டம்பாச்சாரி விலாசம்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(changed single quotes) |
||
Line 3: | Line 3: | ||
டம்பாச்சாரி விலாசம், 1867-ல் எழுதப்பட்ட ஒரு தமிழ் நாடக நூல். இதனை இயற்றியவர் [[சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார்]]. முதன்முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாக இந்த நாடகம் கருதப்படுகிறது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. | டம்பாச்சாரி விலாசம், 1867-ல் எழுதப்பட்ட ஒரு தமிழ் நாடக நூல். இதனை இயற்றியவர் [[சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார்]]. முதன்முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாக இந்த நாடகம் கருதப்படுகிறது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. | ||
== டம்பாச்சாரி - பெயர் விளக்கம் == | == டம்பாச்சாரி - பெயர் விளக்கம் == | ||
அக்காலத்தில், முன்னோர்கள் சேர்த்துவைத்த செல்வத்தைக் கொண்டு, ஊதாரித்தனமாகச் செலவு செய்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்ற வழக்கத்தை மக்கள், | அக்காலத்தில், முன்னோர்கள் சேர்த்துவைத்த செல்வத்தைக் கொண்டு, ஊதாரித்தனமாகச் செலவு செய்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்ற வழக்கத்தை மக்கள், ''டம்பம் அல்லது டாம்பீகம்’’ - என்று குறிப்பிடுவர். அப்படி டாம்பீகமாக வாழ்ந்த ஒருவனின் கதை தான் ’டம்பாச்சாரி விலாசம்’ . | ||
[[File:Dumabachari-Madahasundari.jpg|thumb|டம்பாச்சாரி சிந்து]] | [[File:Dumabachari-Madahasundari.jpg|thumb|டம்பாச்சாரி சிந்து]] | ||
== நாடகத்தின் கதை == | == நாடகத்தின் கதை == | ||
விசுவநாத முதலியார், தன் காலத்தில் வாழ்ந்த ஒரு டம்பாச்சாரியின் கதையை அடிப்படையாகக் கொண்டு டம்பாச்சாரி விலாசத்தை எழுதினார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாழ்ந்து வந்த பணக்காரர் ஒருவரின் மகன், தாசி மோகத்தால் சீரழிந்துபோன வரலாறுதான் | விசுவநாத முதலியார், தன் காலத்தில் வாழ்ந்த ஒரு டம்பாச்சாரியின் கதையை அடிப்படையாகக் கொண்டு டம்பாச்சாரி விலாசத்தை எழுதினார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாழ்ந்து வந்த பணக்காரர் ஒருவரின் மகன், தாசி மோகத்தால் சீரழிந்துபோன வரலாறுதான் 'டம்பாச்சாரி விலாசம்’. இந்நாடகத்தில் களம், அரங்கம் போன்ற மரபுகள் எதுவும் இல்லை. நாடகத்தில் பாடல்களும் பழமொழிகளும் நகைச்சுவையும் அதிகம் இடம்பெற்றன. | ||
டம்பாச்சாரி விலாசம் முதலில் மேடையில் நடிக்கப்பட்டது. பின் நூலாக வெளிவந்தது. பின் திரைப்படமாகவும் வெளியாகி வெற்றிபெற்றது. | டம்பாச்சாரி விலாசம் முதலில் மேடையில் நடிக்கப்பட்டது. பின் நூலாக வெளிவந்தது. பின் திரைப்படமாகவும் வெளியாகி வெற்றிபெற்றது. | ||
Line 24: | Line 24: | ||
இந்த நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காசி விஸ்வநாத முதலியார் [[பிரம்ம சமாஜ நாடகம்]], [[தாசில்தார் நாடகம்]] என்ற இரண்டு நாடகங்களை எழுதினார். | இந்த நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காசி விஸ்வநாத முதலியார் [[பிரம்ம சமாஜ நாடகம்]], [[தாசில்தார் நாடகம்]] என்ற இரண்டு நாடகங்களை எழுதினார். | ||
டம்பாச்சாரி அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற நாடகமாக விளங்கியது. | டம்பாச்சாரி அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற நாடகமாக விளங்கியது. 'அகத்தியலிங்கக் கவிராயர்’ என்பவர், 'டம்பாச்சாரி மதனசுந்தரி வாக்குவாதம்’ என்பதைத் தனி வினா-விடை நூலாக இயற்றி வெளியிட்டார். திருப்போரூர் டி. கோபால் நாயகர் என்பவர் 'டம்பாச்சாரி சிந்து’ என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார். | ||
[[File:First Social Movie inDumbachari Advt.jpg|thumb|டம்பாச்சாரி - முதல் சமூகத் திரைப்படம்: விளம்பரக் குறிப்பு]] | [[File:First Social Movie inDumbachari Advt.jpg|thumb|டம்பாச்சாரி - முதல் சமூகத் திரைப்படம்: விளம்பரக் குறிப்பு]] | ||
== டம்பாச்சாரி திரைப்படம் == | == டம்பாச்சாரி திரைப்படம் == | ||
டம்பாச்சாரி நாடகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் அது திரைப்படமாகவும் வெளிவந்தது. 1935-ல் ’டம்பாச்சாரி அல்லது உத்தம மனைவி’ என்ற தலைப்பில் இப்படம் வெளியானது. டம்பாச்சாரி நாடகத்தில் நடித்த பாளையங்கோட்டை சகோதரிகளான பி எஸ் ரத்னாபாய், பி எஸ் சரஸ்வதிபாய் சகோதரிகள் | டம்பாச்சாரி நாடகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் அது திரைப்படமாகவும் வெளிவந்தது. 1935-ல் ’டம்பாச்சாரி அல்லது உத்தம மனைவி’ என்ற தலைப்பில் இப்படம் வெளியானது. டம்பாச்சாரி நாடகத்தில் நடித்த பாளையங்கோட்டை சகோதரிகளான பி எஸ் ரத்னாபாய், பி எஸ் சரஸ்வதிபாய் சகோதரிகள் 'டம்பாச்சாரி’ திரைப்படத்திலும் கதாநாயகிகளாக நடித்தனர். | ||
கதாநாயகி பி.எஸ். ரத்னா பாய், தென்னிந்திய நாடக சங்கீத ராணி, ஆர்மோனியச் சக்ரவர்த்தினி என்று போறப்பட்டிருக்கிறார். பி எஸ் சரஸ்வதிபாய் சகலாங்கிருத சங்கீத திலகம்’ என்று பாராட்டப்பட்டிருக்கிறார். படத்தின் கதாநாயகன் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பிரபல சங்கீத வித்வான் மஹாராஜபுரம் விஸ்வநாதய்யரின் சகோதரர். நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் | கதாநாயகி பி.எஸ். ரத்னா பாய், தென்னிந்திய நாடக சங்கீத ராணி, ஆர்மோனியச் சக்ரவர்த்தினி என்று போறப்பட்டிருக்கிறார். பி எஸ் சரஸ்வதிபாய் சகலாங்கிருத சங்கீத திலகம்’ என்று பாராட்டப்பட்டிருக்கிறார். படத்தின் கதாநாயகன் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பிரபல சங்கீத வித்வான் மஹாராஜபுரம் விஸ்வநாதய்யரின் சகோதரர். நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் 'சி.எஸ்.சாமண்னா. இவர், 'இந்தியன் சார்லி’ என்று போற்றப்பட்டவர். படத்தில் 7 வேடங்களில் தோன்றியிருக்கிறார். இயக்கம்: ஹாலிவுட் இயக்குநர் மாணிக்லால் டாண்டன் என்னும் எம்.எல்.டாண்டன். இவர்.எல்லீஸ் ஆர். டங்கனின் குரு மற்றும் நண்பர். | ||
இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்ட போது | இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்ட போது 'பிட் நோட்டீஸ்’களை விமானத்தில் இருந்து வீசி எறிந்தார்கள் என்ற குறிப்பு காணப்படுகிறது. "டம்பாச்சாரி அல்லது உத்தம மனைவி" என்ற இத்திரைப்படம், தமிழின் முதல் சமூகத் திரைப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தமிழின் இரண்டாவது பேசும் படமும் இதுவே. | ||
"டம்பாச்சாரி நாடகம் தான் ரத்தக் கண்ணீர் நாடகம்/சினிமாவின் மூலம் <ref>[https://siliconshelf.wordpress.com/2012/10/29/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/ பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகத்தமிழ்-சிலிகான் ஷெல்ஃப்]</ref> " என்கிறார், ஆர்.வி. | |||
== வரலாற்று இடம் == | == வரலாற்று இடம் == | ||
தமிழின் முதல் சமூக சீர்திருத்த நாடகமாக | தமிழின் முதல் சமூக சீர்திருத்த நாடகமாக 'டம்பாச்சாரி விலாசம்’ மதிப்பிடப்படுகிறது. இதன் திரைப்பட விளம்பரக் குறிப்பில் ’தமிழின் முதல் சமூகத் திரைப்படம்’ என்ற குறிப்பு காணப்படுகிறது. | ||
இராஜாம்பாள், இராஜேந்திரா, மோகன சுந்தரம், [[மேனகா]], பம்பாய் மெயில், வித்தியா சாகரர் போன்ற அந்தக் காலத்து நாடகங்கள் பலவற்றிற்கும் முன்னோடி | இராஜாம்பாள், இராஜேந்திரா, மோகன சுந்தரம், [[மேனகா]], பம்பாய் மெயில், வித்தியா சாகரர் போன்ற அந்தக் காலத்து நாடகங்கள் பலவற்றிற்கும் முன்னோடி 'டம்பாச்சாரி’ தான். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://archive.org/details/dli.rmrl.015256 டம்பாச்சாரி விலாசம்:ஆர்கைவ் தளம்] | * [https://archive.org/details/dli.rmrl.015256 டம்பாச்சாரி விலாசம்:ஆர்கைவ் தளம்] |
Revision as of 09:10, 23 August 2022
டம்பாச்சாரி விலாசம், 1867-ல் எழுதப்பட்ட ஒரு தமிழ் நாடக நூல். இதனை இயற்றியவர் சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார். முதன்முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாக இந்த நாடகம் கருதப்படுகிறது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது.
டம்பாச்சாரி - பெயர் விளக்கம்
அக்காலத்தில், முன்னோர்கள் சேர்த்துவைத்த செல்வத்தைக் கொண்டு, ஊதாரித்தனமாகச் செலவு செய்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்ற வழக்கத்தை மக்கள், டம்பம் அல்லது டாம்பீகம்’’ - என்று குறிப்பிடுவர். அப்படி டாம்பீகமாக வாழ்ந்த ஒருவனின் கதை தான் ’டம்பாச்சாரி விலாசம்’ .
நாடகத்தின் கதை
விசுவநாத முதலியார், தன் காலத்தில் வாழ்ந்த ஒரு டம்பாச்சாரியின் கதையை அடிப்படையாகக் கொண்டு டம்பாச்சாரி விலாசத்தை எழுதினார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாழ்ந்து வந்த பணக்காரர் ஒருவரின் மகன், தாசி மோகத்தால் சீரழிந்துபோன வரலாறுதான் 'டம்பாச்சாரி விலாசம்’. இந்நாடகத்தில் களம், அரங்கம் போன்ற மரபுகள் எதுவும் இல்லை. நாடகத்தில் பாடல்களும் பழமொழிகளும் நகைச்சுவையும் அதிகம் இடம்பெற்றன.
டம்பாச்சாரி விலாசம் முதலில் மேடையில் நடிக்கப்பட்டது. பின் நூலாக வெளிவந்தது. பின் திரைப்படமாகவும் வெளியாகி வெற்றிபெற்றது.
டம்பாச்சாரி நாடகக் குழுவினர்
’டம்பாசாரி விலாசம்’ நாடகத்தை,
- மதுரை தத்துவ மீனலோசனி வித்வ பாலசபா
- வேலூர் நாராயணசாமி பிள்ளை
- ஆலந்தூர் ஒரிஜனல் டிராமாடிக் கம்பெனி
- மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி
- சிலோன் சாயபு கம்பெனி
- மிஸ். P. பாலாமணி அம்மாள் கம்பெனி
- ராஜாம்பாள் கம்பெனி
- சாமண்ணா ஐயர்
- ராகவய்யா
- போன்றோர் நாடகமாக நடத்தியுள்ளனர். இந்த நாடகம் பிரிட்டிஷ் அரசால் சில காலம் தடை செய்யப்பட்டு, பின் தடை விலக்கம் செய்யப்பட்டது.
இந்த நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காசி விஸ்வநாத முதலியார் பிரம்ம சமாஜ நாடகம், தாசில்தார் நாடகம் என்ற இரண்டு நாடகங்களை எழுதினார்.
டம்பாச்சாரி அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற நாடகமாக விளங்கியது. 'அகத்தியலிங்கக் கவிராயர்’ என்பவர், 'டம்பாச்சாரி மதனசுந்தரி வாக்குவாதம்’ என்பதைத் தனி வினா-விடை நூலாக இயற்றி வெளியிட்டார். திருப்போரூர் டி. கோபால் நாயகர் என்பவர் 'டம்பாச்சாரி சிந்து’ என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார்.
டம்பாச்சாரி திரைப்படம்
டம்பாச்சாரி நாடகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் அது திரைப்படமாகவும் வெளிவந்தது. 1935-ல் ’டம்பாச்சாரி அல்லது உத்தம மனைவி’ என்ற தலைப்பில் இப்படம் வெளியானது. டம்பாச்சாரி நாடகத்தில் நடித்த பாளையங்கோட்டை சகோதரிகளான பி எஸ் ரத்னாபாய், பி எஸ் சரஸ்வதிபாய் சகோதரிகள் 'டம்பாச்சாரி’ திரைப்படத்திலும் கதாநாயகிகளாக நடித்தனர்.
கதாநாயகி பி.எஸ். ரத்னா பாய், தென்னிந்திய நாடக சங்கீத ராணி, ஆர்மோனியச் சக்ரவர்த்தினி என்று போறப்பட்டிருக்கிறார். பி எஸ் சரஸ்வதிபாய் சகலாங்கிருத சங்கீத திலகம்’ என்று பாராட்டப்பட்டிருக்கிறார். படத்தின் கதாநாயகன் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பிரபல சங்கீத வித்வான் மஹாராஜபுரம் விஸ்வநாதய்யரின் சகோதரர். நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் 'சி.எஸ்.சாமண்னா. இவர், 'இந்தியன் சார்லி’ என்று போற்றப்பட்டவர். படத்தில் 7 வேடங்களில் தோன்றியிருக்கிறார். இயக்கம்: ஹாலிவுட் இயக்குநர் மாணிக்லால் டாண்டன் என்னும் எம்.எல்.டாண்டன். இவர்.எல்லீஸ் ஆர். டங்கனின் குரு மற்றும் நண்பர்.
இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்ட போது 'பிட் நோட்டீஸ்’களை விமானத்தில் இருந்து வீசி எறிந்தார்கள் என்ற குறிப்பு காணப்படுகிறது. "டம்பாச்சாரி அல்லது உத்தம மனைவி" என்ற இத்திரைப்படம், தமிழின் முதல் சமூகத் திரைப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தமிழின் இரண்டாவது பேசும் படமும் இதுவே.
"டம்பாச்சாரி நாடகம் தான் ரத்தக் கண்ணீர் நாடகம்/சினிமாவின் மூலம் [1] " என்கிறார், ஆர்.வி.
வரலாற்று இடம்
தமிழின் முதல் சமூக சீர்திருத்த நாடகமாக 'டம்பாச்சாரி விலாசம்’ மதிப்பிடப்படுகிறது. இதன் திரைப்பட விளம்பரக் குறிப்பில் ’தமிழின் முதல் சமூகத் திரைப்படம்’ என்ற குறிப்பு காணப்படுகிறது.
இராஜாம்பாள், இராஜேந்திரா, மோகன சுந்தரம், மேனகா, பம்பாய் மெயில், வித்தியா சாகரர் போன்ற அந்தக் காலத்து நாடகங்கள் பலவற்றிற்கும் முன்னோடி 'டம்பாச்சாரி’ தான்.
உசாத்துணை
- டம்பாச்சாரி விலாசம்:ஆர்கைவ் தளம்
- தாய்நாட்டிலும் மேலை நாடுகளிலும் தமிழியல் ஆய்வு: தமிழ் இணைய நூலகம்
- சமுதாய இலக்கியம்:தமிழ் இணைய நூலகம்
- விலாச நாடகங்கள்: தமிழ் இணையக் கல்விக் கழகம்
- டம்பாச்சாரி சிந்து
- தமிழ் நாடகம்: தோற்றமும் வளர்ச்சியும்
- நாடகக் கலை-அவ்வை டி.கே. சண்முகம்
- நாடகக் கலை மற்றும் நாடகக் கலை ஆசிரியர்கள்
- டம்பாச்சாரி - சமகால வாழ்க்கையைப் பேசிய படம்:தீக்கதிர் கட்டுரை
இணைப்புக் குறிப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.