கோப்பெருஞ்சோழன்: Difference between revisions
(Corrected typo errors;) |
(Normalized selected wikitext line breaks;) |
||
| Line 16: | Line 16: | ||
== பாடல்வழி அறியவரும் செய்திகள் == | == பாடல்வழி அறியவரும் செய்திகள் == | ||
===== குறுந்தொகை ===== | ===== குறுந்தொகை ===== | ||
* கரிய கடலின் நடுவே எட்டாம் நாளில் இளமையான பிறைமதி தோன்றியதைப் போல் ஒருபெண்ணின் கூந்தலுக்கு அருகில் விளங்கும் சிறிய நெற்றி புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப் போல் என்னைக் கட்டிப் போட்டுவிட்டது என கோப்பெருஞ்சோழன் பாடினார். | * கரிய கடலின் நடுவே எட்டாம் நாளில் இளமையான பிறைமதி தோன்றியதைப் போல் ஒருபெண்ணின் கூந்தலுக்கு அருகில் விளங்கும் சிறிய நெற்றி புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப் போல் என்னைக் கட்டிப் போட்டுவிட்டது என கோப்பெருஞ்சோழன் பாடினார். | ||
* "அருளையும் அன்பையும் துறந்து, தம் துணைவியைப் பிரிந்து, பொருள் தேடும் பொருட்டு, சென்ற நம் தலைவர். அந்த ஆற்றலை உடைய அவர் அறிவுடையவராகவே இருக்கட்டும். அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம், அறிவில்லாதவர்களாகவே இருப்போம்" என தலைவி சொல்வதாக பாடல் அமைந்துள்ளது. | * "அருளையும் அன்பையும் துறந்து, தம் துணைவியைப் பிரிந்து, பொருள் தேடும் பொருட்டு, சென்ற நம் தலைவர். அந்த ஆற்றலை உடைய அவர் அறிவுடையவராகவே இருக்கட்டும். அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம், அறிவில்லாதவர்களாகவே இருப்போம்" என தலைவி சொல்வதாக பாடல் அமைந்துள்ளது. | ||
===== புறநானூறு ===== | ===== புறநானூறு ===== | ||
* "நல்வினை நம்மாலும் செய்யமுடியுமா என்று ஐயப்பட்டுக்கொண்டே வாழ்பவர் நெஞ்சத்தில் துணிவு இல்லாத கோழைகள். மிகப் பெரிய விலங்காகிய யானை வேட்டைக்குச் சென்றவன் அதனைப் பெறவும் முடியும். குறும்பூழ் என்னும் சிறிய பறவையை வேட்டையாடச் சென்றவன் வேறுங்கையோடு திரும்புதலும் உண்டு. அதனால் உயர்ந்ததை உள்ளி ஊக்கம் கொள்ளவேண்டும். அவர்களின் முயற்சியால் அது அவருக்குக் கைகூடும். அதனால் அவருக்கு அடைவதற்கு அரிய உலகின்பத்தைத் துய்க்கும் பேறு கிட்டும். அது கிடாக்காவிட்டால் மறுபிறவி இல்லாத பேறாவது கிடைக்கும். நல்ல பிறவி கிட்டாமல் போனாலும், இமயத்தில் பறக்கும் கொடி போல அனைவருக்கும் தெரியும் புகழோடு இந்த உலகில் வாழும் பேறு பெறுதல் உறுதி. எனவே நல்லனவற்றை உறுதிப்பாட்டோடு செய்தல் வேண்டும்" என கோப்பெருஞ்சோழன் தான் கண்ட மெய்மையைக் கூறினார். | * "நல்வினை நம்மாலும் செய்யமுடியுமா என்று ஐயப்பட்டுக்கொண்டே வாழ்பவர் நெஞ்சத்தில் துணிவு இல்லாத கோழைகள். மிகப் பெரிய விலங்காகிய யானை வேட்டைக்குச் சென்றவன் அதனைப் பெறவும் முடியும். குறும்பூழ் என்னும் சிறிய பறவையை வேட்டையாடச் சென்றவன் வேறுங்கையோடு திரும்புதலும் உண்டு. அதனால் உயர்ந்ததை உள்ளி ஊக்கம் கொள்ளவேண்டும். அவர்களின் முயற்சியால் அது அவருக்குக் கைகூடும். அதனால் அவருக்கு அடைவதற்கு அரிய உலகின்பத்தைத் துய்க்கும் பேறு கிட்டும். அது கிடாக்காவிட்டால் மறுபிறவி இல்லாத பேறாவது கிடைக்கும். நல்ல பிறவி கிட்டாமல் போனாலும், இமயத்தில் பறக்கும் கொடி போல அனைவருக்கும் தெரியும் புகழோடு இந்த உலகில் வாழும் பேறு பெறுதல் உறுதி. எனவே நல்லனவற்றை உறுதிப்பாட்டோடு செய்தல் வேண்டும்" என கோப்பெருஞ்சோழன் தான் கண்ட மெய்மையைக் கூறினார். | ||
Revision as of 23:54, 11 October 2026
To read the article in English: Kopperuncholan.
கோப்பெருஞ்சோழன் சோழ மன்னர், சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். கோப்பெருஞ்சோழன் எழுதிய ஏழு பாடல்கள் சங்க நூல்களான குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன.
வாழ்க்கைக் குறிப்பு
கோப்பெருஞ்சோழன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர். பிசிராந்தையார் இவரின் நெருங்கிய நண்பர். புலவர்களையும், பாணர்களையும் ஆதரித்த வள்ளல்.
இலக்கிய வாழ்க்கை
கோப்பெருஞ்சோழன் எழுதிய ஏழு பாடல்கள் சங்க நூல்களான குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன. இவர் வடக்கிருந்து உயிர் நீத்தபோது கையறுநிலையுடன் பொத்தியார் பாடிய பாடல்கள் புறநானூற்றில்(217, 220, 221, 222, 223) ஐந்து பாடல்களாக உள்ளன.
இலக்கிய நண்பர்கள்
- பிசிராந்தையார்
- பொத்தியார்
- கண்ணகனார்
- புல்லாற்றூர் எயிற்றியனார்
- கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்
பாடல்வழி அறியவரும் செய்திகள்
குறுந்தொகை
- கரிய கடலின் நடுவே எட்டாம் நாளில் இளமையான பிறைமதி தோன்றியதைப் போல் ஒருபெண்ணின் கூந்தலுக்கு அருகில் விளங்கும் சிறிய நெற்றி புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப் போல் என்னைக் கட்டிப் போட்டுவிட்டது என கோப்பெருஞ்சோழன் பாடினார்.
- "அருளையும் அன்பையும் துறந்து, தம் துணைவியைப் பிரிந்து, பொருள் தேடும் பொருட்டு, சென்ற நம் தலைவர். அந்த ஆற்றலை உடைய அவர் அறிவுடையவராகவே இருக்கட்டும். அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம், அறிவில்லாதவர்களாகவே இருப்போம்" என தலைவி சொல்வதாக பாடல் அமைந்துள்ளது.
புறநானூறு
- "நல்வினை நம்மாலும் செய்யமுடியுமா என்று ஐயப்பட்டுக்கொண்டே வாழ்பவர் நெஞ்சத்தில் துணிவு இல்லாத கோழைகள். மிகப் பெரிய விலங்காகிய யானை வேட்டைக்குச் சென்றவன் அதனைப் பெறவும் முடியும். குறும்பூழ் என்னும் சிறிய பறவையை வேட்டையாடச் சென்றவன் வேறுங்கையோடு திரும்புதலும் உண்டு. அதனால் உயர்ந்ததை உள்ளி ஊக்கம் கொள்ளவேண்டும். அவர்களின் முயற்சியால் அது அவருக்குக் கைகூடும். அதனால் அவருக்கு அடைவதற்கு அரிய உலகின்பத்தைத் துய்க்கும் பேறு கிட்டும். அது கிடாக்காவிட்டால் மறுபிறவி இல்லாத பேறாவது கிடைக்கும். நல்ல பிறவி கிட்டாமல் போனாலும், இமயத்தில் பறக்கும் கொடி போல அனைவருக்கும் தெரியும் புகழோடு இந்த உலகில் வாழும் பேறு பெறுதல் உறுதி. எனவே நல்லனவற்றை உறுதிப்பாட்டோடு செய்தல் வேண்டும்" என கோப்பெருஞ்சோழன் தான் கண்ட மெய்மையைக் கூறினார்.
- பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனின் நெருங்கிய நண்பர். அவர் பிசிர் எனும் ஊரில் வாழ்ந்தார். இது பொதிய மலையால் சிறப்புபெற்ற பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஊர். அவரை அதிகம் விளையும் ஊர். மக்கள் ஆயர் மகளிர் தரும் புளித்த தயிரை வரகுச் சோற்றில் பிசைந்து வேளைக் கீரைப் பொறியலோடு உண்டு அவரை கொய்வர்.
மறைவு
கோப்பெருஞ்சோழனின் பிள்ளைகளே இவருக்கு எதிராக போர் தொடுக்க முனைந்ததால் அந்தப் பழிச்செயலுக்கு நாணி வடக்கிருந்து உயிர் நீத்தார். இவருடன் பொத்தியார் என்ற புலவரும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.
பாடல் நடை
- குறுந்தொகை: 129
(திணை: குறிஞ்சி) (கூற்று: தலைமகன் பாங்கற்கு உரைத்தது)
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளா யத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே.
- குறுந்தொகை: 20
(திணை: பாலை) (தலைவி கூற்று)
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
- புறநானூறு 215
(திணை: பாடாண்) (துறை: இயன்மொழி)
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன் மன்னே.
- புறநானூறு 214
(திணை: பொதுவியல்) (துறை: பொருண்மொழிக் காஞ்சி)
செய்குவம் கொல்லோ நல்வினை!எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே,
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் - திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3
- தமிழ் இணைய கல்விக்கழகம்- புறநானூறு-222-
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:33:05 IST