நெடுங்களத்து பரணர்: Difference between revisions

From Tamil Wiki
SakthivelS (talk | contribs)
Corrected typo errors;
Line 23: Line 23:


==உசாத்துணை==
==உசாத்துணை==
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(03).pdf சங்கத்தமிழ் புலவர் வரிசை 3 – புலவர் க.கோவிந்தன்]
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(03).pdf சங்கத்தமிழ் புலவர் வரிசை 3 - புலவர் க.கோவிந்தன்]
*[https://puram400.blogspot.com/2011/10/291.html புறநானூறு - 291:puram400]
*[https://puram400.blogspot.com/2011/10/291.html புறநானூறு - 291:puram400]



Revision as of 16:04, 22 November 2025

நெடுங்களத்து பரணர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

நெடுங்களத்து பரணர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். திருச்சிக்கு கிழக்கே காவிரியின் தென்கிழக்கில் அமைந்துள்ள நெடுங்களம் என்னும் ஊரினை சேர்ந்தவர். பரணர் என்னும் இயற்பெயர் கொண்டோர். சில ஏடுகளில் நெடுங்கழத்து பரணர், நெடுங்கழுத்து பரணர் என பெயர் திரிபுற்று குறிப்பிடப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

நெடுங்களத்து பரணர் பாடிய பாடல் புறநானூறில் 291-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. போரில் இறந்த வீரன் ஒருவனின் மனைவி அவனது பெருமையையும் கணவனை இழந்த தன் துயரையும் ஒருங்கே பாடுவதாக கரந்தைத் திணையில் வேத்தியல் துறையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மன்னருக்காக தன் உயிரை எண்ணி அஞ்சாது போர் செய்யும் வீரனுக்கு மன்னன் தனது மணிமாலையை அணிவித்து சிறப்பு செய்யும் வழக்கம் இருந்தது.
  • இறந்த வீரனின் பிணத்தை விலங்குகளுக்கு உண்ணாது காக்க கூடி நின்று ஓப்பாரி வைத்து இறப்பு சடங்குகள் செய்யும் வழக்கம் உண்டு.

பாடல் நடை

புறநானூறு - 291

  • திணை: கரந்தை
  • துறை: வேத்தியல்

சிறாஅஅர்! துடியர்! பாடு வல் மகாஅஅர்!
தூ வெள் அறுவை மாயோற் குறுகி,
இரும் புள் பூசல் ஓம்புமின்; யானும்,
விளரிக் கொட்பின், வெள் நரி கடிகுவென்;
என் போல் பெரு விதுப்புறுக, வேந்தே
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன் தலை
மணி மருள் மாலை சூட்டி, அவன் தலை
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே!

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:29:02 IST