under review

பிரயாகை (வெண்முரசு நாவலின் ஐந்தாம் பகுதி): Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
No edit summary
 
Line 1: Line 1:
[[File:51Qmr33tGeL.jpg|thumb|பிரயாகை ('வெண்முரசு' நாவலின் ஐந்தாம் பகுதி)]]
[[File:51Qmr33tGeL.jpg|thumb|பிரயாகை ('வெண்முரசு' நாவலின் ஐந்தாம் பகுதி)]]
பிரயாகை<ref>[https://venmurasu.in/prayagai/chapter-1 வெண்முரசு - பிரயாகை - 1 - வெண்முரசு (venmurasu.in)]</ref> ('[[வெண்முரசு]]' நாவலின் ஐந்தாம் பகுதி) துரோணர் தன் சீடர்களிடம் குருதட்சிணை கேட்பதில் தொடங்குகிறது. அவர் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று, சிறைப் பிடிக்கின்றனர். இளைய யாதவர் (ஸ்ரீகிருஷ்ணர்) தன் நாட்டினை மீட்பதற்காக தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறார். துருபதன் தவம் இயற்றி திரௌபதியைப் பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக் கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகையை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பிச்செல்லும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் நுழைகின்றனர். அங்குப் பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியைப் பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் 'பிரயாகை' நிறைவுறுகிறது.  
பிரயாகை<ref>[https://venmurasu.in/prayagai/chapter-1 வெண்முரசு - பிரயாகை - 1 - வெண்முரசு (venmurasu.in)]</ref> ('[[வெண்முரசு]]' நாவலின் ஐந்தாம் பகுதி) துரோணர் தன் சீடர்களிடம் குருதட்சிணை கேட்பதில் தொடங்குகிறது. அவர் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று, சிறைப் பிடிக்கின்றனர். இளைய யாதவர் (ஸ்ரீகிருஷ்ணர்) தன் நாட்டினை மீட்பதற்காக தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறார். துருபதன் தவம் இயற்றி திரௌபதியைப் பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக் கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகையை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பிச்செல்லும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் நுழைகின்றனர். அங்குப் பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியைப் பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் 'பிரயாகை' நிறைவுறுகிறது.  
Line 31: Line 30:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />


{{Finalised}}
{{Finalised}}


{{Fndt|24-Dec-2022, 08:38:33 IST}}
{{Fndt|24-Dec-2022, 08:38:33 IST}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:40, 12 October 2026

பிரயாகை ('வெண்முரசு' நாவலின் ஐந்தாம் பகுதி)

பிரயாகை[1] ('வெண்முரசு' நாவலின் ஐந்தாம் பகுதி) துரோணர் தன் சீடர்களிடம் குருதட்சிணை கேட்பதில் தொடங்குகிறது. அவர் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று, சிறைப் பிடிக்கின்றனர். இளைய யாதவர் (ஸ்ரீகிருஷ்ணர்) தன் நாட்டினை மீட்பதற்காக தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறார். துருபதன் தவம் இயற்றி திரௌபதியைப் பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக் கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகையை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பிச்செல்லும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் நுழைகின்றனர். அங்குப் பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியைப் பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் 'பிரயாகை' நிறைவுறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு' நாவலின் ஐந்தாம் பகுதியான 'பிரயாகை' எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் அக்டோபர் 2014 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜனவரி 2015-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் பிரயாகையை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

'வெண்முரசு' நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

இளைய யாதவர் (ஸ்ரீகிருஷ்ணர்), பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை என பேராற்றல் மிக்கவர்கள் தம்மைத் தாமே வெளிப்படுத்திக்கொள்ளும் இடமாகவும் தம்மை ஒத்த பிறரின் வலிமையை உணர்ந்துகொள்ளும் இடமாகவும் 'பிரயாகை' நாவல் அமைந்துள்ளது.

துரோணர் கேட்கும் குருதட்சணையை வழங்குவதற்கான பாண்டவர்கள் களம் இறங்கிய முதற்போரில் பாண்டவர்கள் சென்று கௌரவர்களைக் காப்பாற்றுவதன் வழியாக அவர்கள் கௌரவர்களையும் துருபதனையும் வெல்வதும், போரில் துருபதனை வென்றவுடன் யார் சொல்லுக்கும் செவிமடுக்காமல், அவனைத் தன் தேர்ச்சக்கரத்தில் கட்டி இழுத்து அர்ஜுனன் இழுத்து வருவதும், பாண்டவர்கள் சௌவீரநாட்டு மன்னனை வென்று அவனுடைய மணிமுடியை குந்தியின் தலையில் சூட்டி மகிழ்தலும் பிரயாகையில் விரிவான சம்பவங்களாகப் பேசப்படுகின்றன. இளைய யாதவருக்கும் குந்திக்கும் இடையே நிகழும் உரையாடல்கள், இளைய யாதவருக்கும் விதுரருக்கும் இடையில் நிகழும் முதல் சொல்லுரசல், இளைய யாதவரின் படைவியூகத்திறமை, அவர் தன்னுடைய தொடர்ச்சியான திட்டங்களால் மிகத் திறமையாகவும் விரைவாகவும் மதுராவை வெற்றிகொள்தல் என இளைய யாதவரின் அரசியல் நுழைவும் பிரயாகையில் விரிவாகப் பேசப்படுகிறது.

பீமனுக்கும் இடும்பனுக்கும் இடையே நடக்கும் கடும் தனிப்போர், பீமன் இடும்பியை மணப்பது, கடோத்கஜனின் குழந்தைப் பருவமும் , வளர்ச்சியும் என பாண்டவர்கள் மணவாழ்வின் துவக்கம் பிரயாகையில் காட்டப்படுகிறது. கர்ணனின் முதற்போரைக் கண்டு அவனைத் தன் மனத்தளவில் வியக்கும் அர்ஜுனன், தொடர்ந்து யாதவர்களை விரட்டியடிக்கும் ஏகலவ்யனின் வீரமும் ஆட்சியாளுமையும் பிரயாகை நாவலில் காட்டப்படுகின்றன.

குந்தியிடம் குடிகொண்டுவிடும் பேரரசிக்குரிய தோரணை, திரௌபதையின் நிமிர்வு. அம்பெய்து ஐந்து மரப்பறவைகளையும் வீழ்த்தி, திரௌபதையை அடையும் அர்ஜூனன். இந்தக் காட்சிகளின் சித்தரிப்புகள் வழியாக நாவல் இளைய யாதவர், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை ஆகியோரின் அக, புற வலிமைகளை விவரிக்கிறது.

துரோணரின் வஞ்சத்தை நேரில்கண்டு அவரிடம் மெல்லிய விலக்கம் அடைவது, விற்திறனால் திரெளபதியின் மணத்தன்னேற்பில் வெல்வது என அர்ஜுனன் அடையும் மாற்றங்களும் பிரயாகையில் பேசப்படுகின்றன. சூதால் பெருகிய சொல்லாற்றல் கொண்ட கணிகர் சகுனியின் 'சிந்தனைத்துணை'யாக அமைவது பிரயாகையில் விவரிக்கப்படுகிறது.

துரியோதனன் பலராமரிடம் போர்க்கலை பயிலச் செல்வதும் கர்ணன் பரசுராமரிடம் போர்க்கலை பயிலச் செல்வதும் அந்த சூழலின்போது நிகழ்பவையும் நாவலில் விரிவாகக் காட்டப்படுகின்றன.

பேராற்றல் நிறைந்தவர்களுக்கும் அவர்தம் போட்டியாளர்களுக்குமிடையே இடையில் நிகழும் நிலைப்பாடுகளுக்கான களங்களும், சம்பவங்களுமாக 'பிரயாகை' விரிந்துள்ளது.

கதை மாந்தர்

இளைய யாதவர், பீமன், கர்ணன், ஏகலவ்யன், இடும்பி, கடோத்கஜன், குந்தி, திரௌபதை ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் துரோணர், சகுனி, விதுரர், இடும்பன், காந்தாரி, துரியோதனன், துச்சாதனன், பலராமர், பரசுராமர் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2022, 08:38:33 IST