under review

கையறு: Difference between revisions

From Tamil Wiki
(changed single quotes)
No edit summary
Line 1: Line 1:
[[File:கையறு.jpg|thumb|கையறு]]
[[File:கையறு.jpg|thumb|கையறு]]
கையறு (2020) மலேசிய எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதிய நாவல். சயாம் மரண ரயில்பாதைத் திட்டத்தின் பின்னணியில் தமிழர்களின் அழிவை கருவாக்கி எழுதப்பட்டது. அந்தக் கருகொண்ட நாவல்களில் முதன்மையானதாக விமர்சகர்களால் கருதப்படுகிறது.
கையறு (2020) மலேசிய எழுத்தாளர் [[கோ. புண்ணியவான்]]எழுதிய நாவல். [[சயாம் மரண ரயில்பாதை|சயாம் மரண ரயில்பாதைத்]] திட்டத்தின் பின்னணியில் தமிழர்களின் அழிவை கருவாக்கி எழுதப்பட்டது. அந்தக் கருகொண்ட நாவல்களில் முதன்மையானதாக விமர்சகர்களால் கருதப்படுகிறது.


(பார்க்க [[சயாம் மரண ரயில்பாதை]] )
(பார்க்க [[சயாம் மரண ரயில்பாதை]] )

Revision as of 07:34, 2 September 2022

கையறு

கையறு (2020) மலேசிய எழுத்தாளர் கோ. புண்ணியவான்எழுதிய நாவல். சயாம் மரண ரயில்பாதைத் திட்டத்தின் பின்னணியில் தமிழர்களின் அழிவை கருவாக்கி எழுதப்பட்டது. அந்தக் கருகொண்ட நாவல்களில் முதன்மையானதாக விமர்சகர்களால் கருதப்படுகிறது.

(பார்க்க சயாம் மரண ரயில்பாதை )

எழுத்து, வெளியீடு

கோ. புண்ணியவான் இந்நாவலை 2020-ல் எழுதினார். அவரே நூலை வெளியிட்டு கேட்பவர்களுக்கு தபால்கள் வழியாகவும் நேரடியாகவும் அனுப்பினார். தமிழகத்தில் இந்நாவலை யாவரும் பதிப்பகம் வினியோகம் செய்தது.

வரலாற்றுப்பின்னணி

மலேசியாவின் தோட்டத்தொழிலாளர்கள் 1850 முதல் தொடர்ச்சியாக இந்தியாவிலிருந்து மலாய் தீபகர்ப்பத்தில் ரப்பர்த் தோட்டங்கள் அமைப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்டவர்கள். அவர்கள் அங்கே கடுமையான ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஆளானார்கள். இரண்டாம் உலகப்போர் மூண்டபோது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை கைவிட்டுவிட்டு விலகிச் செல்ல அவர்கள் ஜப்பானியர்களின் ஆதிக்கத்துக்குக் கீழே சென்றனர். ஜப்பானியர்கள் அவர்களை அடிமைகளாகப் பிடித்து பர்மா ரயில்திட்டத்தில் கடுமையாக உழைக்கவைத்தனர். அங்கிருந்த கொடுமைகளால் 60,000 தமிழர்கள் மடிந்தனர் என சொல்லப்படுகிறது. (பார்க்க சயாம் மரண ரயில்பாதை)

கதைச்சுருக்கம்

கோ.புண்ணியவான் எழுதிய கையறு நாவல் கையறுநிலை என்று தமிழ் மரபிலக்கியம் குறிப்பிடும் உளநிலையை உருவகமாக பயன்படுத்தி எழுதப்பட்டது .ஆட்சியாளர், அரசு என எந்தப் பாதுகாவலும் இல்லாமல் பல்லாயிரம் தமிழ்மக்கள் தங்களுக்கு அன்னியமான நிலத்தில் நிராதரவாக விடப்பட்ட நிலையைச் சித்தரிக்கிறது. இரு கதைக்களங்களாக அமைந்த நாவல் இது. ஒரு களம் சயாம் மரணரயில். இன்னொரு களம் மலாய தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைச்சூழல். முதன்மையாக தோட்டத்தொழிலாளர்களின் நிலைமையையே இது சித்தரிக்கிறது. சயாம் மரணரயில் பணிக்குச் சென்றவர்கள் கொடுமைக்குள்ளாகி அழிந்தனரென்றால் செல்லாது தோட்டத்தில் எஞ்சியவர்களும் அதேபோன்ற அழிவையும் துயரத்தையுமே சந்தித்தனர். போர்முடிந்து தோட்டங்களில் இருந்து திரும்பியவர்கள் தங்கள் தோட்டங்களின் அழிவையே காண்கிறார்கள்.

பெண்கள் தோட்டங்களிலும் ஆண்கள் சயாம் முகாம்களிலும் படும் அவதிகளை கையறு விவரிக்கிறது. நாவலின் தொடக்கத்தில்கரகப்பூசாரி குறிசொல்லும்போதே அம்மக்கள் தெய்வத்தாலும் கைவிடப்பட்டவர்கள் என்று குறிப்புணர்த்தப்பட்டு நாவல் நெடுகிலும் வெள்ளையர், ஜப்பானியர் என மாறி மாறி அம்மக்கள் வதைக்கப்படுவதை மிகையுணர்ச்சியோ, மிகைச்சித்தரிப்போ இல்லாமல் சொல்லிச்செல்கிறது. தோட்டக்காட்டில் உணவுதேடி அலைவது, பெண்கள் ஜப்பானியர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவது, ஜப்பானியர் நிகழ்த்தும் கொலைகள், சயாம் மரணரயில்பாதை அமைக்கச்சென்றவர்கள் நடந்தே ஊர்திரும்புவது, சடலங்களை தூக்கி வீசுமளவுக்கு சாவு பொருளிழந்துபோவது என இந்நாவல் அக்காலத்தின் கையறுநிலையை சீரான கதையோட்டம் வழியாக கூறுகிறது.

இலக்கிய இடம்

சயாம் மரண ரயில்பாதை அமைக்கப்பட்டதை களமாக கொண்ட நாவல்களில் கலைத்திறனால் முதன்மையானதாகக் கருதப்படுவது கோ. புண்ணியவான் எழுதிய கையறு நாவல்.

’தமக்கு நேர்ந்த துன்பங்களையும் அநியாயங்களையும் தடுக்கவியலாத கையறு நிலை மட்டுமின்றி அவற்றை எதிர்கொண்டு மடிந்ததற்கு ஒரு வரலாற்று நியாயம்கூடக் கிட்டாத கையறு நிலையும் அத்தமிழர்களைச் சூழ்ந்திருந்ததைக் கவனப்படுத்தும் விதமாகச் சிறப்பாக அமைந்துள்ளது கையறு நாவல்." என்று சிவானந்தம் நீலகண்டன் மதிப்பிடுகிறார். ’கையறு நாவலின் பலமாக உணர்வது அதன் உரையாடல்களும் நுண்சித்தரிப்புகளும்தான். எல்லா காட்சிகளையும் உயிர்பான உரையாடல்கள் வழியும் சித்தரிப்புகள் வழியும் இயன்ற அளவு அனுபவங்களாக்க  முயன்றுள்ளார்’ என்று அ.பாண்டியன் குறிப்பிடுகிறார்

"இந்நாவல் வரலாற்று நாவல்தான். ஆனால் சயாமில் தண்டவாளம் போடப்பட்ட மொத்த வரலாற்றையும் சொல்லும் நாவலல்ல. கோ.புண்ணியவான் இதை சிதைக்கப்பட்ட மனிதர்களின் வரலாறாகவே கட்டமைத்துள்ளார். அம்மக்களின் வழியாகவே அவர்களின் இயல்புகள் வழியாகவே வரலாற்றைப் புனைந்து செல்கிறார். நெருக்கடியான சூழல், மரணத்தின் அத்தனை கதவுகளையும் திறந்துவைத்துள்ள காலம், நம்பகமற்ற சக மனிதர்கள் எனச் சூழ்ந்துள்ள நிலத்தில் மனிதன் என்னவாகத் தன்னை மாற்றிக்கொள்கிறான் என இன்னொரு உள்ளடுக்கை நாவல் உக்கிரமாகப் பேசுகிறது. அதுவே இப்புனைவுக்கு மலேசிய இலக்கியத்தில் சிறந்த இடத்தை வழங்குகிறது." என்று ம. நவீன் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page