under review

கிருபாலட்சுமி

From Tamil Wiki
கிருபாலட்சுமி.jpg

கிருபாலட்சுமி (பிறப்பு: ஜூலை 11, 1994) பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர். மானசா பதிப்பகத்தின் நிறுவனர்களில் ஒருவர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்.

பிறப்பு, கல்வி

கிருபாலட்சுமி தமிழ்நாட்டின் சென்னையில் கிருஷ்ணன், தங்கம் புவனா இணையருக்கு மூத்த மகளாக ஜூலை 11, 1994-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தம்பி. வேளச்சேரியில் உள்ள டி.ஏ.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வி வரை பயின்றார். வேளச்சேரி எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயின்றார். அண்ணா ஆதர்ஷ் வித்யாலயம் பெண்கள் கல்லூரியில் கணினியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கிருபாலட்சுமி எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி. நவினை பிப்ரவரி 6, 2022 அன்று திருமணம் செய்துக் கொண்டார். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பணிபுரிந்து வருகிறார். மகள் மானசா.

பதிப்புப்பணி

கிருபாலட்சுமி மானசா பதிப்பகம் என்னும் பெண்களுக்கான ஆங்கிலப் பதிப்பகத்தை தன் தோழி சைதன்யாவுடன் இணைந்து நடத்தி வருகிறார். இது பெண் மையப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதையும், பெண்கள் ஆங்கிலத்தில் எழுதுவதையும் ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.

மானசா பதிப்பகம் சார்பாக மானசா இலக்கிய விருது வருடம் தோறும் 2025 முதல் அளிக்கப்படுகிறது. இது நாவல் எழுதும் இளையர் (16-25 வயது) மற்றும் வயது வந்தோர் (26 வயதுக்கு மேல்) என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இது புதிய பெண் எழுத்தாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது. இது ஒரு லட்சம் பரிசுத் தொகை கொண்டது. வெற்றியாளர்களின் நாவல்கள் மானசா பதிப்பகத்தால் பதிப்பிக்கப்படுகிறது.

மானசா பதிப்பகம் சார்பாக சென்னையில் புக் கிளப் ஒன்று நடத்தி வருகிறார். இதன் வழியாக மாதக் கூட்டங்களை ஒருங்கிணைக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

கிருபாலட்சுமி ஆங்கில இலக்கியத்தில் பயிற்சியும் வாசிப்பும் கொண்டவர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஆங்கில பதிப்பின் பங்களிப்பாளர்.

இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Apr-2026, 09:30:40 IST