரிய உரை என்றே கருதத் தோன்றும். சில இடங்களில் விரிவான பொழிப்புரையே கூறியிருக்கிறார். (3:26: 36 பார்க்க); இதைத் தொடர்ந்து அரும்பதவுரை மட்டுமல்லாமல் விளக்கவுரையே கூறிவருகிறார். இவற்றால் இவர் மிக்க விரிவு பெற்ற உரை எழுதவல்ல முத்தமிழாசிரியர் என்பது நன்கு விளங்கும். எங்ஙனம் இளங்கோவடிகள் முத்தமிழ்ப் புலமை வாய்ந்த பேராசிரியரும் பெரும்புலவருமாவாரோ, அப்படியே இவ்வரும்பதவுரை எழுதிய உரைகாரரும் முத்தமிழ்ப் புலமை பெற்றிருந்தமை இளங்கோவடிகள் நூல்செய்த பாக்கியம்" என்று மு.அருணாசலம் குறிப்பிடுகிறார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.