சிவப்பிரகாச பண்டிதர்: Difference between revisions

From Tamil Wiki
Corrected Category:உரையாசிரியர்கள் to Category:உரையாசிரியர்Corrected Category:புலவர்கள் to Category:புலவர்Corrected Category:மொழிபெயர்ப்பாளர்கள் to Category:மொழிபெயர்ப்பாளர்
Line 29: Line 29:
[[Category:மொழிபெயர்ப்பாளர்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்]]
[[Category:உரையாசிரியர்]]
[[Category:உரையாசிரியர்]]
[[Category:ஈழம்]]

Revision as of 01:04, 21 December 2025

பண்டிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்டிதர் (பெயர் பட்டியல்)

சிவப்பிரகாச பண்டிதர் (1864-1916) ஈழத்து தமிழ்ப் புலவர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவப்பிரகாச பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலியில் சங்கரபண்டிதருக்கு 1864-ல் பிறந்தார். தந்தையிடம் தொல்காப்பியம், நன்னூல் முதலிய தமிழ் இலக்கண இலக்கியங்கள், இரகுவம்சம், மாகம் முதலிய சமஸ்கிருத காவியங்களையும், முக்த போதம் ஆசுபோதம் முதலிய சமஸ்கிருத வியாகரணங்களையும் கற்றார்.

திருச்செந்தூர்ப்புராணம்

இலக்கிய வாழ்க்கை

சிவப்பிரகாச பண்டிதர் கவி புனையும் ஆற்றல் கொண்டிருந்தார். 'திருச்செந்தூர்ப் புராணவுரை', 'சிவானந்தலகரி தமிழுரை' ஆகிய உரைகள் எழுதினார். 'பாலபாடம்', 'பாலாமிர்தம்' முதலிய நூல்கள் இயற்றினார். மொழிபெயர்ப்புக்கள் செய்தார்.

மறைவு

சிவப்பிரகாச பண்டிதர் 1916-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • திருச்செந்தூர்ப் புராணவுரை
  • சிவானந்தலகரி தமிழுரை
  • பாலபாடம்
  • பாலாமிர்தம்

உசாத்துணை

இணைப்புகள்


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Mar-2023, 18:40:09 IST