பொன்னாகனார்: Difference between revisions

From Tamil Wiki
Ramya (talk | contribs)
Created page with "பொன்னாகனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == பொன்னா..."
 
Ramya (talk | contribs)
No edit summary
Line 20: Line 20:
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisai362.pdf பேயனார் முதலிய புலவர்கள்: புலவர் கா.கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்]
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisai362.pdf பேயனார் முதலிய புலவர்கள்: புலவர் கா.கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்]


{{Being created}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 06:03, 13 September 2024

பொன்னாகனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பொன்னாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

பொன்னாகனார் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் 114-வது பாடலாக உள்ளது. தோழி கூற்றாக அமைந்த இப்பாடல் நெய்தல் திணையைச் சேர்ந்தது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நெய்தல் நிலத்தில் சிறிய வீடுகட்டி உணவு சமைத்து பாவையைத் தன் சிறு பிள்ளையாக கற்பனை செய்து விளையாடும் விளையாட்டை இளம்பெண்கள் விளையாடுவர். அவ்வாறு பாவை விளையாடும் தோழி தலைவன் தலைவியை சந்தித்து முடித்த பின் அவளை அங்கு அனுப்பி வைக்குமாறு தலைவனை வேண்டுவதாக பாடல் அமைந்துள்ளது.
  • ஆரல் மீனை உண்ணும் நாரைகள் பற்றிய குறிப்பு உள்ளது.

பாடல் நடை

  • குறுந்தொகை - 114

(திணை: நெய்தல்)

நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க
செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.