under review

இரா. முத்துநாகு: Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
(Added First published date)
Line 31: Line 31:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.jeyamohan.in/140135/ எட்டு நாவல்கள்: ஜெயமோகன்]
* [https://www.jeyamohan.in/140135/ எட்டு நாவல்கள்: ஜெயமோகன்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|20-Sep-2022, 05:35:40 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 16:52, 13 June 2024

இரா. முத்துநாகு

இரா. முத்துநாகு (பிறப்பு: ஜூன் 15, 1967) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், ஊடகவியலாளர், ஆய்வாளர். சுளுந்தீ நாவல் மூலம் அறியப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இரா. முத்துநாகு தேனி, வைகை குரும்பபட்டியில் பண்டுவர் இராமக் கோனார், கோவிந்தம்மாள் இணையருக்கு ஜூன் 15, 1967-ல் பிறந்தார். ரெங்கசமுத்திரத்தில் பள்ளிக் கல்வி பயின்றார். 1985 - 1988-ல் மதுரை யாதவர் கல்லூரியில் விலங்கியலில் பட்டம் பெற்றார். சென்னை கிண்டி அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் டிப்ளமோ போட்டோகிராபி பயின்றார்.

தனிவாழ்க்கை

இரா. முத்துநாகு மே 26, 1998-ல் தீபா வன்னிச்சியை திருமணம் செய்து கொண்டார். மகள் வைக்கம் நாகமணி, மகன் நூலகன் குப்புசாமி. விவசாயம் மற்றும் புகைப்படக்கலையில் ஈடுபட்டிருக்கிறார். 2021-ல் ஆண்டிப்பட்டிக்கு குடிபெயர்ந்தார்.

இதழியல் வாழ்க்கை

முத்துநாகு 1991 முதல் இதழியலாளராகவும், ஆவணப்புகைப்படக்காரராகவும் பணியாற்றினார். தினமலர், விகடன் , மல்லிகை மகள், ஜன்னல் பத்திரிக்கையில் நிருபராக பணியாற்றினார். புலனாய்வுச் செய்தியாளராக மேற்குத்தொடர்ச்சி மலையில் சாகுபடி செய்த கஞ்சா உற்பத்தியை வெளிக்கொணர்ந்தார். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விரிவான களஆய்வு மேற்கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

இரா. முத்துநாகுவின் முதல் படைப்பு ”சுளுந்தீ” நாவல் 2019-ல் வெளியானது. பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டது. தமிழ் நிலத்தின் பூர்வக்குடிகள் வெளியேற்றப்பட்ட கதையை இங்குள்ள பல இனக்குழுக்களின் பண்பாட்டுக் கதைகளுடனும் அவர்கள் கொண்டிருந்த பாரமபரிய அறிவுடன் எழுதினார். 481 மருத்துவக் குறிப்புகளுடன் மூன்று தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்ட சித்த மருத்துவக் குறிப்புகளை 'குப்பமுனி' நூலாக எழுதினார்.

இலக்கிய இடம்

"இந்நாவலை ‘நாட்டார் கலைகளஞ்சியத் தன்மை’ (encyclopedic) கொண்ட நாவல் என வகைப்படுத்தலாம். நாட்டார் வரலாற்றுக் கோணத்தில் தமிழில் எழுதப்பட்ட முன்னோடி நாவல் என கி.ராவின் கோபல்ல நாவல்களைக் குறிப்பிடலாம். பூமணி, கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால் உட்பட வெவ்வேறு நிலம் சார்ந்த எழுத்தாளர்கள் நாட்டார் கூறுகளைக் கதையில் கையாண்டுள்ளார்கள். அடிப்படையில் இவர்கள் நவீன இலக்கியவாதிகள்தான். கதைக்குத் தேவையான அளவு அதன் ஆழத்தை அதிகரிக்க நாட்டார் கூறுகளைப் பயன்படுத்தி உள்ளார்கள். பூமணியின் ‘அஞ்ஞாடி’ ஒரு புதிய உடைப்பை நிகழ்த்தியது. நாட்டார் நோக்கில் மகாபாரதத்தை அணுகிய ‘கொம்மை’ அதன் அடுத்தக்கட்ட பரிணாமம் எனச் சொல்லலாம். நவீன இலக்கிய அழகியலுக்கு ஒரு மாற்றாக நாட்டார் அழகியலை உருவாக்கும் முயற்சி. அவ்வரிசையில் முழுக்க முழுக்க நாட்டார் அழகியல் கூறுகள் கொண்ட வரலாற்று நாவல் என்பதே சுளுந்தீயின் முக்கியத்துவம்." என எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

"பக்கம் பக்கமாக அறியப்படாத செய்திகளுடன் ஓர் ஆவணத்தொகையெனவே அமைக்கப்பட்டுள்ள முத்துநாகுவின் சுளுந்தீ அவ்வகையில் கி.ரா உருவாக்கிய அழகியலில் ஒரு முன்னோக்கிய நகர்வு. இச்செய்திகளில் பெரும்பாலானவை நாட்டாரியலில் இருந்து பெறப்பட்டவை. நாட்டாரியலில் செய்திகள் தொன்மத்துக்கும் நம்பிக்கைக்கும் தரவுகளுக்கும் நடுவே ஊசலாடுபவை. நாட்டுமருத்துவம், மந்திரவாதம், குலக்கதைகள், சிறுதெய்வக்கதைகள் என அவை விரிந்து கிடக்கின்றன. சுளுந்தீ அவற்றை ஒட்டுமொத்தமாக தொகுத்து ஓர் இணைவரலாற்றுப் படலமாக நெய்கிறது." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

விருது

  • ”சுளுந்தீ” நாவல் 2019-ல் ஆனந்தவிகடனின் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது.

நூல் பட்டியல்

  • சுளுந்தீ (2019: நாவல்)
  • குப்பமுனி (2022: உயிர் பதிப்பகம்)

இணைப்புகள்

உரைகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Sep-2022, 05:35:40 IST