ஹிரியண்ணா: Difference between revisions

From Tamil Wiki
Jeyamohan (talk | contribs)
No edit summary
Jeyamohan (talk | contribs)
No edit summary
Line 1: Line 1:
[[File:Hiriyanna (Portrait 2)-001.webp|thumb|ஹிரியண்ணா]]
[[File:Hiriyanna (Portrait 2)-001.webp|thumb|ஹிரியண்ணா]]
[[File:Hiriyanna.jpg|thumb|ஹிரியண்ணா]]
[[File:800px-M. Hiriyanna's family L to R Wife Lakshmidevamma & Daughter Rukkamma.jpg|thumb|ஹிரியண்ணா மனைவி, மகள்]]
[[File:M. Hiriyanna with A. R. Wadia & S. Radhakrishnan.jpg|thumb|ஹிரியண்ணா மைசூர் பல்கலையில் ராதாகிருஷ்ணன், வாடியாவுடன்]]
ஹிரியண்ணா: ) பேராசிரியர் மைசூர் ஹிரியண்ணா. எம்.ஹிரியண்ணா : இந்திய தத்துவ ஆய்வாளர், கல்வியாளர்.
ஹிரியண்ணா: ) பேராசிரியர் மைசூர் ஹிரியண்ணா. எம்.ஹிரியண்ணா : இந்திய தத்துவ ஆய்வாளர், கல்வியாளர்.


பிறப்பு, கல்வி
== பிறப்பு, கல்வி ==
 
ஹிரியண்ணா மைசூரில்  7 மே 1871 ல் எம். நஞ்சுண்டய்யா மற்றும் லட்சுமிதேவி ஆகியோருக்குப்பிறந்தார்.
ஹிரியண்ணா மைசூரில்  7 மே 1871 ல் எம். நஞ்சுண்டய்யா மற்றும் லட்சுமிதேவி ஆகியோருக்குப்பிறந்தார்.



Revision as of 16:52, 13 November 2024

ஹிரியண்ணா
ஹிரியண்ணா
ஹிரியண்ணா மனைவி, மகள்
ஹிரியண்ணா மைசூர் பல்கலையில் ராதாகிருஷ்ணன், வாடியாவுடன்

ஹிரியண்ணா: ) பேராசிரியர் மைசூர் ஹிரியண்ணா. எம்.ஹிரியண்ணா : இந்திய தத்துவ ஆய்வாளர், கல்வியாளர்.

பிறப்பு, கல்வி

ஹிரியண்ணா மைசூரில் 7 மே 1871 ல் எம். நஞ்சுண்டய்யா மற்றும் லட்சுமிதேவி ஆகியோருக்குப்பிறந்தார்.

ஹிரியண்ணா மைசூரில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். பேரிஸ்வாமி திருமலாச்சார்யா ,காசி சேஷராமசாஸ்திரி ஆகியோரிடம் சமஸ்கிருதம் கற்றார். ஹிரியண்ணா இளங்கலை தத்துவம், முதுகலை தத்துவம் ஆகியவற்றை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார். அங்கே வில்லியம் மில்லர் அவருக்கு ஆசிரியராக இருந்தார்.

பட்டப்படிப்பு முடித்தபின் இடைக்காலம் மைசூரில் பணியாற்றிவிட்டு சென்னைக்கு சென்று பயிற்றியியலில் எல்.டி. பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

எம்.ஹிரியண்ணா லட்சுமிதேவம்மாவை பட்டப்படிப்பு படிக்கும்போதே மணந்துகொண்டார். அவர்களுக்கு ருக்கம்மா என்ற பெண் குழந்தை இருந்தது.

கல்விப்பணி

ஹிரியண்ணா மைசூர் கீழைத்தேய நூலகத்தில் (மைசூர் ஓரியண்டல் லைப்ரரி)யில் நூலகராக 1891ல் பணிக்குச் சேர்ந்தார். (இன்றைய ​​ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்) . ஹிரியண்ணா ஆசிரியர் பயிற்சி பெற்றபின் 1896ல் அரசுப்பள்ளி ஆசிரியராகச் சேர்ந்தார். 1907ல் தலைமை ஆசிரியராக ஆனார்.

மைசூர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் எச்.வி. நஞ்சுண்டய்யாவின் பரிந்துரையின் பேரில், ஹிரியண்ணா 1912 இல் மைசூர் மகாராஜா கல்லூரியில் சமஸ்கிருத விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். ஹிரியண்ணா 1914 இல் சமஸ்கிருத உதவிப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

எம். ஹிரியண்ணா 1919 ஆம் ஆண்டு மைசூர் மகாராஜா கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பதவியேற்றார். எட்டு ஆண்டுகள் சம்ஸ்கிருதப் பேராசிரியராகப் பதவி வகித்து 1927 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

இலக்கிய நட்புகள்

மைசூர் மகாராஜா கல்லூரியில் தத்துவவியல் துறையின் தலைவராக இருந்த ஏ.ஆர்.வாடியாவுடன் அணுக்கமாக இருந்தார். அப்போது சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனும் மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப்பேராசிரியராக இருந்தார். ஹிரியண்ணா மைசூரில் பணியாற்றிய பாலக்காடு நாராயண சாஸ்திரியுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். ஹிரியண்ணா புகழ்பெற்ற சமஸ்கிருத அறிஞரான குப்புசுவாமி சாஸ்திரியுடனும் மதராஸில் கடிதப் பரிமாற்றம் செய்து வந்தார். எம். ஹிரியண்ணாவின் மறைவுக்குப் பிறகு, மயிலாப்பூரில் உள்ள "குப்புசுவாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு" அவரது புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

ஆய்வுப்பணிகள்

ஹிரியண்ணா இந்தியவியல் ஐரோப்பாவில் தோன்றி வலுப்பெற்றுவிட்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இந்தியவியலில் இந்தியர்களின் பங்களிப்பு நிகழத்தொடங்கிய காலகட்டத்தில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். ஆகவே ஐரோப்பிய இந்தியவியலாளர்களின் பார்வையை விரிவாக்கியும், தேவையான இடங்களில் மறுதலித்தும் தன் பார்வைகளை முன்வைத்தார். ஐரோப்பியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட மேலைத்தத்துவம் சார்ந்த ஆய்வுமுறையை இந்திய தத்துவசிந்தனைமேல் செலுத்தியவர்களில் ஒருவர்.

ஹிரியண்ணாவின் மேலைத்தத்துவம் சார்ந்த ஆய்வுநோக்கு சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் , ஏ.ஆர். வாடியா ஆகியோர் ஊக்கமளித்தனர். இந்திய மரபார்ந்த பார்வைக்கு பாலக்காடு நாராயண சாஸ்திரி, குப்புசுவாமி சாஸ்திரி ஆகியோர் உதவினார்கள். மைசூர் கீதைத்தேய நூலகத்தில் பணியாற்றியதனால் ஏராளமான மூலநூல்களை பயில அவருக்கு வாய்ப்பு அமைந்தது. 1653 அச்சுப்பிரதிகளையும் 1358 ஓலைச்சுவடிகளையும் பழங்கால சமஸ்கிருதம் மற்றும் கன்னடத்தில் இருந்து பதிப்பிப்பதில் அவர் பங்களிப்பாற்றினார்.

பயிற்றியல்

அத்துடன் ஹிரியண்ணா இந்திய கல்விமுறையை உருவாக்குவதிலும் பங்களிப்பாற்றிய முன்னோடி.'கற்பித்தல் கலை' [போதன க்ரமம் - 1906] என்னும் ஆய்வுக்கட்டுரை ஹிரியண்ணாவை ஆய்வுலகம் கவனிக்க வைத்தது. எஸ். ராதாகிருஷ்ணன் எம். ஹிரியண்ணாவின் வகுப்பறைக் குறிப்புகளை புத்தக வடிவில் வெளியிட ஆலன் & அன்வின் வெளியீட்டாளர்களுக்கு பரிந்துரைத்தார், அது "இந்திய தத்துவத்தின் வரைவுச்சித்திரம்" (Outlines of Indian Philosophy) என்றபேரில் வெளிவந்தது.

பதிப்பு.உரை

ஹிரியண்ணா பழைய சம்ஸ்கிருத நூல்களை ஆய்வுரையுடன் பதிப்பித்தார். ஈஸாவாஸ்யோபனிஷத் (1911), கேனோபநிஷத் (1912), கட உபனிஷத் (1915) ஆகிய நீள்கட்டுரைகள் வெளியாயின. 1919 இல் பிரதாரண்யகோபநிஷத் - பாகம் 1 வெளிவந்தது. இந்திய சிந்தனையின் பல்வேறு சிந்தனைமரபுகளைப் பற்றி விரிவான கட்டுரைகளை வெளியிட்டார், அவை பின்னர் நூல்களாக ஆயின.

அழகியல்

சமஸ்கிருத மொழியியலில் பயிற்சி கொண்டிருந்த ஹிரியண்ணா சம்ஸ்கிருத இலக்கணம் மற்றும் பிறமொழிகளுடனனான ஒப்பீட்டாய்வு ஆகியவை சார்ந்து ஏராளமாக எழுதியுள்ளார். சம்ஸ்கிருத கலைக்கொள்கைகளான அலங்கார சாஸ்திரம், த்வனி கோட்பாடு சார்ந்தும் எழுதியுள்ளார்.

மொழியாக்கம்

ஹிரியண்ணா பாசனின் ஸ்வப்ன வாசவதத்தை நூலை The Dream Queen என்ற பேரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.

தத்துவநூல்கள்

அத்வைதத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஹிரியண்ணார் நைஷ்காமிய சித்தி, வேதாந்த சார, இஷ்டசித்தி போன்ற அத்வைத நூல்களை எழுதினார். இம்மானுவேல் காண்ட் மீது பெரும் பற்று கொண்டிருந்த ஹிரியண்ணா தத்துவத்தின் நோக்கம் (1960) என்னும் நூலில் காண்டின் தத்துவங்களை விவாதிக்கிறார்.

ஏற்புகள்

1935 ஆம் ஆண்டு மைசூரில் நடைபெற்ற அகில இந்திய கீழையியல் மாநாட்டிற்கு ஹிரியண்ணா தலைமை தாங்கினார்.

1939 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய தத்துவ மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்

1940 இல், மதராஸில் தத்துவம் பற்றி வில்லியம் மில்லர் நினைவு விரிவுரையை வழங்கினார்.

1940ல் மெட்ராஸ் சமஸ்கிருத அகாடமி அவருக்கு "சம்ஸ்க்ருதசேவாதுரினா" என்ற பட்டத்தை வழங்கியது.