நன்னாகனார்: Difference between revisions
SakthivelS (talk | contribs) Created page with "நன்னாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஐந்து பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன. ==வாழ்க்கை குறிப்பு== நன்னாகனார் சங்க காலப் புலவ..." |
Corrected typo errors; Corrected year suffix text; |
||
| Line 1: | Line 1: | ||
நன்னாகனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய ஐந்து பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன. | நன்னாகனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய ஐந்து பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன. | ||
==வாழ்க்கை குறிப்பு== | ==வாழ்க்கை குறிப்பு== | ||
நன்னாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். ஏடுகளில் இவரது பெயர் புறத்திணை நன்னாகனார் என்றும் காணப்படுகிறது. புறத்திணையை சிறப்பித்து பாடியுள்ளதால் புறத்திணை நன்னாகனார் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வேங்கடநாடன் கரும்பனூர் கிழானை குறித்து பாடியுள்ளதால் புலவர் வடதமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற ஊகம் முன்வைக்கப்படுகிறது. நன்னாகனார் பரிபாடலில் 2 மற்றும் 12 | நன்னாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். ஏடுகளில் இவரது பெயர் புறத்திணை நன்னாகனார் என்றும் காணப்படுகிறது. புறத்திணையை சிறப்பித்து பாடியுள்ளதால் புறத்திணை நன்னாகனார் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வேங்கடநாடன் கரும்பனூர் கிழானை குறித்து பாடியுள்ளதால் புலவர் வடதமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற ஊகம் முன்வைக்கப்படுகிறது. நன்னாகனார் பரிபாடலில் 2 மற்றும் 12-ம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். எனவே இசையறிவு மிக்கவர் என்று அறியமுடிகிறது. | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
நன்னாகனார் பாடிய ஐந்து பாடல்கள் [[புறநானூறு|புறநானூறில்]] 176, 376, 379, 381 மற்றும் 384 | நன்னாகனார் பாடிய ஐந்து பாடல்கள் [[புறநானூறு|புறநானூறில்]] 176, 376, 379, 381 மற்றும் 384 - ம் எண் கொண்ட பாடல்களாக இடம்பெற்றுள்ளன. புறநானூறு 176 மற்றும் 376 - ம் பாடல்கள் ஓய்மான் நல்லியகோடனின் நாட்டு வளத்தையும் கொடை வன்மையையும் சிறப்பித்து பாடி [[பாடாண் திணை|பாடாண் திணையில்]] [[இயன்மொழி]] துறையில் அமைந்துள்ளன. புறநானூறு 379 - ம் பாடல் பாடாண் திணையில் அமைந்து ஓய்மான் வில்லியாதனின் கொடை சிறப்பையும் நாட்டு வளத்தையும் பாடுகிறது. புறநானூறு 381 மற்றும் 384 - ம் பாடல்கள் பாடாண் திணையில் அமைந்து வேங்கடநாடன் கரும்பனூர் கிழானின் நாட்டு வளத்தையும் கொடை சிறப்பையும் பாடுகிறது. இவரது பாடல்களின் வழி மன்னர்களின் கொடை தன்மையையும் புலவர்களின் வறுமை நிலை குறித்த விவரங்களையும் அறிய முடிகிறது. | ||
==பாடல் வழி அறியவரும் செய்திகள்== | ==பாடல் வழி அறியவரும் செய்திகள்== | ||
======ஓய்மான் நல்லியக்கோடன்====== | ======ஓய்மான் நல்லியக்கோடன்====== | ||
Revision as of 21:25, 17 January 2026
நன்னாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஐந்து பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
நன்னாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். ஏடுகளில் இவரது பெயர் புறத்திணை நன்னாகனார் என்றும் காணப்படுகிறது. புறத்திணையை சிறப்பித்து பாடியுள்ளதால் புறத்திணை நன்னாகனார் என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வேங்கடநாடன் கரும்பனூர் கிழானை குறித்து பாடியுள்ளதால் புலவர் வடதமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற ஊகம் முன்வைக்கப்படுகிறது. நன்னாகனார் பரிபாடலில் 2 மற்றும் 12-ம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். எனவே இசையறிவு மிக்கவர் என்று அறியமுடிகிறது.
இலக்கிய வாழ்க்கை
நன்னாகனார் பாடிய ஐந்து பாடல்கள் புறநானூறில் 176, 376, 379, 381 மற்றும் 384 - ம் எண் கொண்ட பாடல்களாக இடம்பெற்றுள்ளன. புறநானூறு 176 மற்றும் 376 - ம் பாடல்கள் ஓய்மான் நல்லியகோடனின் நாட்டு வளத்தையும் கொடை வன்மையையும் சிறப்பித்து பாடி பாடாண் திணையில் இயன்மொழி துறையில் அமைந்துள்ளன. புறநானூறு 379 - ம் பாடல் பாடாண் திணையில் அமைந்து ஓய்மான் வில்லியாதனின் கொடை சிறப்பையும் நாட்டு வளத்தையும் பாடுகிறது. புறநானூறு 381 மற்றும் 384 - ம் பாடல்கள் பாடாண் திணையில் அமைந்து வேங்கடநாடன் கரும்பனூர் கிழானின் நாட்டு வளத்தையும் கொடை சிறப்பையும் பாடுகிறது. இவரது பாடல்களின் வழி மன்னர்களின் கொடை தன்மையையும் புலவர்களின் வறுமை நிலை குறித்த விவரங்களையும் அறிய முடிகிறது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
ஓய்மான் நல்லியக்கோடன்
- நல்லியகோடன் மாவிலங்கை என்னும் நாட்டை ஆண்டு வந்தான். மாவிலங்கை நாடு நீர்வளம் மிக்கது. ஏரிகளில் நீரை தேக்கி தேவையான காலத்தில் மதகுகளின் வழி நீர் பங்கீடு செய்து கொள்ளுமளவுக்கு தொழில்நுட்பமும் செல்வமும் கொண்டது.
- ஏரி நீர் பாய்ந்து கரிய சேறாக உள்ள நிலத்தை பன்றிகள் கிளறி மேய்ந்து செல்லும். அந்நிலத்தில் நாட்டு பெண்கள் புலால் மணம் வீசும் ஆமை முட்டைகளையும் தேன் மணம் வீசும் ஆம்பல் கிழங்குகளையும் மண்ணை அகழ்ந்து உணவுக்காக எடுத்துக்கொள்வர். அப்பெண்கள் கைகளில் வளையல்கள் அணிந்திருப்பர். ஓய்வு நேரத்தில் ஓரை என்னும் விளையாட்டை ஆடுவர்.
- நல்லியகோடன் தன்னை புகழ்ந்து பாடி வரும் சீறி யாழ் இசைக்கும் பாணர்களுக்கு நிரம்ப கொடை வழங்கும் இயல்பினன். கடையெழு வள்ளலான பாரியின் நாட்டில் நீர்வளத்திற்கு குறைவு வராதபடிக்கு பனிநீர் ததும்பும் குளங்கள் இருந்தன. நல்லியகோடனின் நாடு அதுபோல் கொடை வன்மைக்கு குறைவு வராதபடி செல்வ வளம் கொண்டது.
- சூரியன் மறைந்த அந்தி வேளையில் அரசர் தம் அரண்மனை வாயிலின் முன்னே சென்று, அரசனை புகழ்ந்து பாடி வாழ்க்கையை நடத்தும் நிலை புலமை மிக்க பாணர்களுக்கும் இருந்துள்ளது. அப்படி செல்வோரின் கிணைப்பறையின் கட்டு வார்கள் நெகிழ்ந்தும் தோல்பரப்பும் கிழிந்தும் சீர்குலைந்த நிலையில் காணப்படும். பாணர் புலவர்களின் ஆடை கசங்கி அழுக்குடையதாக குறைத்தன்மையாக காணப்படும்.
- நல்லியகோடன் புதிய புலவரின் இரவல் செய்கைக்காக வாயில் முன் நிற்பதை கண்டவுடன் அவர் கேட்காமலேயே வறுமை துன்பத்தை உணர்ந்தான். புலவரை அழைத்து சென்று கள்ளும் வேண்டிய மட்டும் ஊன்கறியும் கொடுத்து வயிற்றுப்பசியை போக்கினான். பிறகு அவரது வறுமை நீங்க செல்வமும் வழங்கினான். இச்செயலால் நல்லியகோடானை தவிர பிற யாரையும் இனி பாடமாட்டேன் என்று புலவர் மனம் நெகிழ்ந்தார். இச்செய்தியை பாடல் வழி அறிய முடிகிறது. இதன் வழி அக்கால மன்னர்களின் கொடைப்பண்பு, புலவர்களின் பொருள்நிலை, கல்விசிறப்பு, கல்விக்கு அளிக்கப்படும் போன்றவற்றை குறித்து அறிய முடிகிறது.
ஓய்மான் வில்லியாதன்
- ஓய்மான் வில்லியாதன் ஓய்மான் நல்லியகோடனின் வழிவந்த மன்னன். மாவிலங்கை நாட்டை ஆண்டவன். உயர்ந்த நீண்ட மதிலையும் அகழியையும் கொண்ட அரண்மனையை அமைந்த நாட்டினன்.
- வில்லியாதனின் நாட்டில் நெற்கதிர் அறுக்கும் அறுவாளிற்கு சாணை பிடிக்கவேண்டுமென்றால் ஆமையின் முதுகோட்டில் தேய்த்து உரசி சாணை பிடிப்பர். அந்த அளவிற்கு ஆமைகளின் பெருக்கமும் வயல் நிலமும் கொண்ட வளமை உடையவன்.
- வில்லியாதனை தினமும் பாராட்டி பாடுவதற்காக அவையில் கிணை பொருநரை கொண்டவன். அவர்களுக்கு பன்றிக்காலை நெய்யுருக சுட்டெடுத்து பரிமாறும் கொடை வன்மை கொண்டவன். அவனை நாடி வந்து பாடும் புலவர்க்கும் தமது கிணைப்பொருநரை போலவே நல்லுணவிட்டு பொருளும் அளிக்கும் பண்புடையவன்.
வேங்கடநாடன் கரும்பனூர்கிழான்
- கரும்பனூர் கிழான் வேங்கட நாட்டை ஆண்ட மன்னன். அவனது நாட்டு வளத்தை குறிப்புணர்த்த பின்வரும் காட்சிகள் கூறப்படுகின்றன. நாரைகள் மருத நிலத்து வயல்களில் கூட்டமாக மேயும். வஞ்சி மரங்களில் கூடுகட்டி தங்கும். நன்கு விளைந்து முற்றிய கரும்பின் பூக்களை விரும்பி உண்ணும். முல்லை நிலத்தில் இருந்து வரும் பறவைகள் வரகு பயிடப்பட்டிருக்கும் வயல்களில் உள்ள எலிகளை வேட்டையாடும். அப்பறவைகளின் ஓலி கேட்டு சிறு முயல்கள் அஞ்சி குழிக்குள் பதுங்கி கொள்ளும். வயலோரத்தில் நின்றிருக்கும் இலுப்பை மரத்தில் பூக்கள் உதிரும்.
- கரும்பனூர் கிழானின் நாட்டில் விழா இல்லாத காலத்தில் உழவர்களின் உணவில் கெளிற்று மீனும் பூவுடன் கலந்த கள்ளும் இருக்கும்.
- கரும்பனூர் கிழான் தம்மை நாடிவந்த பாணர்களுக்கு ஊனுணவில் நிரம்ப நெய்யிட்டு பசியாற தருவான். அவர்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் அளித்து பாணர்களின் மகிழ்விப்பவன். அவனது நாட்டில் பாணர்கள் உணவு மிகுந்து மீதத்தை வீசியெறியவோ அல்லது பல்லிடுக்கில் சிக்கி கொண்ட ஊன் தூண்டை எடுப்பதில் காலம் கழிக்கவோ செய்யுமளவுக்கு வளம் பெற்றிருந்தனர்.
- பாணர்கள் ஊன் உணவு உண்டு சலிப்புற்ற போது இனிப்பு மிக்க உணவுகளையும் பாலாலான உணவு பொருட்களையும் வெல்லப்பாகால் செய்யப்பெற்ற உணவுகளையும் உண்டு நிறைந்தனர். பலநாட்கள் ஓரிடத்தில் தங்கிய பிறகு தங்குமிடம் எத்தனை சிறப்பாக இருந்தாலும் பாணர்கள் பயணப்படும் மனநிலை கொண்டிருந்தனர் என்று அறிய முடிகிறது.
- கரும்பனூர் கிழான் போன்று பாணர்களை ஆதரிக்கும் மன்னர்களை போலவே ஆதரிக்காத மன்னர்களும் இருந்தனர். அவர்களின் வாயிலில் பாணர்கள் இரவலர்களாக சிதைந்த வார்களை கொண்ட தடாரிப்பறையை முழக்கி, வீணே இழிவடைந்து நிற்கும் நிலையும் சமூகத்தில் காணப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. தன்னிடமிருந்து பிரிந்து செல்லும் பாணர்களின் இந்நிலையை அறிந்து கரும்பனூர் கிழான் அவர்களை பிரிந்து செல்ல அனுமதிக்காத உயர்பண்பினாக இருந்துள்ளான்.
- வெள்ளி தெற்காக முளைத்தால் நாட்டின் வளத்திற்கு கெடு என்னும் ஜோதிட நம்பிக்கை மக்களிடையே நிலவியுள்ளது பாடலில் ஒரு குறிப்பாக இடம்பெற்றுள்ளது.
- உவமைகள்: தம்மை கண்டுகொள்ளாத மன்னர்களின் வாயிலில் பாணர்கள் இரவலர்களாக நின்று பாடும் பயனிலா செயல், மூட்புதரில் பெய்த மழைத்துளிக்கு ஒப்பாகவும் கனிமரம் உண்ணா ஆளில்லாது தனித்திருப்பதற்கு ஒப்பாகவும் உவமிக்கப்பட்டுள்ளது.
பாடல் நடை
புறநானூறு - 176
- திணை: பாடாண் திணை
- துறை: இயன்மொழி
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத்
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்,
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ்
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர்
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல,
காணாது கழிந்த வைகல், காணா
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன்
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே.
உசாத்துணை
- சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 4:தமிழ் பல்கலைகழகம்
- புறநானூறு - 176:puram400
- புறநானூறு - 376:puram400
- புறநானூறு - 379:puram400
- புறநானூறு - 381:puram400
- புறநானூறு - 384:puram400
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.