பொன். பரமகுரு: Difference between revisions
(Corrected typo errors;) |
(Corrected typo errors;) |
||
| Line 22: | Line 22: | ||
== ஆன்மிகம் == | == ஆன்மிகம் == | ||
பொன். பரமகுருவின் தந்தை ஆன்மிக குருவாக விளங்கினார். அந்த மரபு வழி பரமகுருவும் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டார். பல ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வணங்குவதையும், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் போன்றோரைத் தேடிச் சென்று தரிசிப்பதையும் தனது வழக்கமாக வைத்திருந்தார். பூண்டி மகான், அன்னை மாயம்மா, காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஞானானந்தகிரி சுவாமிகள், [[யோகி ராம்சுரத்குமார்]] உள்ளிட்ட பலரைச் சந்தித்தார் பொன். பரமகுரு எழுதிய | பொன். பரமகுருவின் தந்தை ஆன்மிக குருவாக விளங்கினார். அந்த மரபு வழி பரமகுருவும் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டார். பல ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வணங்குவதையும், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் போன்றோரைத் தேடிச் சென்று தரிசிப்பதையும் தனது வழக்கமாக வைத்திருந்தார். பூண்டி மகான், அன்னை மாயம்மா, காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஞானானந்தகிரி சுவாமிகள், [[யோகி ராம்சுரத்குமார்]] உள்ளிட்ட பலரைச் சந்தித்தார் பொன். பரமகுரு எழுதிய 'நான் கண்ட சித்தர்கள்' நூல், குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது. | ||
== பொறுப்புகள் == | == பொறுப்புகள் == | ||
Latest revision as of 17:39, 22 November 2025
பொன். பரமகுரு (செப்டம்பர் 19, 1926 - பிப்ரவரி 09, 2007) எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர். தமிழக மற்றும் புதுச்சேரி காவல் துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார். ஆன்மிகம் சார்ந்த நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தார். திரைப்படம் ஒன்றைத் தயாரித்து இயக்கினார். காவல்துறைப் பணிக்காக குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றார்.
பிறப்பு, கல்வி
பொன். பரமகுரு, செப்டம்பர் 19, 1926 அன்று, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், சித்தகல்ப சிரோன்மணி பொன்னையா சுவாமிகள் - கோமதியம்மாள் இணையருக்குப் பிறந்தார். ராஜபாளையத்தில் உயர்நிலைக் கல்வி கற்றார். திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் படித்து இளங்கலை பட்டம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று முதுகலை பட்டம் பெற்றார். சட்டக் கல்வி பயின்று பி.எல். பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பொன். பரமகுரு, 1948-ல், ஐ.பி.எஸ். அதிகாரியாகக் காவல்துறைப் பணியில் சேர்ந்தார். பல்வேறு படி நிலைகளில் பணியாற்றினார். தமிழக மற்றும் புதுச்சேரி அரசின் காவல் துறைத் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்தார். ஓய்வுக்குப் பின் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி கமலா. இவர்களுக்கு இரண்டு மகன்கள்; இரண்டு மகள்கள்.
இலக்கிய வாழ்க்கை
பொன். பரமகுரு தமிழின் முன்னணி நாளிதழ்களிலும், ராமகிருஷ்ண விஜயம், ரத்னபாலா, ஓம்சக்தி, கோகுலம், அமுதசுரபி, தமிழரசு போன்ற பல இதழ்களிலும் கட்டுரை, சிறுகதைகளை எழுதினார். சிறார்களுக்காகவும் பல படைப்புகளை எழுதினார். பொது வாசிப்புக்குரிய இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஆன்மிக நாவல் ஒன்றையும் எழுதினார். காவல் துறை சார்ந்த தனது அனுபவங்களை நூல்களாக எழுதினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும், இரண்டு ஆன்மிக நூல்களையும் எழுதினார்.
நாடகம்
பொன். பரமகுரு, தன் இளம் வயது முதலே நாடக ஆர்வம் கொண்டிருந்தார். எழுபது நாடகங்களை எழுதினார். பத்து நாடகங்களைத் தயாரித்து இயக்கினார். பொன். பரமகுருவின் நாடகங்கள் பல வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலி, ஒளிபரப்பாகின.
பொன். பரமகுரு, நடிகராகவும் நாடகத்தில் பங்களித்தார். மனோன்மணியம், மனோகரா நாடகங்களில் புருஷோத்தமனாகவும், கவியின் கனவு நாடகத்தில் இளவரசனாகவும், கோப்பெருஞ்சோழன் நாடகத்தில் கோப்பெருஞ்சோழனாகவும் நடித்தார். பாரதியார்வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற பாத்திரங்களிலும் நடித்தார்.
திரைப்படம்
பொன். பரமகுரு, 'உங்கள் நண்பன்' என்ற திரைப்படத்தை எழுதித் தயாரித்து இயக்கினார். 'பௌர்ணமி அலைகள்' என்ற படத்தில் நீதிபதியாக நடித்தார்.
ஆன்மிகம்
பொன். பரமகுருவின் தந்தை ஆன்மிக குருவாக விளங்கினார். அந்த மரபு வழி பரமகுருவும் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டார். பல ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வணங்குவதையும், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் போன்றோரைத் தேடிச் சென்று தரிசிப்பதையும் தனது வழக்கமாக வைத்திருந்தார். பூண்டி மகான், அன்னை மாயம்மா, காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஞானானந்தகிரி சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் உள்ளிட்ட பலரைச் சந்தித்தார் பொன். பரமகுரு எழுதிய 'நான் கண்ட சித்தர்கள்' நூல், குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அறியப்படுகிறது.
பொறுப்புகள்
- தமிழக அரசின் காவல்துறை தலைமை இயக்குநர்
- புதுச்சேரி அரசின் காவல்துறை தலைமை இயக்குநர்
- தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
- இந்திய குற்றவியல் சங்க நிறுவனர்களுள் ஒருவர்
விருதுகள்
- குடியரசுத் தலைவருக்கான பதக்கம் (இருமுறை)
- கிருபானந்த வாரியார் அளித்த 'ஆன்மிகக் காவலர்' பட்டம்
- டாக்டர் எம். சுந்தரம் அளித்த 'நாடகச் சித்தர்' விருது
- சென்னைச் சிறகுகள் மன்றத்தார் அளித்த 'இலக்கிய மாமணி' பட்டம்
- செந்நெறிச் செம்மல்
- மக்கள் காவலர் மாமணி
- வி.ஜி.பி. இலக்கிய விருது
மறைவு
பொன். பரமகுரு, பிப்ரவரி 09, 2007 அன்று, தனது 83-ம் வயதில் காலமானார்.
மதிப்பீடு
பொன். பரமகுரு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாகப் பொறுப்பேற்று நடத்திய காவல்துறை அதிகாரிகளுள் ஒருவராக அறியப்படுகிறார். மரபு வழி ஆன்மிகத்தின் பால் ஈர்க்கப்பட்டு, அந்த அனுபவங்களை நூல்களாக எழுதினார். சிறார்களுக்கான பாடல்களையும், சிறுகதைகளையும் எழுதினார். நாடகங்கள் பலவற்றை எழுதி, இயக்கி, நடித்தார். ஆன்மிக எழுத்தாளர்களுள் ஒருவராகவும், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதிய எழுத்தாளராகவும் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
தமிழ் நூல்கள்
- நான் கண்ட சித்தர்கள்
- மனிதருள் மாணிக்கம்
- மகத மகுடம்
- புத்தரின் கதைகள்
- மனங்கவர்ந்த மாணிக்கங்கள்
- தண்டனையியல்
- நீதிமன்றத்தில் ராஜாஜி
- காவல் நினைவுகள்
- சிந்தனை மலர்கள்
- தெய்வம் தந்த பரிசு
- நிதானமே நிம்மதி
- கண்டதும் கேட்டதும்
- அதிசயக் கனவுகள்
- நினைத்ததும் நடந்ததும்
- மனம் ஓர் ஆலயம்
- கறை படிந்த கரங்கள்
- விதியின் விளையாட்டு
- மதுரையம்பதி நாடகம்
- சத்திரத்தில் சதி
- ஆசையால் ஆபத்து
- இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
- அபலை அஞ்சலை
- நீதிநெறிக் கதைகள்
- உலகறிந்த உண்மை
- மனித நேயம்
- நெஞ்சம் நிறைந்த நினைவுகள்
- ஆன்மிக எண்ண அலைகள்
- திருமூலர் தேன்மொழி
- பாண்டிய நாடு
ஆங்கில நூல்
- Bouquet of thoughts
உசாத்துணை
- பொன் பரமகுரு அஞ்சலி தமிழ் ஒன் இந்தியா தளம்
- பொன் பரமகுரு அஞ்சலி
- பொன். பரமகுரு நூல்கள், மெரீனா புக்ஸ் தளம்
- நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:24:16 IST