being created

இருபா இருபது (அருணந்தி சிவாசாரியார்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 3: Line 3:
==ஆசிரியர்==
==ஆசிரியர்==

இருபா இருபது நூலின் ஆசிரியர் [[அருணந்தி சிவாசாரியார்]].  ‘சகலாகம பண்டிதர்’ என அழைக்கப்பட்டர். இவர் சகல ஆகமங்களிலும் வல்லவராய் திகழ்ந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம். திருத்துறையூரில்  ஆதிசைவ அந்தணக் குலத்தில் பிறந்தவர். அச்சுத களப்பாளரின் வம்சாவளிக்கு குலகுருவாக இருந்தவர்.  
இருபா இருபது நூலின் ஆசிரியர் [[அருணந்தி சிவாசாரியார்]].  ‘சகலாகம பண்டிதர்’ என அழைக்கப்பட்டர். திருத்துறையூரில்  ஆதிசைவ அந்தணக் குலத்தில் பிறந்தவர். அச்சுத களப்பாளரின் வம்சாவளிக்கு குலகுருவாக இருந்தவர்.

[[மெய்கண்டார்]] இவரது குரு.
[[மெய்கண்டார்|மெய்கண்டா]]ரின் தலைமை மாணாக்கர்.
==நூல் அமைப்பு==
==நூல் அமைப்பு==
சைவ சித்தாந்த உண்மைகளைக் கூறும் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகிய இருபா இருபது 20 பாடல்களைக் கொண்ட சிறு நூல்.   பத்து வெண்பாக்களும், பத்து ஆசிரியப்பக்காளும் மாறி மாறி வரும்படி  அமையும்  [[இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)|இருபா இருபஃது]] என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது.  
சைவ சித்தாந்த உண்மைகளைக் கூறும் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகிய இருபா இருபது 20 பாடல்களைக் கொண்ட சிறு நூல். பத்து வெண்பாக்களும், பத்து ஆசிரியப்பாக்களும் மாறி மாறி வரும்படி  அமையும்  [[இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)|இருபா இருபஃது]] என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது.  

அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான மெய்கண்ட தேவர் பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது. இது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களினதும் இயல்புகளை விளக்குகிறது. இத்‌ திருப்பாக்கள்‌ யாவும்‌ பாச லட்சணல்தைப்‌ பகுத்து வினாவிடை வடிவில்‌ செப்புகின்றன என்பர்‌. பதிஞான நிலபேறடைவோர்‌, பாசஞானத்து
அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான மெய்கண்ட தேவர் பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது. இது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களினதும் இயல்புகளை விளக்குகிறது. இப்பாக்கள்‌  பாசத்தின்(பற்று) தன்மைகளை பாச உண்மை, பாச இலக்கணம்‌, பாச நீக்க சாதனம்‌, பாச நீக்கப்‌ பேறு என்னும்‌ நான்கு வகைகளில் பகுத்து வினாவிடை வடிவில்‌ கூறுகின்றன. முதல் இரு பாடல்கள் குருவணக்கமாக அமைகின்றன.
 
ஆணவத்தின் எட்டு இயல்பும், மாயையின் ஏழு இயல்பும், கர்மத்தின் ஆறு இயல்புகளும் இந்நூலில்  கூறப்பட்டுள. சைவத் திருமுறைகளில் இடம்பெறும் கண்பாரார் கண்ணுதலாய் காட்டக்காலே” ,“உன்னிலுண்ணும் ஊண்ணாவிடில் விட்டிடும்” என்பவற்றிற்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. திருநிலனாய்த் தீயாகி” என்று தொடங்கும் [[திருநாவுக்கரசர்|அப்பர்]], திருத்தாண்டகத்திற்கும் “ஆட்பாலவர்க்கருளும் ஆதிமாண்பும்” என்னும் [[திருஞான சம்பந்தர்|திருஞானசம்பந்தர்]] பாடலுக்கும் பொருள் விளக்கம் இடம் பெறுகிறது.

====== சில வினாக்கள் ======
====== சில வினாக்கள் ======
Line 19: Line 21:

மலங்கள்‌ அஞ்ஞான வண்ணத்தன; ஆகையாலே இறைவன்‌ முன்னர்‌ இவை நில்லா, அடிமையாகிய ஆன்மாவுக்கு சுதந்திரமாகப் பார்க்கும்‌ அறிவு இல்லை. ஆதலால்‌ ஆன்மா இருள்‌ எனப்படும்‌ அஞ்ஞானத்தை எப்படிக்‌ காணமுடியும்‌?
மலங்கள்‌ அஞ்ஞான வண்ணத்தன; ஆகையாலே இறைவன்‌ முன்னர்‌ இவை நில்லா, அடிமையாகிய ஆன்மாவுக்கு சுதந்திரமாகப் பார்க்கும்‌ அறிவு இல்லை. ஆதலால்‌ ஆன்மா இருள்‌ எனப்படும்‌ அஞ்ஞானத்தை எப்படிக்‌ காணமுடியும்‌?
ஆணவத்தின் எட்டு இயல்பும், மாயையின் ஏழு இயல்பும், கர்மத்தின் ஆறு இயல்பும் இதன்கண் கூறப்பட்டுள. சைவத் திருமுறைகளுள் விளங்கும் அருட்தொடர்களாகிய “கண்பாரார் கண்ணுதலாய் காட்டக்காலே” “உன்னிலுண்ணும் ஊண்ணாவிடில் விட்டிடும்” என்பவற்றிற்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. திருநிலனாய்த் தீயாகி” என்று தொடங்கும் அப்பர், திருத்தாண்டகத்திற்கும் “ஆட்பாலவர்க்கருளும் ஆதிமாண்பும்” என்னுந் திருஞானசம்பந்தர் திருப்பாசுரத்திற்கும் பொருள் விளக்கம் பாராட்டத்தகும் முறையிற் செய்யப்பட்டுள்ளது. இச் சிறுநூல் மெய்கண்டாரது பெருஞ்சிறப்பினை அறிவிக்கும் பெருமையூடையது.

==உரைகள்==
==உரைகள்==

Revision as of 05:31, 14 April 2024

இருபா இருபது(பொ.யு. பதினொன்றாம் நூற்றாண்டு) சைவ சித்தாந்த மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்று. அருணந்தி சிவாசாரியார் இயற்றியது. வினா-விடையாக அமைந்தது.

ஆசிரியர்

இருபா இருபது நூலின் ஆசிரியர் அருணந்தி சிவாசாரியார். ‘சகலாகம பண்டிதர்’ என அழைக்கப்பட்டர். திருத்துறையூரில் ஆதிசைவ அந்தணக் குலத்தில் பிறந்தவர். அச்சுத களப்பாளரின் வம்சாவளிக்கு குலகுருவாக இருந்தவர்.

மெய்கண்டாரின் தலைமை மாணாக்கர்.

நூல் அமைப்பு

சைவ சித்தாந்த உண்மைகளைக் கூறும் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகிய இருபா இருபது 20 பாடல்களைக் கொண்ட சிறு நூல். பத்து வெண்பாக்களும், பத்து ஆசிரியப்பாக்களும் மாறி மாறி வரும்படி அமையும் இருபா இருபஃது என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது.

அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான மெய்கண்ட தேவர் பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது. இது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களினதும் இயல்புகளை விளக்குகிறது. இப்பாக்கள்‌ பாசத்தின்(பற்று) தன்மைகளை பாச உண்மை, பாச இலக்கணம்‌, பாச நீக்க சாதனம்‌, பாச நீக்கப்‌ பேறு என்னும்‌ நான்கு வகைகளில் பகுத்து வினாவிடை வடிவில்‌ கூறுகின்றன. முதல் இரு பாடல்கள் குருவணக்கமாக அமைகின்றன.

ஆணவத்தின் எட்டு இயல்பும், மாயையின் ஏழு இயல்பும், கர்மத்தின் ஆறு இயல்புகளும் இந்நூலில் கூறப்பட்டுள. சைவத் திருமுறைகளில் இடம்பெறும் கண்பாரார் கண்ணுதலாய் காட்டக்காலே” ,“உன்னிலுண்ணும் ஊண்ணாவிடில் விட்டிடும்” என்பவற்றிற்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. திருநிலனாய்த் தீயாகி” என்று தொடங்கும் அப்பர், திருத்தாண்டகத்திற்கும் “ஆட்பாலவர்க்கருளும் ஆதிமாண்பும்” என்னும் திருஞானசம்பந்தர் பாடலுக்கும் பொருள் விளக்கம் இடம் பெறுகிறது.

சில வினாக்கள்
மூன்று

ஒரு நிலையிலே அறிந்தும்‌, ஓரு நிலையிலே அறியாமலும்‌ இப்படி இரண்டு விதமும்‌ அடியேன்‌ கூடிவருகையினால்‌, அடியேனை அறிவு என்று சொல்லுவேனோ அல்லது அறியாதவன்‌ எவ்று சொல்லுவேனோ இவ்விரண்டில்‌ யாதென்று விண்ணப்பம்‌ செய்வேன்‌?

நான்கு

மலங்கள்‌ அஞ்ஞான வண்ணத்தன; ஆகையாலே இறைவன்‌ முன்னர்‌ இவை நில்லா, அடிமையாகிய ஆன்மாவுக்கு சுதந்திரமாகப் பார்க்கும்‌ அறிவு இல்லை. ஆதலால்‌ ஆன்மா இருள்‌ எனப்படும்‌ அஞ்ஞானத்தை எப்படிக்‌ காணமுடியும்‌?

ஆணவத்தின் எட்டு இயல்பும், மாயையின் ஏழு இயல்பும், கர்மத்தின் ஆறு இயல்பும் இதன்கண் கூறப்பட்டுள. சைவத் திருமுறைகளுள் விளங்கும் அருட்தொடர்களாகிய “கண்பாரார் கண்ணுதலாய் காட்டக்காலே” “உன்னிலுண்ணும் ஊண்ணாவிடில் விட்டிடும்” என்பவற்றிற்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. திருநிலனாய்த் தீயாகி” என்று தொடங்கும் அப்பர், திருத்தாண்டகத்திற்கும் “ஆட்பாலவர்க்கருளும் ஆதிமாண்பும்” என்னுந் திருஞானசம்பந்தர் திருப்பாசுரத்திற்கும் பொருள் விளக்கம் பாராட்டத்தகும் முறையிற் செய்யப்பட்டுள்ளது. இச் சிறுநூல் மெய்கண்டாரது பெருஞ்சிறப்பினை அறிவிக்கும் பெருமையூடையது.

உரைகள்

இந்த நூலுக்கு இரண்டு பழைய உரைநூல்கள் உள்ளன.

பாடல் நடை

வெண்பா (வினா)

கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி
மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் -- வெண்ணெய் நல்லூர்
மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை
கைகண்டார் உள்ளத்துக் கண் (1)

ஆசிரியப்பா (விடை)

கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என 
வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ! 
காரா கிரகக் கலி ஆழ்வேனை நின் 
பேரா இன்பத்து இருத்திய பெரும! 
வினவல் ஆனாது உடையேன் எனது உளம் 
நீங்கா நிலை ஊங்கும் உளையால் 
அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின் 
ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல் 
திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய் 
சுத்தன் அமலன் சோதி நாயகன் 
முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா 
வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப் 
வேறும் இன்றாகும் எமக்கு எம் பெரும! 
இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும் 
பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதலின் 
வேறோ உடனோ விளம்பல் வேண்டும் 
சீறி அருளல் சிறுமை உடைத்தால். 
அறியாது கூறினை அபக்குவ பக்குவக் 
குறிபார்த்து அருளினம் குருமுதலாய் எனின் 
அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும் 
பக்குவம் வேண்டில் பயன் இலை நின்னால் 
பக்குவம் அதனால் பயன்நீ வரினே 
நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ 
தன் ஒப்பார் இலி என்பதும் தகுமே 
மும்மலம் சடம் அணு மூப்பு இளமையில் நீ 
நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ 
உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே 
இணை இலி ஆயினை என்பதை அறியேன் 
யானே நீக்கினும் தானே நீங்கினும் 
கோனே வேண்டா கூறல் வேண்டும் 
"காண்பார் யார்கொல் காட்டாக்கால்" எனும் 
மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன் 
கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின் 
"ஆட்பால் அவர்க்கு அருள்" என்பதை அறியே 

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.