கமலா விருத்தாசலம்: Difference between revisions
(Added links to Disambiguation page) |
(Corrected the links to Disambiguation page) |
||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|கமலா|[[கமலா (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=கமலா|DisambPageTitle=[[கமலா (பெயர் பட்டியல்)]]}} | ||
{{Read English|Name of target article=Kamala Virudhachalam|Title of target article=Kamala Virudhachalam}} | {{Read English|Name of target article=Kamala Virudhachalam|Title of target article=Kamala Virudhachalam}} | ||
[[File:கமலா அம்மாள் 1.jpg|thumb|கமலா விருத்தாச்சலம்]] | [[File:கமலா அம்மாள் 1.jpg|thumb|கமலா விருத்தாச்சலம்]] |
Revision as of 18:16, 27 September 2024
- கமலா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கமலா (பெயர் பட்டியல்)
To read the article in English: Kamala Virudhachalam.
கமலா விருத்தாச்சலம் (1917- 1995) தமிழில் கதைகள் எழுதிய எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவி.
பிறப்பு, கல்வி
1917-ல் திருவனந்தபுரத்தில், பொதுப் பணித்துறையில் புகழ்பெற்ற ஒப்பந்ததாரராகத் திகழ்ந்த பி.டி.சுப்ரமணிய பிள்ளைக்கு பிறந்தார். திருவனந்தபுரத்தில் பள்ளியிறுதி வரை பயின்றார்.
தனி வாழ்க்கை
தன் பதினைந்தாம் வயதில் 1932-ல் சொ.விருத்தாச்சலம் (புதுமைப்பித்தன்)-த்தை மணந்தார். தினகரி என்று ஒரு மகள். புதுமைப்பித்தன் 1948-ல் மறைந்தார்.
இலக்கிய வாழ்க்கை
1935-க்குப் பின் எழுதத் தொடங்கிய கமலா விருத்தாச்சலம் தினமணி, கிராம ஊழியன் இதழ்களில் கதைகளை வெளியிட்டார். ’வாழ்வில் தனக்கு ஒரு நியதி, மனைவிக்கு ஒரு நியதி என்பதே அவரிடம் கிடையாது. அவர் உயிரோடு இருந்த காலங்களில் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே கிடையாது. பேச்சென்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். சில நாள்கள் இரவு 2 மணி வரையிலும் பேசிக்கொண்டிருப்போம். புத்தகங்கள், எழுத்தாளர்கள், இலக்கியம், கவிதை, கதை, குடும்ப விஷயம் எனப் பல விவரங்கள் பேச்சில் வந்து போகும். எதைப் பற்றிப் பேசினாலும் சுவைபடப் பேசுவார். என்னையும் ஏதாவது கதை எழுது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நல்ல நிஜமான, சாகாத கதைகளை உன்னால் எழுத முடியும். நீயும் எழுத்தில் என் கூட தொடர்ந்து வர வேண்டும் என்பதே எனது ஆசை என்பார்' என்று தன் கணவர் புதுமைப்பித்தனைப் பற்றிய தன் நினைவுகளை கமலா விருத்தாசலம் எழுதியுள்ளார் (புதுமைப்பித்தனின் `சம்சார பந்தம்’ என்னும் நூல்)
கமலாவின் முதல் சிறுகதை 'முதலைச் சட்டை’ 1936-ல் மணிக்கொடியில் வெளியானது. மணிக்கொடியில் காசுமாலை, குழந்தை மீனாள், காதல் பூர்த்தி உள்ளிட்ட வேறு சிறுகதைகளையும் எழுதினார். இவர் எழுதிய சிறுகதைகள் "காசுமாலை” என்னும் பெயரில் நூலாக 1971-ம் ஆண்டில் வந்துள்ளது. கிராம ஊழியன், தினமணி போன்ற இதழ்களில் எழுதினார். புதுமைப்பித்தன் இவருக்கு எழுதிய 'கண்மணி கமலாவுக்கு’ என்ற நூல் புகழ்பெற்றது.
மறைவு
1995-ம் ஆண்டில் உடல் நலிவுற்று காலமானார்.
நூல்கள்
சிறுகதைகள்
- முதலைச்சட்டை
- காசுமாலை
- குழந்தை மீனாள்
- காதல் பூர்த்தி
பிற
- புதுமைப்பித்தனின் சம்சாரபந்தம்
- கண்மணி கமலாவுக்கு (புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்கள்)
உசாத்துணை
- திறந்த ஜன்னல் கமலா விருத்தாச்சலம்
- வீடில்லாப் புத்தகங்கள் : வானத்து அமரன்! - எஸ்.ராமகிருஷ்ணன் | hindutamil.in
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:27 IST