காரி கிழார்: Difference between revisions
(Corrected typo errors;) |
(Corrected typo errors;) |
||
| Line 25: | Line 25: | ||
</poem> | </poem> | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/ புலவர் கா. கோவிந்தன் - திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]] | ||
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/purananooru/purananooru_6.html தமிழ்ச்சுரங்கம்-புறநானூறு-6] | * [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/purananooru/purananooru_6.html தமிழ்ச்சுரங்கம்-புறநானூறு-6] | ||
Latest revision as of 15:46, 22 November 2025
- காரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காரி (பெயர் பட்டியல்)
- கிழார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிழார் (பெயர் பட்டியல்)
To read the article in English: Kaari Kilar.
காரி கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
காரி கிழாரின் காரி எனும் ஊர் தற்போதைய ராமகிரி என்றழைக்கப்படும் ஊர் என்று உ.வே.சா கூறினார். சிவனை வழிபடுபவர், வைதீகவொழுக்கினர் என்பது இவரின் பாடல்கள் வழி அறியலாம்.
காரி என்னும் சொல் நஞ்சு, நஞ்சுண்ட சிவபெருமானையும் குறிக்கும். இவரது பெயர் சிவபெருமானை அழைக்கும் பெயர் என்றும் கூறுவர்.
இலக்கிய வாழ்க்கை
இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் ஆறாவது பாடலாக உள்ளது. புலவர் அரசர்க்கு நன்னெறிகளாகக் கூறும் செய்திகளைப் பொருண்மொழிக் காஞ்சித்துறையில் செவியறிவுறூஉ பகுதியில் உள்ளது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல். 'தண்டா ஈகைத் தகைமாண் வழுதி' என இவரின் கொடைத்தன்மையைக் கூறினார்.
பாடல் நடை
- புறநானூறு: 6
வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் - திரு நெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-8: கிழார்ப்பெயர் பெயர் பெற்றோர்]
- தமிழ்ச்சுரங்கம்-புறநானூறு-6
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:01 IST