கிருஷ்ணமணி: Difference between revisions
(Added links to Disambiguation page) |
(Corrected the links to Disambiguation page) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|கிருஷ்ண|[[கிருஷ்ண (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=கிருஷ்ண|DisambPageTitle=[[கிருஷ்ண (பெயர் பட்டியல்)]]}} | ||
[[File:Writer krishnamani.jpg|thumb|எழுத்தாளர் கிருஷ்ணமணி]] | [[File:Writer krishnamani.jpg|thumb|எழுத்தாளர் கிருஷ்ணமணி]] | ||
கிருஷ்ணமணி (மணி; மணி சாஸ்திரி) (ஆகஸ்ட் 09, 1935 - ஆகஸ்ட் 07, 2010) எழுத்தாளர், நாடக நடிகர், கதாசிரியர், இயக்குநர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாடகங்களையும் எழுதினார். | கிருஷ்ணமணி (மணி; மணி சாஸ்திரி) (ஆகஸ்ட் 09, 1935 - ஆகஸ்ட் 07, 2010) எழுத்தாளர், நாடக நடிகர், கதாசிரியர், இயக்குநர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாடகங்களையும் எழுதினார். | ||
Revision as of 18:35, 27 September 2024
- கிருஷ்ண என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிருஷ்ண (பெயர் பட்டியல்)
கிருஷ்ணமணி (மணி; மணி சாஸ்திரி) (ஆகஸ்ட் 09, 1935 - ஆகஸ்ட் 07, 2010) எழுத்தாளர், நாடக நடிகர், கதாசிரியர், இயக்குநர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாடகங்களையும் எழுதினார்.
பிறப்பு, கல்வி
மணி என்னும் இயற்பெயரை உடைய கிருஷ்ணமணி ஆகஸ்ட் 09, 1935 அன்று, தமிழ்நாட்டின் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள சோளிங்கபுரத்தில், கிருஷ்ணசாமி சாஸ்திரி – சம்பூர்ணம் இணையருக்குப் பிறந்தார். உள்ளூரில் பள்ளிக்கல்வியையும் உயர் கல்வியையும் கற்றார். பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
கிருஷ்ணமணி, மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
கிருஷ்ணமணி, கல்கியின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். 1952 முதல் எழுதத் தொடங்கினார். ’மணி சாஸ்திரி’ என்ற பெயரில் எழுதினார். பின் தந்தையின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு ‘கிருஷ்ணமணி’ என்ற பெயரில் எழுதினார். கட்டுரைகள் மற்றும் வரலாற்றுச் சிறுகதைகள் கொண்ட கிருஷ்ணமணியின் படைப்புகள் தொடக்கத்தில் ஸ்ரீ ராமகோபாலன் பதிப்பித்த ‘தியாக பூமி’ இதழில் வெளியாகின. கலைமகள் கி. வா. ஜகந்நாதனும், கல்கி ராஜேந்திரனும் கிருஷ்ணமணியை ஊக்குவித்தனர். கலைமகளிலும், கல்கியிலும் பல சிறுகதைகளை எழுதினார்.
கிருஷ்ணமணி பிற இதழ்களிலும் பல சிறுகதைகளை எழுதினார். அமுதசுரபி, இதயம் பேசுகிறது, கணையாழி போன்ற இதழ்களில் கிருஷ்ணமணியின் சிறுகதைகள் வெளியாகின. கிருஷ்ணமணி பல இலக்கிய நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
கிருஷ்ணமணியின் முதல் நாவல், ‘பாரிஜாதங்கள் மலர்கின்றன’, 1978-ல் அமுதசுரபியில் வெளியாகி சிறந்த நாவலுக்கான விருது பெற்றது. ஆனந்த விகடனின் பொன்விழாக் கொண்டாட்டத்தின்போது கிருஷ்ணமணி எழுதிய ‘வேர்கள்’ நாவல், சிறந்த சமூக நாவலுக்கான விருது பெற்றது.
கிருஷ்ணமணியின் கடைசி நாவல், ’மனித பந்தங்கள்’ 1995-ல் வெளியானது. இரண்டாம் உலகப் போரை அடிப்படையாக் கொண்டு எழுதப்பட்ட அந்த நாவலுக்குப் பிறகு நாவல்கள் எதையும் கிருஷ்ணமணி எழுதவில்லை.
நாடகம்
கிருஷ்ணமணி 1958 முதல் மேடை நாடகங்களில் நடித்தார். உலக நாடகங்களால் ஈர்க்கப்பட்டு, ’உலக நாடக இலக்கியம்’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். 1962-ல், கிருஷ்ணமணி எழுதிய ‘சமர்ப்பணம்’ என்னும் நாடகம் அரங்கேற்றமானது. அதற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து பல நாடகங்களைத் தயாரித்து, கதை-வசனம் எழுதி இயக்கினார். கிருஷ்ணமணி எழுதி, சேவா ஸ்டேஜின் எஸ்.வி. சகஸ்ரநாமத்தால் மேடையேற்றப்பட்ட ‘சத்ய தரிசனம்’ நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கிருஷ்ணமணி எழுதிய கடைசி நாடகமான ‘நந்தா விளக்கு’ ஸேவா ஸ்டேஜ் அமைப்பால் மேடையேற்றப்பட்டது.
விருதுகள்
- சிறந்த நாவலுக்கான விருது – ‘பாரிஜாதங்கள் மலர்கின்றன’ நாவல்
- சிறந்த சமூக நாவலுக்கான விருது – ’வேர்கள்’ நாவல்
- அகில இந்திய வானொலியின், சிறந்த நாடகத்திற்கான விருது – ’எழுத்து’ நாடகம்
மறைவு
ஆகஸ்ட் 07, 2010 அன்று கிருஷ்ணமணி காலமானார்.
மதிப்பீடு
கிருஷ்ணமணியின் படைப்புகளில் பெரும்பாலானவை மத்திய தர மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை. அவர்களது பிரச்சனைகள், துயரங்கள், ஏமாற்றங்கள், வாழ்க்கைச் சவால்களைப் பேசியவை. பொது வாசிப்புக்குரிய பல கதைகளை எழுதியவராகவும், தேவையற்ற வர்ணனைகளத் தவிர்த்து, கதைக்கு எது தேவையோ அவற்றை யதார்த்த மொழியில் கூறிய எழுத்தாளராகவும் கிருஷ்ணமணி மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- வேர்கள்
- பிணைப்பு
- ஒரு காதல் ஒரு வைராக்கியம்
- பாரிஜாதங்கள் மலர்கின்றன
- உலக நாடக இலக்கியம்
- கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – முழுமை
- கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – காத்திருத்தல்
- கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – கர்னல் வீடு
- கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – ஒரு சந்திப்பு
- கிருஷ்ணமணியின் சிறுகதைகள் - பிஞ்ஜ்ராபோல்
- கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – பிள்ளைவரம்
- கிருஷ்ணமணியின் சிறுகதைகள் – இறக்கைகள்
- கிருஷ்ணமணியின் சிறுகதைத் தொகுப்பு – பாகம் 1
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 18:54:16 IST