ஆதவன் (எழுத்தாளர்): Difference between revisions
(changed single quotes) |
|||
Line 11: | Line 11: | ||
பள்ளி பருவத்தில் கல்வி, விளையாட்டு என்று எதிலும் தன்னுடைய தனித்தன்மையை வெளிக்காட்ட முடியாமையால் உருவான தனிமையை போக்கிக்கொள்ள ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது நண்பன் ஒருவனோடு இணைந்து 'அணுகுண்டு' என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார். | பள்ளி பருவத்தில் கல்வி, விளையாட்டு என்று எதிலும் தன்னுடைய தனித்தன்மையை வெளிக்காட்ட முடியாமையால் உருவான தனிமையை போக்கிக்கொள்ள ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது நண்பன் ஒருவனோடு இணைந்து 'அணுகுண்டு' என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார். | ||
'சிங்கராஜ குமாரி’, 'கானகத்தின் நடுவே’ ஆகிய சிறுகதை தொகுப்புகள் சிறார் இலக்கிய பங்களிப்பு. 1962-ல் கல்லூரி காலகட்டத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆனார். [[ஆனந்த விகடன்]] இதழில் தாஜ்மகாலில் ஒரு பௌர்ணமி இரவு சிறுகதை முத்திரைக்கதையாக வெளிவந்தது. தொடர்ந்து விகடனில் கதைகள் எழுதினார். அதை தொடர்ந்து [[நா. பார்த்தசாரதி]] நடத்திய [[தீபம்]] இதழிலும் கதைகள் வெளிவந்தன. ஆதவனின் முதல் நாவலான 'காகித மலர்கள்' தீபம் இதழில் தொடராக வெளிவந்தது.1977 ல் நூல்வடிவு கொண்டது. | |||
[[இந்திரா பார்த்தசாரதி]] மற்றும் [[அசோகமித்திரன்]] இவருக்கு அணுக்கமான மூத்த படைப்பாளிகள். டெல்லியில் பணியாற்றும்போது [[தி.ஜானகிராமன்]] நெருக்கமானவராக இருந்தார். | [[இந்திரா பார்த்தசாரதி]] மற்றும் [[அசோகமித்திரன்]] இவருக்கு அணுக்கமான மூத்த படைப்பாளிகள். டெல்லியில் பணியாற்றும்போது [[தி.ஜானகிராமன்]] நெருக்கமானவராக இருந்தார். 'காகித மலர்கள்’, 'என் பெயர் ராமசேஷன்’ ஆகிய முக்கியமான நாவல்கள் இரண்டும் டெல்லியை கதைகளமாக கொண்டவை. 'ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்’, 'முதலில் இரவு வரும்’, 'சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்', 'லேடி’ போன்ற சிறுகதைகள் விமர்சகர்களால் முதன்மையாக பரிந்துரைக்கபடும் படைப்புகள். | ||
இந்திய பெருநகர வாழ்க்கை சூழலை கதைக்களமாக கொண்ட இவரது படைப்புகள் உயர்குடிப் பண்பாட்டில் உள்ள அபத்தங்களை உளவியல்பார்வையில் நேரடியாகச் சித்தரிப்பவை. வாழ்க்கையில் மனித அகம் செய்யும் பாவனைகள் சுயஏமாற்றுகளை பகுத்தாயும் விதத்தில் உளவியல் அணுகுமுறையோடு விவரித்து காட்டிய படைப்பாளி. நகர் வாழ்க்கையின் நவீனத்திற்குள் தங்களை முழுவதும் பொருத்திகொள்ளமுடியாமல் மரபின் ஆசாரத்துக்குள்ளும் இருந்துவிடமுடியாத மத்தியதர இளைஞர்கள் மற்றும் மனிதர்களின் உள்முரண்கள் பதிவானது இவருடைய படைப்புலகம். | இந்திய பெருநகர வாழ்க்கை சூழலை கதைக்களமாக கொண்ட இவரது படைப்புகள் உயர்குடிப் பண்பாட்டில் உள்ள அபத்தங்களை உளவியல்பார்வையில் நேரடியாகச் சித்தரிப்பவை. வாழ்க்கையில் மனித அகம் செய்யும் பாவனைகள் சுயஏமாற்றுகளை பகுத்தாயும் விதத்தில் உளவியல் அணுகுமுறையோடு விவரித்து காட்டிய படைப்பாளி. நகர் வாழ்க்கையின் நவீனத்திற்குள் தங்களை முழுவதும் பொருத்திகொள்ளமுடியாமல் மரபின் ஆசாரத்துக்குள்ளும் இருந்துவிடமுடியாத மத்தியதர இளைஞர்கள் மற்றும் மனிதர்களின் உள்முரண்கள் பதிவானது இவருடைய படைப்புலகம். | ||
Line 21: | Line 21: | ||
* மறைவுக்கு பின், 1987-ஆம் ஆண்டு 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. | * மறைவுக்கு பின், 1987-ஆம் ஆண்டு 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
"1967-ஆம் ஆண்டு. மிகக் குறுகிய இடைவெளியில் 'இண்டர்வியூ', 'அப்பர் பெர்த்' என அவருடைய இரு பக்குவமிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்தரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இருபது ஆண்டுகளில் அவர் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை." என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். | |||
ஆதவன் அவருடைய இரு நாவல்களுக்காகவே பொதுவாக நினைவுகூரப்படுகிறார். காகிதமலர்கள், என் பெயர் ராமசேஷன் என்னும் இரு நாவல்களும் வெளிப்படையான உளவியல் அலசலும் பகடிப்பார்வையும் கொண்டவை. நகர்ப்புற நடுத்தரவர்க்கத்து படித்த பிராமணர்களின் உளவியல் தருணங்கள் அவற்றில் இருப்பதனால் அவை இலக்கியத்தன்மை அடைகின்றன. | ஆதவன் அவருடைய இரு நாவல்களுக்காகவே பொதுவாக நினைவுகூரப்படுகிறார். காகிதமலர்கள், என் பெயர் ராமசேஷன் என்னும் இரு நாவல்களும் வெளிப்படையான உளவியல் அலசலும் பகடிப்பார்வையும் கொண்டவை. நகர்ப்புற நடுத்தரவர்க்கத்து படித்த பிராமணர்களின் உளவியல் தருணங்கள் அவற்றில் இருப்பதனால் அவை இலக்கியத்தன்மை அடைகின்றன. |
Revision as of 09:01, 23 August 2022
To read the article in English: Aadhavan.
ஆதவன் (மார்ச் 21, 1942 - ஜூலை 19, 1987) தமிழ் எழுத்தாளர். அறுபதுகளுக்கு பின் எழுதத்துவங்கி, பெருநகர வாழ்வின் நுணுக்கங்களை உளவியல் நோக்கில் எழுதியவர். தேசியப் புத்தக நிறுவனத்தில் பணியாற்றினார்.
பிறப்பு, கல்வி
இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். மார்ச் 21, 1942 அன்று பிறந்தார். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி. டெல்லியில் தன் கல்லூரி படிப்பை முடித்தார்.
தனிவாழ்க்கை
இந்திய ரயில்வேயில் ஏழு ஆண்டுகாலம் வேலை செய்தார். 1975 முதல் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தமிழ் பிரிவில் துணையாசிரியராக டெல்லியிலும், 1984-க்கு பின் பெங்களூரிலும் பணி புரிந்தார்.
1976-ல் திருமணம். மனைவி ஹேமா. இவர் ஆதவனின் மறைவுக்கு பின் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் தனக்கு கிடைத்த பணியை தொடர்ந்தார். மகள்கள் சாருமதி, நீரஜா.
இலக்கிய வாழ்க்கை
பள்ளி பருவத்தில் கல்வி, விளையாட்டு என்று எதிலும் தன்னுடைய தனித்தன்மையை வெளிக்காட்ட முடியாமையால் உருவான தனிமையை போக்கிக்கொள்ள ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது நண்பன் ஒருவனோடு இணைந்து 'அணுகுண்டு' என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார்.
'சிங்கராஜ குமாரி’, 'கானகத்தின் நடுவே’ ஆகிய சிறுகதை தொகுப்புகள் சிறார் இலக்கிய பங்களிப்பு. 1962-ல் கல்லூரி காலகட்டத்தில் எழுத்தாளராக அறிமுகம் ஆனார். ஆனந்த விகடன் இதழில் தாஜ்மகாலில் ஒரு பௌர்ணமி இரவு சிறுகதை முத்திரைக்கதையாக வெளிவந்தது. தொடர்ந்து விகடனில் கதைகள் எழுதினார். அதை தொடர்ந்து நா. பார்த்தசாரதி நடத்திய தீபம் இதழிலும் கதைகள் வெளிவந்தன. ஆதவனின் முதல் நாவலான 'காகித மலர்கள்' தீபம் இதழில் தொடராக வெளிவந்தது.1977 ல் நூல்வடிவு கொண்டது.
இந்திரா பார்த்தசாரதி மற்றும் அசோகமித்திரன் இவருக்கு அணுக்கமான மூத்த படைப்பாளிகள். டெல்லியில் பணியாற்றும்போது தி.ஜானகிராமன் நெருக்கமானவராக இருந்தார். 'காகித மலர்கள்’, 'என் பெயர் ராமசேஷன்’ ஆகிய முக்கியமான நாவல்கள் இரண்டும் டெல்லியை கதைகளமாக கொண்டவை. 'ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்’, 'முதலில் இரவு வரும்’, 'சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்', 'லேடி’ போன்ற சிறுகதைகள் விமர்சகர்களால் முதன்மையாக பரிந்துரைக்கபடும் படைப்புகள்.
இந்திய பெருநகர வாழ்க்கை சூழலை கதைக்களமாக கொண்ட இவரது படைப்புகள் உயர்குடிப் பண்பாட்டில் உள்ள அபத்தங்களை உளவியல்பார்வையில் நேரடியாகச் சித்தரிப்பவை. வாழ்க்கையில் மனித அகம் செய்யும் பாவனைகள் சுயஏமாற்றுகளை பகுத்தாயும் விதத்தில் உளவியல் அணுகுமுறையோடு விவரித்து காட்டிய படைப்பாளி. நகர் வாழ்க்கையின் நவீனத்திற்குள் தங்களை முழுவதும் பொருத்திகொள்ளமுடியாமல் மரபின் ஆசாரத்துக்குள்ளும் இருந்துவிடமுடியாத மத்தியதர இளைஞர்கள் மற்றும் மனிதர்களின் உள்முரண்கள் பதிவானது இவருடைய படைப்புலகம்.
மறைவு
ஜூலை 19, 1987 அன்று சிருங்கேரியில் துங்க (பத்ரா) நதியின் சுழலில் சிக்கி உயிர் இழந்தார்.
விருது
- மறைவுக்கு பின், 1987-ஆம் ஆண்டு 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
இலக்கிய இடம்
"1967-ஆம் ஆண்டு. மிகக் குறுகிய இடைவெளியில் 'இண்டர்வியூ', 'அப்பர் பெர்த்' என அவருடைய இரு பக்குவமிக்க சிறுகதைகளைப் படித்து, இவ்வளவு துல்லியமாகவும், சத்தியம் தொனிக்கவும் தற்கால இந்தியாவின் படித்த இளைஞர் மனத்தைச் சித்தரிக்க முடியுமா என்று வியந்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இந்த இருபது ஆண்டுகளில் அவர் மனிதனாகவும், எழுத்தாளனாகவும் ஒருமுறைகூட என் வியப்பையும் மதிப்பையும் பெறாமலிருந்ததில்லை." என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்.
ஆதவன் அவருடைய இரு நாவல்களுக்காகவே பொதுவாக நினைவுகூரப்படுகிறார். காகிதமலர்கள், என் பெயர் ராமசேஷன் என்னும் இரு நாவல்களும் வெளிப்படையான உளவியல் அலசலும் பகடிப்பார்வையும் கொண்டவை. நகர்ப்புற நடுத்தரவர்க்கத்து படித்த பிராமணர்களின் உளவியல் தருணங்கள் அவற்றில் இருப்பதனால் அவை இலக்கியத்தன்மை அடைகின்றன.
படைப்புகள்/நூல்கள்
சிறுகதை தொகுப்பு
- கனவுக்குமிழிகள் - 1975
- கால் வலி - 1975
- ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - 1980
- புதுமைப்பித்தனின் துரோகம் - 1981
- முதலில் இரவு வரும் - 1985
- நிழல்கள்
- ஆதவன் சிறுகதைகள் - முழுதொகுப்பு
நாடகம்
- புழுதியில் வீணை
குறுநாவல்
- இரவுக்கு முன்பு வருவது மாலை
- சிறகுககள்
- மீட்சியைத் தேடி
- கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
- நதியும் மலையும்
- பெண், தோழி, தலைவி
நாவல்
- காகித மலர்கள் - 1977
- என் பெயர் ராமசேஷன் - 1980
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
- என் பெயர் ராமசேஷன்- ரஷ்ய மொழி, Vitaliy Furnika
உசாத்துணை
- நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - எழுத்தாளர் ஜெயமோகன்
- காகித மலர்கள் - ஒரு மதிப்பீடு தி.க.சிவசங்கரன்
- தவிர்க்க முடியவில்லை -ஆதவன் & ஆதவன் - அசோகமித்திரன்
- Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ஆதவன்
- ஆதவனின் புனைவுலகம், வெ.சுரேஷ், சொல்வனம்.காம், ஜூலை 2012
- அகவுலக ஆய்வாளன் - பா. ராகவன்
- ஆதவன் இந்து கட்டுரை
- சுந்தர ராமசாமி கலைகள் கதைகள் சிறுகதைகள்
✅Finalised Page