under review

வட்டுக்கோட்டை குருமடம்: Difference between revisions

From Tamil Wiki
m (Reverted edits by Tambot1 (talk) to last revision by Logamadevi)
Tags: Rollback Reverted
(Reviewed by Je)
Tag: Manual revert
Line 44: Line 44:
* [https://www.slembassyusa.org/srilanka_us_relations/historical_context.html Embassy of Sri Lanka - Washington DC, USA]
* [https://www.slembassyusa.org/srilanka_us_relations/historical_context.html Embassy of Sri Lanka - Washington DC, USA]


{{first review completed}}
{{finalised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 01:18, 2 May 2022

அமெரிக்க மிஷன்

வட்டுக்கோட்டை குருமடம் (Batticotta Seminary, வட்டுக்கோட்டை செமினரி, பட்டிக்கோட்டா செமினாரி) (1823-1850) இலங்கையில் இருந்த கிறிஸ்தவக் கல்வி நிறுவனம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்ற ஊரில் 1823-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது அமெரிக்க இலங்கை மிசனினால் ஆரம்பிக்கப்பட்டது. இது 1855-ஆம் ஆண்டில் மூடப்பட்டது.

வரலாறு

ஜாஃப்னா காலேஜ், பழைய வட்டுக்கோட்டை செமினாரி

வட்டுக்கோட்டை குருமடம் அமெரிக்க மிஷன் அமைப்பொன்றால் (American Board of Commissioners for Foreign Missions - ABCFM) யாழ்ப்பாணம் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் ஜூலை 2, 1823- ல் தொடங்கப்பட்டது. மதப்பரப்புநரும் மருத்துவருமான ஜான் ஸ்கட்டர் (John Scudder, Sr) அவர்களின் அமைப்புக்கு துணையமைப்பாக இது ஆரம்பிக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் டேனியல் பூர் முக்கியமான பங்கு வகித்தார். அமெரிக்காவில் இருந்து கிறிஸ்தவர்கள் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு பத்து டாலர் வீதம் அனுப்ப ஒப்புக்கொண்டு 200 பேர் பணமனுப்பினர். அதன் அடிபப்டையில் இந்த குருமடம் உருவாக்கப்பட்டது. வெவ்வேறு மிஷன் பள்ளிகளில் படித்த 120 மாணவர்களில் சிறந்த 40 பேர் இதில் சேர்க்கப்பட்டார்கள்.

வட்டுக்கோட்டை குருமடம் ஆசியாவில் உருவாக்கப்பட்ட முதல் கிறிஸ்தவ உயர்கல்வி அமைப்பு. இதற்குப்பின்னர் கொற்றாவில் சேட்சுமிஷன் செமினாரி 1927-ல் தொடங்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்குப் பின் வெஸ்லியன் செமினாரி (பின்னர் மத்தியக்கல்லூரி)-யும், 18 ஆண்டுகளுக்குப் பின் சுண்டிக்குழி செமினாரி (இப்போது செயின்ட் யோன்ஸ் கல்லூரி) யும் தொடங்கப்பட்டன.

நேதன் வார்ட் (Nathan Ward) இதை தனி கல்வியமைப்பாக முன்னெடுத்தார். 1846-ல் யாழ்ப்பானத்தில் தீவிரமான காலரா தொற்று நோய் பரவியது. அப்போது சிறிது காலம் மூடப்பட்டிருந்தது. டேனியல் பூர் (Dr. Daniel Poor) இதன் முதல் முதல்வர். திசேரா காபிரியேல் பிள்ளை முதல் ஆசிரியர். இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் சம்ஸ்கிருதம்,எபிரேயம், லத்தீன் சொல்லிக்கொடுக்கப்பட்டன. குறிப்பாக தமிழின் பண்டைய இலக்கியங்கள், திருக்குறள் முதலிய நீதிநூல்கள், இலக்கணங்கள் தகுந்த பண்டிதர்களால் விரிவாக கற்பிக்கப்பட்டன.

வட்டுக்கோட்டை செமினாரியின் பணிகள் வெற்றிபெறவே பெண்களுக்கென ஒரு கல்விநிலையத்தை உடுவில் என்னுமிடத்தில் தொடங்கினர். உடுவில் பெண்பாடசாலையில் குறைவாகவே இந்துப் பெண்கள் பயிலவந்தனர். மதம் மாறியவர்களின் பெண்குழந்தைகளே மிகுதியும் அங்கே பயின்றனர். வெவ்வேறு கிறிஸ்தவ பள்ளிகளில் இருந்து 30- பெண்குழந்தைகளை அங்கே சேர்த்து பயிற்றுவித்தனர்.

டேனியல் பூர்

பணிகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டு கல்வியாளரான எமெர்சன் டென்னெட் (Emerson Tennent ) அக்காலத்தில் ஐரோப்பாவில் இருந்த பல கல்வி நிலையங்களுக்கு நிகரான கல்வி அங்கே அளிக்கப்பட்டதாகச் சொல்கிறார். சி.எஸ்.ஐ அமைப்பின் ஜாஃப்னா டயோசிஸின் முதல் பிஷப் ஆன சபாபதி குபேந்திரன் வட்டுக்கோட்டை குருமடம் செயல்பட்டபோது கல்வியிலும் கிறிஸ்தவ மதமாற்றத்திலும் மிகப்பெரிய எழுச்சி இருந்ததாகச் சொல்கிறார்.

வட்டுக்கோட்டை குருமடம் நவீன ஆங்கிலக் கல்வியை அளித்தது. அக்கல்வி பெற்றவர்கள் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றுவது எளிதாக இருந்தது. ஆகவே ஏராளமான இந்தியர்கள், குறிப்பாக யாழ்ப்பாண உயர்குடிச் சைவர்கள், வட்டுக்கோட்டை குருமடத்தில் சேர்ந்து கல்வி கற்றனர். அவர்களில் ஏராளமானவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர்.

எதிர்ப்பு

வட்டுக்கோட்டை குருமடத்துடன் தொடர்பில் இருந்த நல்லூர் ஆறுமுக நாவலர் பின்னர் தீவிரமான சைவ மீட்பு இயக்கத்தை முன்னெடுத்தார். கிறிஸ்தவ மதம் மீது கடுமையான கண்டனங்களும் தொடுத்தார். விளைவாக கிறிஸ்தவ மதமாற்றம் குறைந்தது. வட்டுக்கோட்டை குருமடத்தில் பயின்றவர்கள் பெயரை மட்டும் கிறிஸ்தவப்பெயராக மாற்றிக்கொண்டு சைவர்களாக நீடித்தனர். கல்வி கற்றபின் மீண்டும் சைவர்களாக ஆனார்கள். ஆகவே அந்நிறுவனத்தின் நோக்கம் நிறைவேறவில்லை.

இ.பி.ஹேஸ்டிங்ஸ்

மூடப்படுதல்

தொடர்ச்சியான நிதிச்சிக்கல்களால் இ.பி.ஹேஸ்டிங்ஸ் (E. P. Hastings) தலைவராக இருந்தபோது வட்டுக்கோட்டை குருமடம் 1855-ல் மூடப்பட்டது. வட்டுக்கோட்டை குருமடத்தின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து ஜூலை 3, 1972-ல் அக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீண்டும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.இ.பி.ஹேஸ்டிங்ஸ் அதன் முதல் முதல்வராக ஆனார். யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் இன்று பெரிய நிறுவனமாகச் செயல்படுகிறது.

முதன்மை ஆளுமைகள்

வட்டுக்கோட்டை குருமடத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற ஆளுமைகள்

இதழியல்

  • ஈழத்தின் முதல் தமிழ் இதழ் என கருதப்படும் உதயதாரகை வட்டுக்கோட்டை குருமடத்துடன் தொடர்புடையது

யாழ்ப்பாணக் கல்லூரி

யாழ்ப்பாணக் கல்லூரி 1872 முதல் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகிறது

உசாத்துணை


✅Finalised Page