under review

கிறித்தவ அம்மானை இலக்கியங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text:  )
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 7: Line 7:


== கிறித்தவ அம்மானைகளின் காலம் ==
== கிறித்தவ அம்மானைகளின் காலம் ==
கிறிஸ்தவ அம்மானை நூல்கள், 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் இருபதாண்டு நூற்றாண்டின் இறுதி வரை தமிழகத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் இயற்றப்பட்டன. தமிழில் அச்சான முதல் கிறிஸ்தவ அம்மானை நூலாக ‘கித்தேரியம்மாள் அம்மானை’ அறியப்படுகிறது
கிறிஸ்தவ அம்மானை நூல்கள், 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் இருபதாண்டு நூற்றாண்டின் இறுதி வரை தமிழகத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் இயற்றப்பட்டன. தமிழில் அச்சான முதல் கிறிஸ்தவ அம்மானை நூலாக ‘கித்தேரியம்மாள் அம்மானை’ அறியப்படுகிறது


== கிறித்தவ அம்மானை நூல்கள் பட்டியல் ==
== கிறித்தவ அம்மானை நூல்கள் பட்டியல் ==

Latest revision as of 11:15, 24 February 2024

அம்மானை இலக்கிய நூல்களில், கிறிஸ்தவ அம்மானை நூல்களுக்கு முக்கிய இடமுண்டு. நூற்றுக்கும் மேற்பட்ட கிறிதஸ்தவ அம்மானை நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்துக்களாக இருந்து சமயம் மாறிய கிறிஸ்தவர்கள், தங்கள் சமயத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் வகையில் பல அம்மானை நூல்கள் இயற்றப்பட்டன.

கிறித்தவ அம்மானை இலக்கிய நூல்களின் பின்புலம்

கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள், தங்கள் சமயம் பற்றி விரிவாக அறிந்து கொள்ளவும், கிறிஸ்தவ சமய வளர்ச்சிக்காகத் தங்களை அர்ப்பணித்த புனிதர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் பல அம்மானை நூல்கள் இயற்றப்பட்டன. கிறிஸ்தவ மதத் துறவிகளாக வாழ்ந்தவர்களின் சிறப்பை உணர்த்தச் சில துறவிகளின் வரலாறுகள் அம்மானை நூல்களாகப் பாடப்பட்டன.

மக்களுக்கு நோயாலும், பிறவற்றாலும் ஏற்படும் இடையூறுகளிலிருந்து அவர்களைக் காக்க, அவற்றின் மீது ஆற்றல் கொண்ட புனிதர்களின் வரலாறுகள் அம்மானை இலக்கியங்களாகப் பாடப்பட்டன. சமய நெறிகளை அடிப்படையாக வைத்து நல்லொழுக்க நெறிகளைக் கற்பிக்கச் சில அம்மானை நூல்கள் இயற்றப்பட்டன. இந்துக்களாக இருந்து கிறிஸ்தவராக மாறிய சில புலவர்கள், தாங்கள் இந்துக்களாக இருந்தபோது பாடிய அம்மானைகளுக்கு இணையாகக் கிறிஸ்தவ சமயம் சார்பில் சில அம்மானை நூல்களை இயற்றினர்.

கிறித்தவ அம்மானைகளின் காலம்

கிறிஸ்தவ அம்மானை நூல்கள், 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் இருபதாண்டு நூற்றாண்டின் இறுதி வரை தமிழகத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் இயற்றப்பட்டன. தமிழில் அச்சான முதல் கிறிஸ்தவ அம்மானை நூலாக ‘கித்தேரியம்மாள் அம்மானை’ அறியப்படுகிறது

கிறித்தவ அம்மானை நூல்கள் பட்டியல்

வரிசை எண் நூல் பெயர் ஆசிரியர் பெயர்
1 கித்தேரியம்மாள் அம்மானை வீரமாமுனிவர்
2 ஞான சௌந்தரி அம்மானை சாமிநாதப் புலவர்
3 சந்தியாகு மையோர் என்னும் தூய யாகப்பர் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
4 தேவமாதா அம்மானை அமிர்தப் புலவர்
5 அர்ச் அந்தோணியார் அம்மானை ஜெகராவு முதலியார்
6 சேசுநாதர் அம்மானை செல்வராஜ் செட்டியார்
7 அர்ச் லூர்து மாதா அம்மானை யாகப்ப முதலியார்
8 ஆரோக்கிய அம்மானை வீ. சேகரம் பிள்ளை
9 வேளாங்கண்ணி மாதா அம்மானை வீ. சேகரம் பிள்ளை
10 சிலுவை அம்மானை ஜே.சி.சுந்தரம்
12 அகினேசகன்னி அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
13 தூய அலெக்ஸ் அம்மானை ப. பொன்னுசாமி முதலியார்
14 மரிகருத்தம்மாள் அம்மானை தே.மு. சின்னசாமி செட்டியார் (பதி)
15 உறுத்தம்மானை ஈஸ்வரமூர்த்தி
16 புனித அந்தோணியார் அம்மானை அந்தோணியார்
17 அர்ச் அலசம்மானை சாந்தா குரூஸ்
18 தூய யூதா ததேயு அம்மானை தேவசகாயம்
19 தூய ஆசீர்வாதப்பர் அம்மானை எம்.ஜே. சுபாவாக்கியம்
20 வேதப் பொருள் அம்மானை எல்.எக்ஸ்.பெர்னாண்டஸ் (பதி)
21 யாத்ராகம அம்மானை வேதமாணிக்க நாடார்
22 தூய குழந்தை தெரசம்மாள் அம்மானை எஸ்.எம். இன்னாசி முத்து
23 தூய இசிதோர் அம்மானை ப.வே.பீலெயிஸ்
24 தூய செசிலியம்மாள் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
25 தூய தோமையார் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
26 தூய யோவான் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
27 திருமறைப் பொருள் அம்மானை ஜி.எஸ்.துரைசாமி
28 முத்தி வழி அம்மானை சுகவீரநாடார்
29 திரியேக அம்மானை திட்டூர் தேசிகர்
30 நன்மரண அம்மானை எஸ்.ஆர். சூசையா பிள்ளை
31 தாவீதரசன் அம்மானை வின்பிரெட் ஐயர்
32 விக்டோரியா அம்மானை அப்பா செட்டியார்
33 மாதா அம்மானை ந.சவரிமுத்துப்பிள்ளை
34 செபமாலை மாதா அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
35 பெரியநாயகி மாதா அம்மானை வீ. சேகரம்பிள்ளை
36 வியாகுல மாதா அம்மானை வீ. சேகரம்பிள்ளை
37 இரட்சணிய அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
38 தூய ஆக்னஸ் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
39 அர்ச். அனசு அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
40 அகினேசம்மா அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
41 சந்.அந்தோணியார் அம்மானை அ. இன்னாசித்தம்பி
42 இஸ்தாக்கியர் அம்மானை தே.மு. சின்னசாமி
43 தூய நிக்கோலஸ் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
44 தவ சதிக அம்மானை மரியம்பிள்ளை
45 சந்நீக்கிலாலவு அம்மானை மரியம்பிள்ளை
46 அதிரியர் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
47 தூய அருளானந்தர் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
48 அர்ச் சின்ன அந்தோணியார் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
49 அலசு அம்மானை (விருத்தம்) ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
50 இன்னேச கன்னி அகினேச கன்னி அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
51 ஆகத்தம்மாள் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
52 தொம்மை அப்பொஸ்தலர் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
53 ஆண்டவர் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
54 பார்ப்பாரம்மாள் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
55 பிலோமினாம்மாள் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
56 மன்னார் தோட்டவெளி வேத சாட்சிகளின் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
57 ஸ்நாபக சஞ்சுவாய் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
58 அர்ச் செசீலி அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
59 சிலுவை வழி அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
60 சிறிய புஷ்பத்தின் சிறிய அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
61 செபஸ்தியார் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
62 தியாகு மாயோர் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
63 திருமரணத் திறவுகோல் அம்மானை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
64 அர்ச். மேரி கருதம்மாள் அம்மானை அப்துல்லா சாயபு (ப)
65 ஞானசவுந்தரி அம்மானை மயிலு பிள்ளை
66 அந்தோணியார் அம்மானை தோமைப் பிள்ளை பட்டங்கட்டியார்
67 சந்தீக்கிலாவின் தவசதித அம்மானை டி. ஏ. பெருமாள் பிள்ளை
68 அர்ச் யாகப்பர் அம்மானை பேதுருப் புலவர்
69 அருளப்பர் அம்மானை பா. சத்தியசீலன்

உசாத்துணை


✅Finalised Page