under review

தேரதரன்: Difference between revisions

From Tamil Wiki
(; Added info on Finalised date)
 
Line 27: Line 27:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:55, 21 December 2025

தேரதரன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

தேரதரன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயர்காரணம் விளங்கவில்லை. சில ஏடுகளில் இவர் பெயர் பாட வேறுபாடுடன் தாமோதரன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கிய வாழ்க்கை

தேரதரன் பாடிய பாடல் குறுந்தொகையில் 195-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டs சென்ற தலைவர் கார்காலம் வந்தபின்னும் வராமை கண்டு தனது பிரிவுத் துயரை தோழியிடம் தலைவி உரைப்பதாக நெய்தல் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பொருளீட்டச் செல்லும் ஆடவர் மழைபெய்யும் கார்காலத்தில் செல்வத்தை சேர்த்து கொண்டு வீடு திரும்புவர். அவ்வண்ணம் திரும்பாத ஆடவரின் மனைவியர் பிரிவுத் துயரால் வாடுவர்.
  • பிரிவுத் துயரால் வாடும் மகளிர் மாலை நேரத்தில் சூரியன் அணையும் போது தன் கணவர் வந்துவிட மாட்டாரா என ஏங்கி துன்பம் அடைவர். மாலைக் காற்றில் அம்மகளிரின் மேனி பொம்மை மேல் உணர்ச்சி பெறாமல் இறுகியிருக்கும்.

பாடல் நடை

குறுந்தொகை - 195

  • திணை: நெய்தல்
  • கூற்று: பிரிவிடைப் பருவவரவின்கட் கிழத்தி மெலிந்து கூறியது.

சுடர்சினம் தணிந்து குன்றம் சேரப்
படர்சுமந்து எழுதரு பையுள் மாலை
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்
இன்னாது இரங்கும் என்னார் அன்னோ
தைவரல் அசைவளி மெய்பாய்ந்து உறுதரச்
செய்வுறு பாவை அன்னஎன்
மெய்பிறிது ஆகுதல் அறியா தோரே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Aug-2025, 21:11:14 IST