under review

எம்.கே. நாதன்: Difference between revisions

From Tamil Wiki
(எம்.கே. நாதன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது மூலக் கட்டுரையில் இல்லை. அதனால் மறைவு விவரங்கள் மாற்றப்பட்டன.)
Line 1: Line 1:
[[File:M.K. nATHAN iMAGE.jpg|thumb|எழுத்தாளர் எம்.கே. நாதன்]]
[[File:M.K. nATHAN iMAGE.jpg|thumb|எழுத்தாளர் எம்.கே. நாதன்]]
எம்.கே. நாதன் (எம். காந்திமதிநாதன்) (1931 - ?) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக, திரைப்படக் கதை, வசன ஆசிரியர். பட்டுக்கோட்டை உயர் நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். சிறந்த சிறுகதைக்காக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது பெற்றார்.
எம்.கே. நாதன் (எம். காந்திமதிநாதன்) (1931) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக, திரைப்படக் கதை, வசன ஆசிரியர். பட்டுக்கோட்டை உயர் நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். சிறந்த சிறுகதைக்காக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது பெற்றார்.


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 33: Line 33:
== வாழ்க்கை வரலாறு ==
== வாழ்க்கை வரலாறு ==
எம்.கே. நாதனின் வாழ்க்கை வரலாற்றை ப. பவழராணி எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் இந்திய ஆய்வியல் துறை மலாயாவுடன் இணைந்து, 2016-ல் வெளியிட்டது.
எம்.கே. நாதனின் வாழ்க்கை வரலாற்றை ப. பவழராணி எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் இந்திய ஆய்வியல் துறை மலாயாவுடன் இணைந்து, 2016-ல் வெளியிட்டது.
== மறைவு ==
எம்.கே. நாதன், எப்போது காலமானார் என்ற விவரங்களை முழுமையாக அறிய இயலவில்லை.


== மதிப்பீடு ==
== மதிப்பீடு ==

Revision as of 09:56, 22 December 2025

எழுத்தாளர் எம்.கே. நாதன்

எம்.கே. நாதன் (எம். காந்திமதிநாதன்) (1931) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக, திரைப்படக் கதை, வசன ஆசிரியர். பட்டுக்கோட்டை உயர் நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். சிறந்த சிறுகதைக்காக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

எம். காந்திமதிநாதன் என்னும் இயற்பெயரை உடைய எம்.கே. நாதன், 1931-ல், திருவனந்தபுரத்தில், மார்த்தாண்டம் பிள்ளை - கோமதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். திருவனந்தபுரம் அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட் கற்றார். போபால் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் படித்து இதழியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

எம்.கே. நாதன், கேரள அரசு அச்சகத்தில் தமிழ்ப் பிழை திருத்துநராகப் பணியாற்றினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு எழுதி, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை முன்சீப் நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி: கமலா. ஒரே மகள்: கோமதி.

இதழியல்

எம்.கே. நாதன், 'தினமலர்' நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 'மர்மக்கதை' என்ற இதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

எம்.கே. நாதன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

எம்.கே. நாதன், தினமலர், தினத்தந்தி, ஹிந்து தமிழ் திசை போன்ற இதழ்களில் சமூகம், ஆன்மிகம் குறித்த பல கட்டுரைகளை எழுதினார். பொது வாசிப்புக்குரிய நாவல்கள், சிறுகதைகள், மர்மக்கதைகளை எழுதினார். எம்.கே. நாதன், 135-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து சமூக நாவல்கள், 15-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், 37 மர்ம நாவல்களை எழுதினார். சிறார்களுக்காகவும் சில படைப்புகளை எழுதினார்.

பொறுப்பு

எம்.கே. நாதன், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

திரைப்படம்

எம்.கே. நாதன், திரைப்பட வாய்ப்புகளுக்காக அரசுப் பணியை விட்டு விலகினார். 'ராயல் ஸ்டூடியோ' தயாரித்த திரைப்படத்திற்குக் கதை - வசனம் எழுத முற்பட்டார். ஸ்டூடியோ மூடப்பட்டதால் அந்த வாய்ப்பு பறிபோனது. தொடர்ந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் சேர்ந்து பணியாற்றினார். 1959-ல் எம்.கே. நாதனின் கதையில் 'எங்கள் குலதேவி' திரைப்படம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் வெளிவந்தது. மாடர்ன் தியேட்டர்ஸின் 'கண்டம் பெச்ச போட்டு' எனும் முதல் கன்னடப் படத்திற்கு திரைக்கதை எழுதினார். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் பல படங்களுக்குப் பங்களித்தார். 1967-ல் 'பெண் படை' எனும் படத்திற்கு திரைக்கதை எழுதினார். பிற மொழிகளில் வெளியான வெற்றிப் படங்களுக்குத் தமிழில் கதை, திரைக்கதை எழுதினார்.

நாடகம்

எம்.கே. நாதன், நாடகத் துறையிலும் பங்களித்தார். நாதனின் 'மணல்வீடு', 'வாரிசு' என்ற இரு நாடகங்களும் குறிப்பிடத்தகுந்தன. பல்வேறு பரிசுகளைப் பெற்றன.

விருதுகள்

  • சிறந்த சிறுகதைக்காக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது
  • கேரள முற்போக்கு கலை இலக்கிய சங்கம் அளித்த கேடயம்
  • திருவிதாங்கூர் ஸ்ரீ கிருஷ்ணா நாட்டிய சங்கீத அகாதெமி அளித்த விருது மற்றும் கேடயம்
  • கேரள தமிழ்ப் பேரவை அளித்த விருது

வாழ்க்கை வரலாறு

எம்.கே. நாதனின் வாழ்க்கை வரலாற்றை ப. பவழராணி எழுதினார். இந்நூலை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் இந்திய ஆய்வியல் துறை மலாயாவுடன் இணைந்து, 2016-ல் வெளியிட்டது.

மதிப்பீடு

எம்.கே. நாதன், பொது வாசிப்புக்குரிய சிறுகதை, நாவல்களையும், சிறார் நூல்களையும் எழுதினார். எழுத்து, நாடகம், திரைப்படம் என மூன்று களங்களிலும் பங்களித்த எழுத்தாளராக எம்.கே. நாதன் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • திருவிளையாடற் புராணம் (வசன நடைக் கதை)
  • ஏன் அழைத்தாள்? (சிறுகதைத் தொகுப்பு)
  • அற்புதமான அறிவுக் கதைகள் (சிறார் நூல்)
  • ஆனந்தம் தரும் அறிவுக்கதைகள் (சிறார் நூல்)
  • புது உறவு (நாவல்)
  • ஆதி சிவன் முதற்றே உலகு (ஆன்மிகம்)
  • திருமுருகன் திருத்தலங்கள் (ஆன்மிகம்)
  • ஓடிப்போன ஒய்யாரி (மர்ம நாவல்)
  • விமானசுந்தரின் விசித்திர விளையாட்டு (மர்ம நாவல்)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-May-2025, 10:19:32 IST