under review

சைதன்யா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
{{Read English|Name of target article=J. Chaidhanya|Title of target article=J. Chaidhanya}}
{{Read English|Name of target article=J. Chaidhanya|Title of target article=J. Chaidhanya}}
[[File:Chaidhanya2.jpg|thumb|சைதன்யா]]
[[File:Chaidhanya2.jpg|thumb|சைதன்யா]]
சைதன்யா (பிறப்பு: டிசம்பர் 29, 1996) சைதன்யா எழுத்தாளர், பதிப்பாளர். மானசா பதிப்பகத்தின் நிறுவனர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பு மேற்பார்வையாளர், ஒருங்கிணைப்பாளர்.  
சைதன்யா (பிறப்பு: டிசம்பர் 29, 1996) சைதன்யா எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர். மானசா பதிப்பகத்தின் நிறுவனர். உலகப் பெண் சிந்தனையாளர்கள் சார்ந்த கட்டுரைத் தொடரை எழுதினார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பு மேற்பார்வையாளர், ஒருங்கிணைப்பாளர்.  


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சைதன்யா தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலி எழுத்தாளர் [[ஜெயமோகன்]], எழுத்தாளர் [[அருண்மொழிநங்கை]] ஆகியோருக்கு 29 டிசம்பர் 1996-ல் தர்மபுரியில் பிறந்தார். உடன்பிறந்தவர் அண்ணன் [[அஜிதன்]]. தக்கலை ஹிந்து வித்யாலயாவில் ஆரம்பக்கல்வியும் நாகர்கோயில் செயிண்ட் அல்போன்ஸா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிக்கல்வியும் முடித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். நியூடெல்லி அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
சைதன்யா தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் எழுத்தாளர் [[ஜெயமோகன்]], எழுத்தாளர் [[அருண்மொழிநங்கை]] ஆகியோருக்கு 29 டிசம்பர் 1996-ல் தர்மபுரியில் பிறந்தார். உடன்பிறந்தவர் அண்ணன் [[அஜிதன்]]. தக்கலை ஹிந்து வித்யாலயாவில் ஆரம்பக்கல்வியும் நாகர்கோயில் செயிண்ட் அல்போன்ஸா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிக்கல்வியும் முடித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். நியூடெல்லி அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.


== பதிப்புப்பணி ==
== பதிப்புப்பணி ==
Line 14: Line 14:


== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
சைதன்யா ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயிற்சியும் வாசிப்பும் கொண்டவர். தமிழ் விக்கி இணையதளத்தின் ஆங்கிலப் பக்கங்களின் மொழியாக்கத்தை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைக்கிறார். நீலி மின்னிதழில் உலகப் பெண் எழுத்தாளர்கள் சார்ந்த கட்டுரைத்தொடரை எழுதினார்.
சைதன்யா ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயிற்சியும் வாசிப்பும் கொண்டவர். தமிழ் விக்கி இணையதளத்தின் ஆங்கிலப் பக்கங்களின் மொழியாக்கத்தை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைக்கிறார். நீலி மின்னிதழில் உலகப் பெண் சிந்தனையாளர்கள் சார்ந்த கட்டுரைத்தொடரை எழுதினார்.


சைதன்யாவின் முதல் மொழிபெயர்ப்பு நூல் ”Moons Far Far Away” என்பது எழுத்தாளர் பாரத தேவியின் தன்வரலாற்று நாவல் மானசா பதிப்பகம் வழியாக 2026-ல் வெளியானது.
சைதன்யாவின் முதல் மொழிபெயர்ப்பு நூல் ”Moons Far Far Away” என்பது எழுத்தாளர் பாரத தேவியின் தன்வரலாற்று நாவல். மானசா பதிப்பகம் வழியாக 2026-ல் வெளியானது.


== விவாதம் ==
== விவாதம் ==

Revision as of 11:40, 24 March 2026

To read the article in English: J. Chaidhanya. ‎

சைதன்யா

சைதன்யா (பிறப்பு: டிசம்பர் 29, 1996) சைதன்யா எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர். மானசா பதிப்பகத்தின் நிறுவனர். உலகப் பெண் சிந்தனையாளர்கள் சார்ந்த கட்டுரைத் தொடரை எழுதினார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலப் பதிப்பின் மொழிபெயர்ப்பு மேற்பார்வையாளர், ஒருங்கிணைப்பாளர்.

பிறப்பு, கல்வி

சைதன்யா தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் அருண்மொழிநங்கை ஆகியோருக்கு 29 டிசம்பர் 1996-ல் தர்மபுரியில் பிறந்தார். உடன்பிறந்தவர் அண்ணன் அஜிதன். தக்கலை ஹிந்து வித்யாலயாவில் ஆரம்பக்கல்வியும் நாகர்கோயில் செயிண்ட் அல்போன்ஸா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிக்கல்வியும் முடித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். நியூடெல்லி அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பதிப்புப்பணி

சைதன்யா மானசா பதிப்பகம் என்னும் பெண்களுக்கான ஆங்கிலப் பதிப்பகத்தை தன் தோழி கிருபாலட்சுமியுடன் இணைந்து நடத்தி வருகிறார். இது பெண் மையப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதையும், பெண்கள் ஆங்கிலத்தில் எழுதுவதையும் ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.

மானசா பதிப்பகம் சார்பாக “மானசா இலக்கிய விருது” வருடம் தோறும் 2025 முதல் அளிக்கப்படுகிறது. இது நாவல் எழுதும் இளையர் (16-25 வயது) மற்றும் வயது வந்தோர் (26 வயதுக்கு மேல்) என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இது புதிய பெண் எழுத்தாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது. இது ஒரு லட்சம் பரிசுத் தொகை கொண்டது. வெற்றியாளர்களின் நாவல்கள் மானசா பதிப்பகத்தால் பதிப்பிக்கப்படுகிறது.

சைதன்யா மானசா பதிப்பகம் சார்பாக சென்னையில் புக் கிளப் ஒன்று நடத்தி வருகிறார். இதன் வழியாக மாதக் கூட்டங்களை ஒருங்கிணைக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

சைதன்யா ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயிற்சியும் வாசிப்பும் கொண்டவர். தமிழ் விக்கி இணையதளத்தின் ஆங்கிலப் பக்கங்களின் மொழியாக்கத்தை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைக்கிறார். நீலி மின்னிதழில் உலகப் பெண் சிந்தனையாளர்கள் சார்ந்த கட்டுரைத்தொடரை எழுதினார்.

சைதன்யாவின் முதல் மொழிபெயர்ப்பு நூல் ”Moons Far Far Away” என்பது எழுத்தாளர் பாரத தேவியின் தன்வரலாற்று நாவல். மானசா பதிப்பகம் வழியாக 2026-ல் வெளியானது.

விவாதம்

சைதன்யா நீலி மின்னிதழில் தஸ்தாயேவ்ஸ்கி, ஃப்ளாபர்ட் ஆகிய இரு நிலவறை மனிதர்களின் அன்னையாக ஜார்க் சாண்டை நிறுத்திய "நிலவறை மனிதனின் அன்னை" கட்டுரை ஜெயமோகன் தளத்தில் விவாதத்தை நிகழ்த்தியது.


பார்க்க: பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி

நூல் பட்டியல்

மொழிபெயர்ப்பு
  • Moons Far Far Away by Bharatha Devi (நிலாக்கள் தூர தூரமாக)

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:19 IST