கமலாக்ஷி சரித்திரம்: Difference between revisions

From Tamil Wiki
Line 12: Line 12:
உயர்ந்த ஒழுக்கம் கற்பிக்கும் கதையமைந்ததாய் எளிய இனிய தமிழ்நடையில் எழுதப்பட்டு நல்லுணர்வுடைய பண்டிதர்க்கும் நல்லுணர்வை நாடும் பாமரர்க்கும் ஸ்திரீ புருஷர் இருபாலர்க்கும் இனிமை பயந்து பயன்படுவதாகின்றது. கதையை வாசித்தறிவோர் அது பல தலைப்பட்டு இறுதி யத்தியாயத்தில் வந்து முடிபெய்தும் மாட்சியையும் நிகழும் விஷயங்கள் ஒவ்வொன்றும் தமிழ்க் குடும்பங்களில் நிகழத் தக்கவைகளேயென்னும் உண்மையினையும் வியவாமற்போகார்....நவீன நூல்களுள் இதனை யொத்தன இன்னும் ஒன்றிரண்டுக்கு மேற் காண்டலரிது.”

== மதிப்பீடு ==
....‘உயர்மதிகூடலினாய்ந்த பெண்டீந்தமிழ்’ என்று ஸ்ரீமணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளும் அருமை வாய்ந்த தமிழ்ப்பாஷையிலே அறம்பொருளின்பம் வீடென்னும் புருஷார்த்தங்கள் நான்கினையும் நம்மனோ ஸ்தூலத்திற்குச் சாதகமாயுள்ள நூல்கள் அளவிறந்திருக்கினும். மாயை வயப்பட்ட மானிட மனோதத்துவ இலட்சணம் இனைத்தென்பதையும் நல்லொழுக்கத்தால் விளையுமின்பம் இஃதென்பதையும், கூடாவொழுக்கத்தால் நேரிடும் துன்பம் இத்திறத்ததென்பதையும் எளிய வசன நடையில் கதா ரூபமாக அஸம்பாவிதமான கற்பனாம்சங்களை ஒழித்துக் கூறும் நூல்கள் மிகச் சிறுபான்மையே யாதலின் ஸ்ரீமான் தி. ம. பொன்னுசாமிப் பிள்ளை யவர்களியற்றிய '''கமலாக்ஷி''' என்னும் இந்நூல் தமிழராம் இரு பாலார்க்கும் அமுதுபோலினித்து நற்பயன் நல்க வல்லதென்பது திண்ணம்.” -தண்டலம் பாலசுந்தர முதலியார்.
 
== இலக்கிய இடம் ==
கமலாக்ஷி தமிழில் எழுதப்பட்ட முதல் வணிகக் கேளிக்கை எழுத்து என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. தொடக்ககால நவீன இலக்கியப் படைப்புகளில் இருந்த வாழ்க்கையின் யதார்த்தத்திற்கு பதிலாக ஆசிரியர் நிகழ்வுகளை உருவாக்கி, அவற்றை திறம்படப் பின்னிப் பின்னிச் செல்லும் கதைமுறை இதில் கையாளப்பட்டது. பின்னாளில் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] முதலிய படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தது இந்த எழுத்துமுறை. 
 
[[க.நா.சுப்ரமணியம்|க.நா.சு]] அவருடைய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் என்னும் நூலில் இதை இவ்வாறு மதிப்பிடுகிறார்.
 
''சம்பவங்களைப் பின்னி ஒழுங்கு படுத்துவதில் தமிழ் நாவல் இலக்கியத்தை வளப்படுத்துவதில் முதல் முதலாகப் பொன்னுசாமிப்பிள்ளை தான் ஊக்கம் காட்டினார் என்று சொல்ல வேண்டும். மாதவையாவும், ராஜமையரும் வேதநாயகம் பிள்ளையும், நடேச சாஸ்திரியாரும் நேராகவே கதை சொல்ல விரும்பினார்கள். தமிழ் நாவல் பொன்னுசாமிப் பிள்ளையின் கையில் சிடுக்கில்லாத பின்னலாக மாறிற்று; அழகான பின்னலாக மாறிற்று. நாவல் எழுதித் தேறத் தேற அவர் கை இந்தப் பின்னல் வேலையில் பிரமாதமான தேர்ச்சி பெற்றது. கமலாக்ஷியைவிட ஞானாம்பிகையில் இந்தப் பின்னல் வேலை அபூர்வமாக அமைந்துவிட்டது. எனினும் கமலாக்ஷியிலும் பின்னல் சிறப்பாகவே இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.''
 
இருபதாம் நூற்றாண்டின்தொடக்ககால நாவல் என்ற வகையில் அன்றைய வாழ்க்கைச் சூழலையும் மனநிலைகளையும் முன்வைக்கும் நாவலாக இதை மதிப்பிடலாம்.
 
க.நா.சு  எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் எனும் நூலில் இதை இவ்வாறு மதிப்பிடுகிறார்.
 
''பொன்னுசாமிப் பிள்ளையின் நாவலைப் படிக்கும்போது அந்த நாட்களின் வாழ்க்கை வளம் நமக்கு ஓரளவுக்குத் தெரிகிறது; ஓரளவுக்கு என்று சொல்வதுதான் நியாயம். ஏனென்றால் கதை சுவாரஸ்யமாக ஓட வேண்டுமே என்பதற்காகச்சில விஷயங்களை அவர் சற்று அதிகப்படுத்தியே எழுதிவந்திருக்கிறார் என்று எண்ண வேண்டியதாக இருக்கிறது.''

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 22:12, 3 June 2026

கமலாக்ஷி சரித்திரம்
கமலாக்ஷி சரித்திரம். பழைய ஓவியம்
கமலாட்சி சரித்திரம் பரிசல்வெளியீடு 2026

கமலாக்ஷி சரித்திரம் (கமலாக்ஷி. கமலாட்சி சரித்திரம்) தமிழிலக்கியத்தின் நான்காவது நாவலாகக் கருதப்படுகிறது. தி.ம.பொன்னுசாமிப் பிள்ளை இந்நாவலின் ஆசிரியர்.

வெளியீடு

தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளை இந்நூலின் ஆசிரியர். 1903ல் சென்னை மினெர்வா அச்சகத்தில் இந்நூல் அச்சிடப்பட்டு ஆசிரியராலேயே வெளியிடப்பட்டது. ல் இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளியாகியது. கால சுப்ரமணியம் பதிப்புரையுடன் பரிசல் பதிப்பக வெளியீடாக 2026ல் இந்நூலின் அண்மைக்கால பதிப்பு வெளியாகியது.

கதைச்சுருக்கம்

சமகாலக் கருத்துக்கள்

உயர்ந்த ஒழுக்கம் கற்பிக்கும் கதையமைந்ததாய் எளிய இனிய தமிழ்நடையில் எழுதப்பட்டு நல்லுணர்வுடைய பண்டிதர்க்கும் நல்லுணர்வை நாடும் பாமரர்க்கும் ஸ்திரீ புருஷர் இருபாலர்க்கும் இனிமை பயந்து பயன்படுவதாகின்றது. கதையை வாசித்தறிவோர் அது பல தலைப்பட்டு இறுதி யத்தியாயத்தில் வந்து முடிபெய்தும் மாட்சியையும் நிகழும் விஷயங்கள் ஒவ்வொன்றும் தமிழ்க் குடும்பங்களில் நிகழத் தக்கவைகளேயென்னும் உண்மையினையும் வியவாமற்போகார்....நவீன நூல்களுள் இதனை யொத்தன இன்னும் ஒன்றிரண்டுக்கு மேற் காண்டலரிது.”

....‘உயர்மதிகூடலினாய்ந்த பெண்டீந்தமிழ்’ என்று ஸ்ரீமணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளும் அருமை வாய்ந்த தமிழ்ப்பாஷையிலே அறம்பொருளின்பம் வீடென்னும் புருஷார்த்தங்கள் நான்கினையும் நம்மனோ ஸ்தூலத்திற்குச் சாதகமாயுள்ள நூல்கள் அளவிறந்திருக்கினும். மாயை வயப்பட்ட மானிட மனோதத்துவ இலட்சணம் இனைத்தென்பதையும் நல்லொழுக்கத்தால் விளையுமின்பம் இஃதென்பதையும், கூடாவொழுக்கத்தால் நேரிடும் துன்பம் இத்திறத்ததென்பதையும் எளிய வசன நடையில் கதா ரூபமாக அஸம்பாவிதமான கற்பனாம்சங்களை ஒழித்துக் கூறும் நூல்கள் மிகச் சிறுபான்மையே யாதலின் ஸ்ரீமான் தி. ம. பொன்னுசாமிப் பிள்ளை யவர்களியற்றிய கமலாக்ஷி என்னும் இந்நூல் தமிழராம் இரு பாலார்க்கும் அமுதுபோலினித்து நற்பயன் நல்க வல்லதென்பது திண்ணம்.” -தண்டலம் பாலசுந்தர முதலியார்.

இலக்கிய இடம்

கமலாக்ஷி தமிழில் எழுதப்பட்ட முதல் வணிகக் கேளிக்கை எழுத்து என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. தொடக்ககால நவீன இலக்கியப் படைப்புகளில் இருந்த வாழ்க்கையின் யதார்த்தத்திற்கு பதிலாக ஆசிரியர் நிகழ்வுகளை உருவாக்கி, அவற்றை திறம்படப் பின்னிப் பின்னிச் செல்லும் கதைமுறை இதில் கையாளப்பட்டது. பின்னாளில் கல்கி முதலிய படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தது இந்த எழுத்துமுறை.

க.நா.சு அவருடைய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் என்னும் நூலில் இதை இவ்வாறு மதிப்பிடுகிறார்.

சம்பவங்களைப் பின்னி ஒழுங்கு படுத்துவதில் தமிழ் நாவல் இலக்கியத்தை வளப்படுத்துவதில் முதல் முதலாகப் பொன்னுசாமிப்பிள்ளை தான் ஊக்கம் காட்டினார் என்று சொல்ல வேண்டும். மாதவையாவும், ராஜமையரும் வேதநாயகம் பிள்ளையும், நடேச சாஸ்திரியாரும் நேராகவே கதை சொல்ல விரும்பினார்கள். தமிழ் நாவல் பொன்னுசாமிப் பிள்ளையின் கையில் சிடுக்கில்லாத பின்னலாக மாறிற்று; அழகான பின்னலாக மாறிற்று. நாவல் எழுதித் தேறத் தேற அவர் கை இந்தப் பின்னல் வேலையில் பிரமாதமான தேர்ச்சி பெற்றது. கமலாக்ஷியைவிட ஞானாம்பிகையில் இந்தப் பின்னல் வேலை அபூர்வமாக அமைந்துவிட்டது. எனினும் கமலாக்ஷியிலும் பின்னல் சிறப்பாகவே இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின்தொடக்ககால நாவல் என்ற வகையில் அன்றைய வாழ்க்கைச் சூழலையும் மனநிலைகளையும் முன்வைக்கும் நாவலாக இதை மதிப்பிடலாம்.

க.நா.சு எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் எனும் நூலில் இதை இவ்வாறு மதிப்பிடுகிறார்.

பொன்னுசாமிப் பிள்ளையின் நாவலைப் படிக்கும்போது அந்த நாட்களின் வாழ்க்கை வளம் நமக்கு ஓரளவுக்குத் தெரிகிறது; ஓரளவுக்கு என்று சொல்வதுதான் நியாயம். ஏனென்றால் கதை சுவாரஸ்யமாக ஓட வேண்டுமே என்பதற்காகச்சில விஷயங்களை அவர் சற்று அதிகப்படுத்தியே எழுதிவந்திருக்கிறார் என்று எண்ண வேண்டியதாக இருக்கிறது.

உசாத்துணை