கிள்ளிமங்கலங் கிழார்மகனார் சோகோவனார்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page) |
(Corrected Category:புலவர்கள் to Category:புலவர்) |
||
| Line 30: | Line 30: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:புலவர்]] | ||
Revision as of 12:11, 17 November 2024
- கிள்ளிமங்கலம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிள்ளிமங்கலம் (பெயர் பட்டியல்)
To read the article in English: Killimangalan Kilarmaganar Cherakovanar.
கிள்ளிமங்கலங் கிழார்மகனார் சோகோவனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
சோகோவனார், கிள்ளிமங்கலங் கிழாரின் மகன். பாண்டிய நாட்டைச் சேர்ந்த கிள்ளிமங்கலம் என்ற ஊரில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் (365) குறிஞ்சித்திணை பாடலாக உள்ளது.
பாடல் நடை
- நற்றிணை 365
அருங் கடி அன்னை காவல் நீவி,
பெருங் கடை இறந்து, மன்றம் போகி,
பகலே, பலரும் காண, வாய் விட்டு
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி,
சென்மோ வாழி- தோழி!- பல் நாள்
கருவி வானம் பெய்யாதுஆயினும்,
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை,
'சான்றோய் அல்லை' என்றனம் வரற்கே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:17 IST