தேவி லிங்கம்: Difference between revisions
No edit summary |
(Corrected typo errors;) |
||
| Line 9: | Line 9: | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
தேவி லிங்கத்தின் முதல் கவிதைத் தொகுப்பு 'நெய்தல் நறுவீ'கலக்கல் டீரீம்ஸ் பதிப்பகத்தின் மூலம் 2022-ல் வெளியானது. முதல் சிறுகதை தொகுப்பு | தேவி லிங்கத்தின் முதல் கவிதைத் தொகுப்பு 'நெய்தல் நறுவீ'கலக்கல் டீரீம்ஸ் பதிப்பகத்தின் மூலம் 2022-ல் வெளியானது. முதல் சிறுகதை தொகுப்பு "கிளிச்சிறை" வாசகசாலை பதிப்பகத்தின் வழியாக 2023-ல் வெளியானது. முதல் நாவல் "நெருப்பு ஓடு" ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் 2024-ல் வெளியானது. | ||
செங்காந்தள், தமிழ்வெளி, குங்குமம், ஆனந்தவிகடன், கலகம், வாசகசாலை, தமிழ் டு தமிழ், நுட்பம் இணைய இதழ் ஆகிய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆதர்ச எழுத்தாளர்களாக [[கு. அழகிரிசாமி|கு.அழகிரிசாமி]], [[சுந்தர ராமசாமி]], [[சுஜாதா]], [[வண்ணதாசன்]], [[ஜெயமோகன்]] ஆகியோரைக் குறிப்பிடுகிறார். | செங்காந்தள், தமிழ்வெளி, குங்குமம், ஆனந்தவிகடன், கலகம், வாசகசாலை, தமிழ் டு தமிழ், நுட்பம் இணைய இதழ் ஆகிய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆதர்ச எழுத்தாளர்களாக [[கு. அழகிரிசாமி|கு.அழகிரிசாமி]], [[சுந்தர ராமசாமி]], [[சுஜாதா]], [[வண்ணதாசன்]], [[ஜெயமோகன்]] ஆகியோரைக் குறிப்பிடுகிறார். | ||
Latest revision as of 16:04, 22 November 2025
தேவி லிங்கம் (விஜிதேவி) (பிறப்பு: நவம்பர் 2, 1982) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், நாவல் எழுதியுள்ளார்.
பிறப்பு, கல்வி
தேவி லிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் த.வெங்கடேசன், லீலா வெங்கடேசன் இணையருக்கு நவம்பர் 2, 1982-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரு சகோதரிகள். ஒரு சகோதரர். நாகப்பட்டினத்திலுள்ள C.S.I நடுநிலைப்பள்ளி, மன்னார்குடியிலுள்ள செயிண்ட் ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். முத்துப்பேட்டையிலுள்ள கோவிலூர் பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி நிறைவு செய்தார். நாகப்பட்டினத்திலுள்ள ADMC மகளிர் கல்லூரியில் உயிர்ம வேதியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
தேவி லிங்கம் கோ.ராமலிங்கத்தை ஆகஸ்ட் 17, 2000-ல் திருமணம் செய்து கொண்டார். மகள்கள் விதூஷா அபிராமி, அமிர்த வர்ஷா.
இலக்கிய வாழ்க்கை
தேவி லிங்கத்தின் முதல் கவிதைத் தொகுப்பு 'நெய்தல் நறுவீ'கலக்கல் டீரீம்ஸ் பதிப்பகத்தின் மூலம் 2022-ல் வெளியானது. முதல் சிறுகதை தொகுப்பு "கிளிச்சிறை" வாசகசாலை பதிப்பகத்தின் வழியாக 2023-ல் வெளியானது. முதல் நாவல் "நெருப்பு ஓடு" ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் 2024-ல் வெளியானது.
செங்காந்தள், தமிழ்வெளி, குங்குமம், ஆனந்தவிகடன், கலகம், வாசகசாலை, தமிழ் டு தமிழ், நுட்பம் இணைய இதழ் ஆகிய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆதர்ச எழுத்தாளர்களாக கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, சுஜாதா, வண்ணதாசன், ஜெயமோகன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
இவரின் 'நெய்தல் நறுவீ 'கவிதை தொகுப்பு வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக முதுகலை மாணவர்களால் ஆராய்ச்சி நூலாக எடுத்துக்கொள்ளப்பட்டது. 'கிளிச்சிறை' வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதுகலை தமிழ் மாணவர்களால் ஆராய்ச்சி நூலாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
விருது
- நெருப்பு ஓடு நாவல் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நடத்திய நாவல் போட்டி நெடும்பட்டியலில் இலக்கிய விருது பெற்றது.
- 2025-ம் ஆண்டில் ரமேஷ் பிரேதன் நினைவாக வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- நெய்தல் நறுவீ (2022, கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்)
நாவல்
- நெருப்பு ஓடு (2024, ஜீரோ டிகிரி பதிப்பகம்)
சிறுகதைத் தொகுப்பு
- கிளிச்சிறை (2023, வாசகசாலை பதிப்பகம்)
இணைப்புகள்
- சரவணன் மாணிக்கவாசகம் - தேவிலிங்கம்
- வாசசகசாலை| 9-வது ஆண்டு விழா|நூல்கள் வெளியீட்டு விழா |கிளிச்சிறை | எழுத்தாளர் தேவிலிங்கம் ஏற்புரை
- எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது - magzter
- நெருப்பு ஓடு மதிப்புரை-யோகேஸ்வரன் ராமநாதன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2025, 09:20:15 IST