திருச்செங்கோட்டுக் குறவஞ்சி: Difference between revisions
(Corrected the links to Disambiguation page) |
(Corrected typo errors;) |
||
| Line 10: | Line 10: | ||
திருச்செங்கோட்டுக் குறவஞ்சி திருச்செங்கோட்டில் கோவில் கொண்ட அர்த்தநாரீசர் மேல் மோகனாங்கி காதல் கொண்டு பாடும் வகையில் அமைந்த குறவஞ்சி பாடல்களைக் கொண்டது. குறவஞ்சி நூலின் ஆசிரியர் பூங்கோதை தன்னை மோகனாங்கியாக பாவித்துப் பாடினார். குறத்தி கோதை என மோகனாங்கியை அழைப்பதலிருந்து அதனை அறிய முடிகிறது (73-ம் பாடல்). திருச்செங்கோட்டு அர்த்தநாரீசனுக்கு கோதை நாயகன் என்ற பெயரும் உண்டு. திருச்செங்கோட்டை கோதையூர், கோதை நகர், தென் கோதை என்றழைக்கின்றனர். சிவனை கோதை அண்ணல் எனப் பாடிய குறிப்பும் வருகிறது. இதன் மூலம் பூங்கோதை தன்னை கோதையாக பாவித்துப் பாடினார் என அறிய முடிகிறது. | திருச்செங்கோட்டுக் குறவஞ்சி திருச்செங்கோட்டில் கோவில் கொண்ட அர்த்தநாரீசர் மேல் மோகனாங்கி காதல் கொண்டு பாடும் வகையில் அமைந்த குறவஞ்சி பாடல்களைக் கொண்டது. குறவஞ்சி நூலின் ஆசிரியர் பூங்கோதை தன்னை மோகனாங்கியாக பாவித்துப் பாடினார். குறத்தி கோதை என மோகனாங்கியை அழைப்பதலிருந்து அதனை அறிய முடிகிறது (73-ம் பாடல்). திருச்செங்கோட்டு அர்த்தநாரீசனுக்கு கோதை நாயகன் என்ற பெயரும் உண்டு. திருச்செங்கோட்டை கோதையூர், கோதை நகர், தென் கோதை என்றழைக்கின்றனர். சிவனை கோதை அண்ணல் எனப் பாடிய குறிப்பும் வருகிறது. இதன் மூலம் பூங்கோதை தன்னை கோதையாக பாவித்துப் பாடினார் என அறிய முடிகிறது. | ||
திருச்செங்கோட்டுக் குறவஞ்சி உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக அமைந்துள்ளது. உரைநடையில் குறவர் மொழி பல இடங்களில் வருகின்றன. குறத்தி பேச்சில் ' | திருச்செங்கோட்டுக் குறவஞ்சி உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக அமைந்துள்ளது. உரைநடையில் குறவர் மொழி பல இடங்களில் வருகின்றன. குறத்தி பேச்சில் 'அம்மே' என்ற சொல் அதிகம் கலந்து வருகிறது. குறவஞ்சிகளுள் பெண்பாற் புலவர் பாடிய ஒரே குறவஞ்சி இது தான். | ||
=====பாடல்===== | =====பாடல்===== | ||
<poem>''நீர்கொண்ட கங்கைநிலவு ஆர்க்கொண்ட செஞ்சடிலர்'' | <poem>''நீர்கொண்ட கங்கைநிலவு ஆர்க்கொண்ட செஞ்சடிலர்'' | ||
Latest revision as of 15:52, 22 November 2025
- குறவஞ்சி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குறவஞ்சி (பெயர் பட்டியல்)
குறத்திப்பாட்டான திருச்செங்கோட்டுக் குறவஞ்சி குறவஞ்சி என்னும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசர் மேல் காதல் கொண்டு மோகனாங்கி பாடும் பாடல்கள் திருச்செங்கோட்டுக் குறவஞ்சி. இதனை அர்த்தநாரீசர் குறவஞ்சி என்றும் அழைப்பர். திருச்செங்கோட்டுக் குறவஞ்சி தமிழில் எழுதப்பட்ட குறவஞ்சி பாடல்களில் அகப்பொருள் சுவை அதிகம் இடம்பெற்ற இசைப்பாடல்களைக் கொண்டது.
ஆசிரியர்
திருச்செங்கோட்டுக் குறவஞ்சியின் ஆசிரியர் பூங்கோதை. பூங்கோதை தக்கை இராமாயணம் எழுதிய எம்பெருமான் கவிராயரின் மனைவி. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கொங்கு மண்டல சதகம் பூங்கோதையைப் பற்றி, சிறிய இடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர் மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே என்கிறது. திருச்செங்கோட்டுக் குறவஞ்சியை இயற்றியவர் பூங்கோதை என ஏ.இ. ஸ்ரீரங்க முதலியாரின் தலவரலாற்றுச் சுருக்கம் மூலம் அறிய முடிகிறது. பூங்கோதை மதுரை நகரைச் சேர்ந்தவர், எம்பெருமான் கவிராயரை மணந்து சங்ககிரி வந்தார் என்றும், இருவரும் இடையர் குலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கொங்கு மண்டல சதகத்தின் மூலம் அறியமுடிகிறது.
பதிப்பாசிரியர்
திருச்செங்கோட்டுக் குறவஞ்சி 2003-ம் ஆண்டு உ.வே.சா சேகரிப்பிலிருந்த ஓலைச்சுவடி கொண்டு படியெடுத்து பதிப்பிக்கப்பட்டது. சென்னையில் உள்ள உ.வே.சா நூல் நிலையம் மூலம் அச்சில் கொண்டு வரப்பட்டது. புலவர் ம.வே. பசுபதி, புலவர் ஞா. மேகலா, எஸ். சாயிராமன் மூவரும் இந்நூலைப் பதிப்பித்தனர்.
திருச்செங்கோட்டுக் குறவஞ்சி
திருச்செங்கோட்டுக் குறவஞ்சி திருச்செங்கோட்டில் கோவில் கொண்ட அர்த்தநாரீசர் மேல் மோகனாங்கி காதல் கொண்டு பாடும் வகையில் அமைந்த குறவஞ்சி பாடல்களைக் கொண்டது. குறவஞ்சி நூலின் ஆசிரியர் பூங்கோதை தன்னை மோகனாங்கியாக பாவித்துப் பாடினார். குறத்தி கோதை என மோகனாங்கியை அழைப்பதலிருந்து அதனை அறிய முடிகிறது (73-ம் பாடல்). திருச்செங்கோட்டு அர்த்தநாரீசனுக்கு கோதை நாயகன் என்ற பெயரும் உண்டு. திருச்செங்கோட்டை கோதையூர், கோதை நகர், தென் கோதை என்றழைக்கின்றனர். சிவனை கோதை அண்ணல் எனப் பாடிய குறிப்பும் வருகிறது. இதன் மூலம் பூங்கோதை தன்னை கோதையாக பாவித்துப் பாடினார் என அறிய முடிகிறது.
திருச்செங்கோட்டுக் குறவஞ்சி உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக அமைந்துள்ளது. உரைநடையில் குறவர் மொழி பல இடங்களில் வருகின்றன. குறத்தி பேச்சில் 'அம்மே' என்ற சொல் அதிகம் கலந்து வருகிறது. குறவஞ்சிகளுள் பெண்பாற் புலவர் பாடிய ஒரே குறவஞ்சி இது தான்.
பாடல்
நீர்கொண்ட கங்கைநிலவு ஆர்க்கொண்ட செஞ்சடிலர்
நித்தியகல் யாணபர மித்திர மகேசர்
கார்கொண்ட குழலும்நறை வார்கொண்ட கொங்கை மலர்
காவி விழியும் கொண்ட தேவிஉமை பாகர்
ஏர்கொண்ட திருநாகம் மேல்கொண்ட அர்த்தநா
ரீசர்தமிழ்க் குறவஞ்சி நேசமகிழ்ந்து ஓத
தார்கொண்ட துளபமொடு சீர்கொண்ட மணி மார்பில்
தரிசோலை மலையழகர் திருவடிகள் துணையே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-May-2023, 06:51:35 IST