under review

சிந்நயச் செட்டியார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
(Corrected typo errors;)
Line 16: Line 16:
இந்நூல் மட்டுமல்லாமல் சிந்நயச் செட்டியார் [[பதிகம்]], [[வெண்பா]], [[மாலை இலக்கியங்கள்|மாலை]], [[அந்தாதி]] என பல்வேறு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். சிந்நயச் செட்டியார் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தனது தமிழ்ப் பணிகளுக்காக மகாவித்துவான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]], [[உ.வே.சாமிநாதையர்]] போன்றோரால் சிந்நயச் செட்டியார் பாராட்டப்பட்டார்.
இந்நூல் மட்டுமல்லாமல் சிந்நயச் செட்டியார் [[பதிகம்]], [[வெண்பா]], [[மாலை இலக்கியங்கள்|மாலை]], [[அந்தாதி]] என பல்வேறு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். சிந்நயச் செட்டியார் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தனது தமிழ்ப் பணிகளுக்காக மகாவித்துவான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]], [[உ.வே.சாமிநாதையர்]] போன்றோரால் சிந்நயச் செட்டியார் பாராட்டப்பட்டார்.


சிந்நயச் செட்டியார், [[வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்|வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி]]களை தேவகோட்டைக்கு வரவழைத்து தேவகோட்டைச் சிவன் கோயிலில் உள்ள தண்டாயுதபாணி பேரில் பிள்ளைத்தமிழ் பாடச்செய்தார். ‘சிலேடைப் புலி' பிச்சுவையர், காரைக்குடி சிவபூசகர் சொக்கலிங்கம், இராமநாதபுரம் [[ரா.ராகவையங்கார்|ரா. ராகவையங்கார்]] ஆகியோர் சிந்நயச் செட்டியாரின் மாணவர்களாவர். ரா.ராகவையங்கார் தன் மாணவர் [[மு. இராகவையங்கார்|மு. இராகவையங்கா]]ருக்குப் பாடம் கற்பித்தபொழுது, சிந்நயச் செட்டியாரின் சில நூல்களையும் கற்பித்தார்.
சிந்நயச் செட்டியார், [[வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்|வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி]]களை தேவகோட்டைக்கு வரவழைத்து தேவகோட்டைச் சிவன் கோயிலில் உள்ள தண்டாயுதபாணி பேரில் பிள்ளைத்தமிழ் பாடச்செய்தார். 'சிலேடைப் புலி' பிச்சுவையர், காரைக்குடி சிவபூசகர் சொக்கலிங்கம், இராமநாதபுரம் [[ரா.ராகவையங்கார்|ரா. ராகவையங்கார்]] ஆகியோர் சிந்நயச் செட்டியாரின் மாணவர்களாவர். ரா.ராகவையங்கார் தன் மாணவர் [[மு. இராகவையங்கார்|மு. இராகவையங்கா]]ருக்குப் பாடம் கற்பித்தபொழுது, சிந்நயச் செட்டியாரின் சில நூல்களையும் கற்பித்தார்.


[[பாண்டித்துரைத் தேவர்]] சிந்நயச் செட்டியாரின் நண்பர். பாண்டித்துரைத் தேவர் [[நான்காம் தமிழ்ச்சங்கம்|நான்காம் தமிழ்ச் சங்க]]த்தை மதுரையில் நிறுவ சிந்நயச் செட்டியார் தூண்டுதலாக இருந்தார். (ஆனால், சங்கம் 1901-ல் உருவானபோது சிந்நயச் செட்டியார் உயிருடன் இல்லை)  
[[பாண்டித்துரைத் தேவர்]] சிந்நயச் செட்டியாரின் நண்பர். பாண்டித்துரைத் தேவர் [[நான்காம் தமிழ்ச்சங்கம்|நான்காம் தமிழ்ச் சங்க]]த்தை மதுரையில் நிறுவ சிந்நயச் செட்டியார் தூண்டுதலாக இருந்தார். (ஆனால், சங்கம் 1901-ல் உருவானபோது சிந்நயச் செட்டியார் உயிருடன் இல்லை)  
Line 26: Line 26:


== ஆன்மிகம் ==
== ஆன்மிகம் ==
சிந்நயச் செட்டியார், தன மூன்று வயது மகன் காசி இறந்ததால் மனவருத்தம் கொண்டார். திருவாரூருக்குச் சென்று சில ஆண்டுகள் வசித்தார். அக்காலத்தில் [[பதஞ்சலி]]யும் வியாக்கிரபாதரும் பூஜை செய்த தலமான ‘விளமல்' என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலைப் புதுப்பித்தார். பல ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டார். ஆன்மிகம் சார்ந்த நூல்களை எழுதினார்.
சிந்நயச் செட்டியார், தன மூன்று வயது மகன் காசி இறந்ததால் மனவருத்தம் கொண்டார். திருவாரூருக்குச் சென்று சில ஆண்டுகள் வசித்தார். அக்காலத்தில் [[பதஞ்சலி]]யும் வியாக்கிரபாதரும் பூஜை செய்த தலமான 'விளமல்' என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலைப் புதுப்பித்தார். பல ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டார். ஆன்மிகம் சார்ந்த நூல்களை எழுதினார்.


== விருதுகள் ==
== விருதுகள் ==

Revision as of 17:39, 22 November 2025

சிந்நயச் செட்டியார் (படம் நன்றி: https://www.facebook.com/nnagarathar)

சிந்நயச் செட்டியார் (வீர.லெ. சிந்நயச் செட்டியார்) (1855-1900) தமிழ்ப்புலவர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர். ஆசுகவி. பல்வேறு இலக்கிய நூல்களை இயற்றினார். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமையத் தூண்டுதலாக இருந்தார். முதன் முதலில் நகரத்தார் வரலாற்றை எழுதியவராக அறியப்படுகிறார்

பிறப்பு, கல்வி

சிந்நயச் செட்டியார், 1855-ல், தேவகோட்டையில் இலக்குமணச் செட்டியார்-லெட்சுமி ஆச்சிக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை உள்ளூர் திண்ணைப் பள்ளியில் படித்தார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவரும், 'வன்றொண்டர்' என்று போற்றப்பட்டவருமான நாராயணன் செட்டியாரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தமிழ், சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை தனது மானசீக குருவாகக் கொண்டார்.

தனி வாழ்க்கை

சிந்நயச் செட்டியார் மணமானவர். மனைவி மீனாட்சி. மகன் காசி.

நகரத்தார் வரலாறு - 1894, சிந்நயச் செட்டியார்
அருணைச் சிலேடை வெண்பா மாலை

இலக்கிய வாழ்க்கை

சிந்நயச் செட்டியார் ஆசுகவியாகத் திகழ்ந்தார். பூங்கொன்றை வேலங்குடிக் கல்வெட்டுச் செய்திகளையும், துளாவூர் திருமடத்துச் செப்பேட்டுக் குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு, 'தனவைசியராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம்' என்னும் நூலை எழுதினார். நகரத்தார் வரலாற்றைக் கூறும் முதல் நூலாக இந்நூல் அறியப்படுகிறது.

இந்நூல் மட்டுமல்லாமல் சிந்நயச் செட்டியார் பதிகம், வெண்பா, மாலை, அந்தாதி என பல்வேறு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். சிந்நயச் செட்டியார் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தனது தமிழ்ப் பணிகளுக்காக மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் போன்றோரால் சிந்நயச் செட்டியார் பாராட்டப்பட்டார்.

சிந்நயச் செட்டியார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை தேவகோட்டைக்கு வரவழைத்து தேவகோட்டைச் சிவன் கோயிலில் உள்ள தண்டாயுதபாணி பேரில் பிள்ளைத்தமிழ் பாடச்செய்தார். 'சிலேடைப் புலி' பிச்சுவையர், காரைக்குடி சிவபூசகர் சொக்கலிங்கம், இராமநாதபுரம் ரா. ராகவையங்கார் ஆகியோர் சிந்நயச் செட்டியாரின் மாணவர்களாவர். ரா.ராகவையங்கார் தன் மாணவர் மு. இராகவையங்காருக்குப் பாடம் கற்பித்தபொழுது, சிந்நயச் செட்டியாரின் சில நூல்களையும் கற்பித்தார்.

பாண்டித்துரைத் தேவர் சிந்நயச் செட்டியாரின் நண்பர். பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ சிந்நயச் செட்டியார் தூண்டுதலாக இருந்தார். (ஆனால், சங்கம் 1901-ல் உருவானபோது சிந்நயச் செட்டியார் உயிருடன் இல்லை)

தொன்மம்

சிந்நயச் செட்டியார் வாக்கு வன்மை மிக்கவராகவும், சொல் பலிதம் உள்ளவராகவும் இருந்தார். ஒரு சமயம் சிந்நயச் செட்டியார், வெளிமுத்தி என்ற ஊருக்குச் சென்றார். அங்குள்ள மக்கள் சிலர் அவரிடம், "நீங்கள் ஆசுகவியானால் இங்குள்ள ஆண் பனையைப் பழுக்க வைக்க வேண்டும். உங்களால் முடியுமா? என்று கேட்டனர். உடனே சிந்நயச் செட்டியார், "பங்குக்கு மூன்று பழம்தர வேண்டும் பனந்துண்டமே என்று தொடங்கிக் கவி ஒன்றைப் பாடினார்.

உடன் ஆண் பனை, பெண் பனையாக மாறியதுடன், உடனடியாகப் பூத்துக் காய்த்துப் பனம்பழங்கள் மூன்று கீழே விழுந்தன. இதனைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

ஆன்மிகம்

சிந்நயச் செட்டியார், தன மூன்று வயது மகன் காசி இறந்ததால் மனவருத்தம் கொண்டார். திருவாரூருக்குச் சென்று சில ஆண்டுகள் வசித்தார். அக்காலத்தில் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் பூஜை செய்த தலமான 'விளமல்' என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலைப் புதுப்பித்தார். பல ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டார். ஆன்மிகம் சார்ந்த நூல்களை எழுதினார்.

விருதுகள்

  • ஆசுகவி பட்டம்
  • வித்வத்சிகாமணி பட்டம்

மறைவு

சிந்நயச் செட்டியார், 1900-ம் ஆண்டில், தனது 45-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

நகரத்தார் இன மக்களில் முன்னோடிப் புலவராகவும், பதிப்பாசிரியராகவும் செயல்பட்டவர் சிந்நயச் செட்டியார். மரபு வழுவாது சிற்றிலக்கியங்களைப் பாடியவராகவும், முதன் முதலில் நகரத்தார் வரலாற்றை எழுதியவராகவும் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • மதுரை மீனாட்சியம்மை பதிகம்
  • நகரத்தார் வரலாறு
  • திருவொற்றியூர்ப் புராணம்
  • மயின்மலைப் பிள்ளைத் தமிழ்
  • சிலம்பைப் பதிற்றுப்பத்து அந்தாதி
  • தேவைத் திரிபு அந்தாதி
  • அருணைச் சிலேடை வெண்பா
  • காசி யமக அந்தாதி
  • வெளிமுத்திப் புராணம்
  • கும்பாபிஷேக மகிமை
  • ஐம்பெரும் காப்பிய ஒப்பீடு
  • கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல்
  • வயிரவன்கோவில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் (ஆராய்ச்சி மற்றும் பதிப்பாசிரியர்)
  • வயிரவன்கோயிற் புராணம் (ஆராய்ச்சி, புதுப்பிப்பு மற்றும் பதிப்பாசிரியர்)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:29:08 IST