under review

சே. கல்பனா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 13: Line 13:
== விருதுகள் ==
== விருதுகள் ==
இளம் ஆய்வாளர் விருது 2019
இளம் ஆய்வாளர் விருது 2019
== இலக்கிய இடம் ==
சே.கல்பனா கல்வித்துறை சார்ந்து மரபிலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகிறார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* திருக்குறள் - பரிதியாரின் உரைத்திறன்
* திருக்குறள் - பரிதியாரின் உரைத்திறன்

Revision as of 10:33, 2 August 2025

கல்பனா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கல்பனா (பெயர் பட்டியல்)
சே. கல்பனா
இளம் ஆய்வாளர் விருது

சே. கல்பனா (கல்பனா சேக்கிழார்) (பிறப்பு: மே 11, 1973) தமிழில் எழுதிவரும் கட்டுரையாளர், எழுத்தாளர், பேராசிரியர்.

பிறப்பு, கல்வி

சே. கல்பனா மே 11, 1973-ல் தஞ்சாவூரில் பிறந்தார். தந்தை செல்வம் ஈழம்கொண்டார் , தாய் திலகவதி. தமிழில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தமிழ் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றார்.

தனிவாழ்க்கை

கல்பனா சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். இவர் கணவர் மருத்துவர் சேக்கிழார். சிதம்பரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

சே. கல்பனா நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். இணைய இதழ்கள், நாளிதழ்களில் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். 'சங்ககாலப் புலவர்கள் இரவலர்களா?', 'கலித்தொகை - பதிப்புகள்', 'திருநாவுக்கரசர்', 'புறநாநூற்றில் கல்விச் சிந்தனை', 'சொற்பொழிஞர் அண்ணா' போன்றவை இவர் எழுதிய சில கட்டுரைகள். கா.அப்பாத்துரை எழுதிய மொழியாக்க நூல்களை தொகுத்துள்ளார்.

விருதுகள்

இளம் ஆய்வாளர் விருது 2019

இலக்கிய இடம்

சே.கல்பனா கல்வித்துறை சார்ந்து மரபிலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகிறார்.

நூல் பட்டியல்

  • திருக்குறள் - பரிதியாரின் உரைத்திறன்
  • புறநானூற்றில் தமிழர் வாழ்வியல்
  • கணினியும் கன்னித்தமிழும்
  • ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு
  • அப்பாத்துரையம் (தொகுப்பாசிரியர்)

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2023, 08:32:24 IST