under review

மானசா பதிப்பகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
 
Line 21: Line 21:
*[https://www.jeyamohan.in/225359/ சென்னையில் ஓர் ஆங்கில வாசிப்புக் குழுமம்]
*[https://www.jeyamohan.in/225359/ சென்னையில் ஓர் ஆங்கில வாசிப்புக் குழுமம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|10-May-2026, 21:44:00 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 03:44, 11 May 2026

மானசா பதிப்பகம்

மானசா பதிப்பகம் (2025) பெண் படைப்பாளர்கள், பெண் மையப் படைப்புகள் சார்ந்த நூல்களை இந்திய அளவிவில் பதிப்பிக்கும் ஆங்கிலப் பதிப்பகம். சைதன்யா, கிருபாலட்சுமி இதன் நிறுவனர்கள்.

தொடக்கம்

மானசா பதிப்பகம் 2025-ல் சைதன்யா, கிருபாலட்சுமி ஆகியோரால் நிறுவப்பட்டது. அலுவலகம் சென்னை அடையாறில் உள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக எழுத்தாளர் ஜெயமோகன் தலைமையில் பெண்களுக்கான ஒரு நாவல் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதன் முதல் நூல் எழுத்தாளர் பாரததேவியின் நிலாக்கள் தூர தூரமாக என்ற தன் வரலாற்று நூலின் மொழிபெயர்ப்பு 'Moons Far Far Away' சைதன்யாவின் மொழியாக்கத்தில் வெளியானது.

நோக்கம்

மானசா பதிப்பகம் பெண் மையப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதையும், பெண்கள் ஆங்கிலத்தில் எழுதுவதையும் ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.

செயல்பாடுகள்

மானசா இலக்கிய விருது

மானசா பதிப்பகம் சார்பாக "மானசா இலக்கிய விருது" வருடம் தோறும் 2025 முதல் அளிக்கப்படுகிறது. இது நாவல் எழுதும் இளையர் (16-25 வயது) மற்றும் வயது வந்தோர் (26 வயதுக்கு மேல்) என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இது புதிய பெண் எழுத்தாளர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது. இது ஒரு லட்சம் பரிசுத் தொகை கொண்டது. வெற்றியாளர்களின் நாவல்கள் மானசா பதிப்பகத்தால் பதிப்பிக்கப்படுகிறது.

மானசா புக் கிளப்

மானசா பதிப்பகம் சார்பாக சென்னையில் புக் கிளப் ஒன்று உள்ளது. இதன் வழியாக இலக்கிய வாசிப்புக்கான மாதக் கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2026, 21:44:00 IST