தென்னாட்டுப் போர்க்களங்கள்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 24: | Line 24: | ||
* [http://siragu.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/ தென்னாட்டுப் போர்க்களங்கள், கட்டுரை] | * [http://siragu.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/ தென்னாட்டுப் போர்க்களங்கள், கட்டுரை] | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 22:26, 16 April 2022
தென்னாட்டுப் போர்க்களங்கள் (1961) கா. அப்பாத்துரை எழுதிய வரலாற்று விவரிப்பு நூல். சங்ககாலம் தொட்டு தமிழக நிலத்தில் நடந்த போர்களை இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு சித்தரித்திருக்கிறார்.
வெளியீடு
1961-ல் இந்நூலை கா.அப்பாத்துரை எழுதினார். 1971-ல் அவரே அலமேலு நிலைய வெளியீடாக விரிவான முன்னுரையுடன் வெளியிட்டார்.
உள்ளடக்கம்
தென்னாட்டுப் போர்க்களங்கள் கீழ்க்கண்ட அத்தியாயங்கள் கொண்ட நூல்
- வீரமரபு
- வான விளிம்பு
- அகல் உலகத் தொடர்பு
- வடதிசைத் தொடர்புகள்
- சங்ககாலப் போர்கள், 3 பகுதிகள்
- பேரரசுப் போட்டி
- சோழப்பெரும்பேரரசு
- தேசியவாழ்வும் புதுமறுமலர்ச்சியும்
இவற்றில் கா.அப்பாத்துரை தமிழகத்தில் தொல்சான்றாதாரங்கள் கிடைக்காத முற்சங்க காலத்தை நூலாதாரங்களைக் கொண்டு அணுகுகிறார். சங்ககாலத்தில் நிகழ்ந்த போர்கள், பேரரசுகள் உருவாதல் ஆகியவற்றை விரித்துரைத்து சோழர்காலத்திய போர்களை விளக்குகிறார். ஆங்கிலேய ஆட்சிக்காலத்து போர்கள் , 1947- வரையிலான விடுதலைப்போராட்டங்கள் வரையிலான போர்களின் சித்திரம் இந்நூலில் உள்ளது.
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.