செ.து. சஞ்சீவி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "செ.து.சஞ்சீவி")
 
No edit summary
Line 1: Line 1:
செ.து.சஞ்சீவி
செ.து.சஞ்சீவி (17, அக்டோபர், 1929- 20, மே, 2023) தமிழ்க்கவிஞர், ஆய்வாளர், நூல்பதிப்பாளர். நெடுங்காலம் வெளிவராமல் இருந்த தமிழ் ஒளியின் கவிதைகளையும் படைப்புகளையும் தேடி தொகுத்து வெளியிட்டவர். 
 
== பிறப்பு, கல்வி ==
சஞ்சீவி 17, அக்டோபர், 1929 ல் துரைசாமி - அங்கம்மாள் இணையருக்குப் பிறந்தார்.  எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். 
 
== இலக்கியப்பணி ==
சஞ்சீவி பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டிரருந்தார். அவர் வழியாக கவிஞர் தமிழ்ஒளியைக் கண்டடைந்தார். தமிழின் முதல் தலித் காவியம் என்று கூறப்படும் தமிழ் ஒளியின் வீராயி காவியத்தின் கவிதை வரிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமிழ் ஒளியின் நண்பராக திகழ்ந்தார். தமிழ் ஒளி மனநிலைச் சிக்கலுக்குள்ளாகி மறைந்தமை சஞ்சீவியை பெரிதும் பாதித்தது. தமிழ் ஒளியின் படைப்புகளை தொகுத்து [[மு. வரதராசன்]] , [[கா.அப்பாத்துரை]] போன்றவர்களிடம்  முன்னுரை பெற்று  வெளியிட்டார்.
 
[[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்]], [[தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்]] போன்ற அமைப்புகளின் உதவியுடன் தமிழ் ஒளியின்  பிறந்த நாள், நினைவு நாள் கூட்டங்களை ஒவ்வொரு ஆண்டும் நடத்திவந்தார். புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உதவியுடன் தமிழ்ஒளியின் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வழிவகுத்தார்.

Revision as of 09:28, 16 July 2025

செ.து.சஞ்சீவி (17, அக்டோபர், 1929- 20, மே, 2023) தமிழ்க்கவிஞர், ஆய்வாளர், நூல்பதிப்பாளர். நெடுங்காலம் வெளிவராமல் இருந்த தமிழ் ஒளியின் கவிதைகளையும் படைப்புகளையும் தேடி தொகுத்து வெளியிட்டவர்.

பிறப்பு, கல்வி

சஞ்சீவி 17, அக்டோபர், 1929 ல் துரைசாமி - அங்கம்மாள் இணையருக்குப் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

இலக்கியப்பணி

சஞ்சீவி பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டிரருந்தார். அவர் வழியாக கவிஞர் தமிழ்ஒளியைக் கண்டடைந்தார். தமிழின் முதல் தலித் காவியம் என்று கூறப்படும் தமிழ் ஒளியின் வீராயி காவியத்தின் கவிதை வரிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமிழ் ஒளியின் நண்பராக திகழ்ந்தார். தமிழ் ஒளி மனநிலைச் சிக்கலுக்குள்ளாகி மறைந்தமை சஞ்சீவியை பெரிதும் பாதித்தது. தமிழ் ஒளியின் படைப்புகளை தொகுத்து மு. வரதராசன் , கா.அப்பாத்துரை போன்றவர்களிடம் முன்னுரை பெற்று வெளியிட்டார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புகளின் உதவியுடன் தமிழ் ஒளியின் பிறந்த நாள், நினைவு நாள் கூட்டங்களை ஒவ்வொரு ஆண்டும் நடத்திவந்தார். புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உதவியுடன் தமிழ்ஒளியின் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வழிவகுத்தார்.