தேவனார்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
; Added info on Finalised date |
||
| Line 27: | Line 27: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|21-Jan-2025, 19:10:10 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 01:04, 22 January 2025
தேவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
தேவனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடலில் சோழ தேசத்து ஆர்க்காடு இடம்பெறுவதால் தேவனார் ஆர்க்காட்டைச் சேர்ந்தவர் என கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
தேவனார் பாடிய பாடல் நற்றிணையில் 227-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான காதல் உறவு ஊராருக்கு தெரிந்து அலர் பேச்சாக இருப்பதால் தலைவி கொடுந்துயரில் உள்ளாள் என்பதை தோழி தலைவனிடம் கூறுவதாக நெய்தல் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- புன்னை மரங்கள் நிறைந்த கடற்கரை சோலையில் காதலர் கூடி மகிழ்வர்.
- யானைகள் பட்டத்தில் அணிந்த தலைமணி ஒலிக்க சோழர்கள் உலாச்செல்லும் தலைநகரம் ஆர்க்காடு.
- காட்டு பூக்களில் கள் போன்ற தேனை சேகரிக்க வரும் பறவைகளை போல தேரோடும் ஆர்க்காட்டு தெருக்களில் காதலர் குறித்த அலர் செய்தி பேசப்படுகிறது.
- உரிய காலத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்யாதவர்கள் அறிவிருந்தாலும் அறமற்றவர்களாவர்.
பாடல் நடை
நற்றிணை - 227
- திணை: நெய்தல்
- துறை: வரையாது நெடுங்காலம் வந்தொழுகத் தோழி தலைமகனை வரைவுமுடுகச் சொல்லியது.
அறிந்தோர் அறனிலர் என்றலர் சிறந்த
இன்னுயிர் கழியினும் நனியின் னாதே
புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த
பின்ஈர் ஓதியென் தோழிக்கு அன்னோ
படுமணி யானைப் பசும்பூண் சோழர்
கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள்ளுடைத் தடவின் புள்ளொலித்து ஓவாத்
கௌவையா கின்றது ஐயநின் அருளே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- நற்றிணை - 227:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:10:10 IST