under review

ஆதீனம்: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
Line 2: Line 2:
ஆதீனங்கள் சைவ சமயத்தைச் சேர்ந்த மடங்கள். சைவ சித்தாந்தத்தைப் பரப்பவும், தமிழ் மொழியை வளர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டவை. இந்த மடங்களை நிர்வகிப்பவர்கள் ஆதீனகர்த்தர்கள்.  
ஆதீனங்கள் சைவ சமயத்தைச் சேர்ந்த மடங்கள். சைவ சித்தாந்தத்தைப் பரப்பவும், தமிழ் மொழியை வளர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டவை. இந்த மடங்களை நிர்வகிப்பவர்கள் ஆதீனகர்த்தர்கள்.  
== வரலாறு ==
== வரலாறு ==
பொ.யு. 14 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் சைவமடங்களின் தோற்றம் நிகழ்ந்தது. சைவம் சோழர்களின் ஆட்சிக்குப்பின் பன்னிரண்டு பிரிவுகளாக ஆகி சிதைவுற்றபோது ஒரு மீட்பியக்கமாக சைவ மடங்கள் உருவாயின.  பொ.யு 8-ஆம் நூற்றாண்டுமுதல் தமிழகத்தில் ஏகான்மவாதம் என்னும் சைவதத்துவம் ஓங்கியது. அது வேதாந்தத்துக்கு நெருக்கமானது. சிவனே நான் என்னும் பொருள்படும் ‘சிவோகம்’ என்னும் கோஷம் கொண்டது. இதை மறுத்தவர் பொ.யு. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[மெய்கண்டார்]] என்னும் சைவஞானி. பசு–பதி –பாசம் என்னும் மும்மைத்தத்துவத்தை முன்வைத்த சிவஞானபோதம் என்னும் நூலை இவர் இயற்றினார். அவருடைய தத்துவ மரபு சைவசித்தாந்தம் என அழைக்கப்படுகிறது.
பொ.யு. 14-ம் நூற்றாண்டில் தமிழகத்தின் சைவமடங்களின் தோற்றம் நிகழ்ந்தது. சைவம் சோழர்களின் ஆட்சிக்குப்பின் பன்னிரண்டு பிரிவுகளாக ஆகி சிதைவுற்றபோது ஒரு மீட்பியக்கமாக சைவ மடங்கள் உருவாயின.  பொ.யு 8-ம் நூற்றாண்டுமுதல் தமிழகத்தில் ஏகான்மவாதம் என்னும் சைவதத்துவம் ஓங்கியது. அது வேதாந்தத்துக்கு நெருக்கமானது. சிவனே நான் என்னும் பொருள்படும் ‘சிவோகம்’ என்னும் கோஷம் கொண்டது. இதை மறுத்தவர் பொ.யு. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த [[மெய்கண்டார்]] என்னும் சைவஞானி. பசு–பதி –பாசம் என்னும் மும்மைத்தத்துவத்தை முன்வைத்த சிவஞானபோதம் என்னும் நூலை இவர் இயற்றினார். அவருடைய தத்துவ மரபு சைவசித்தாந்தம் என அழைக்கப்படுகிறது.


மெய்கண்டாரிடம் நாற்பத்தியொன்பது மாணவர்கள் பயின்றனர். அவர்களில் முதல்வர் அருள்நந்தி சிவாச்சாரியார். அவருடைய மாணவர் மறைஞானசம்பந்தர். அவருடைய மாணவர் உமாபதி சிவாச்சாரியார். உமாபதி சிவாச்சாரியாரின் வழிவந்த அருள்நமச்சிவாயரின் மாணவர்தான் திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய [[நமச்சிவாய மூர்த்திகள்]] என்னும் பஞ்சாக்கர தேவர். அவருக்குப்பின் அவர் மாணவர் ஆதிசிவப்பிரகாசர்தான் இந்த மடத்தை ஒரு பெரிய அமைப்பாக ஆக்கியவர். இந்த மடத்தில் இருந்து பல சைவ மடங்கள் கிளைபிரிந்து வளர்ந்தன.
மெய்கண்டாரிடம் நாற்பத்தியொன்பது மாணவர்கள் பயின்றனர். அவர்களில் முதல்வர் அருள்நந்தி சிவாச்சாரியார். அவருடைய மாணவர் மறைஞானசம்பந்தர். அவருடைய மாணவர் உமாபதி சிவாச்சாரியார். உமாபதி சிவாச்சாரியாரின் வழிவந்த அருள்நமச்சிவாயரின் மாணவர்தான் திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய [[நமச்சிவாய மூர்த்திகள்]] என்னும் பஞ்சாக்கர தேவர். அவருக்குப்பின் அவர் மாணவர் ஆதிசிவப்பிரகாசர்தான் இந்த மடத்தை ஒரு பெரிய அமைப்பாக ஆக்கியவர். இந்த மடத்தில் இருந்து பல சைவ மடங்கள் கிளைபிரிந்து வளர்ந்தன.

Revision as of 11:14, 24 February 2024

To read the article in English: Aadheenam. ‎

ஆதீனங்கள் சைவ சமயத்தைச் சேர்ந்த மடங்கள். சைவ சித்தாந்தத்தைப் பரப்பவும், தமிழ் மொழியை வளர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டவை. இந்த மடங்களை நிர்வகிப்பவர்கள் ஆதீனகர்த்தர்கள்.

வரலாறு

பொ.யு. 14-ம் நூற்றாண்டில் தமிழகத்தின் சைவமடங்களின் தோற்றம் நிகழ்ந்தது. சைவம் சோழர்களின் ஆட்சிக்குப்பின் பன்னிரண்டு பிரிவுகளாக ஆகி சிதைவுற்றபோது ஒரு மீட்பியக்கமாக சைவ மடங்கள் உருவாயின. பொ.யு 8-ம் நூற்றாண்டுமுதல் தமிழகத்தில் ஏகான்மவாதம் என்னும் சைவதத்துவம் ஓங்கியது. அது வேதாந்தத்துக்கு நெருக்கமானது. சிவனே நான் என்னும் பொருள்படும் ‘சிவோகம்’ என்னும் கோஷம் கொண்டது. இதை மறுத்தவர் பொ.யு. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் என்னும் சைவஞானி. பசு–பதி –பாசம் என்னும் மும்மைத்தத்துவத்தை முன்வைத்த சிவஞானபோதம் என்னும் நூலை இவர் இயற்றினார். அவருடைய தத்துவ மரபு சைவசித்தாந்தம் என அழைக்கப்படுகிறது.

மெய்கண்டாரிடம் நாற்பத்தியொன்பது மாணவர்கள் பயின்றனர். அவர்களில் முதல்வர் அருள்நந்தி சிவாச்சாரியார். அவருடைய மாணவர் மறைஞானசம்பந்தர். அவருடைய மாணவர் உமாபதி சிவாச்சாரியார். உமாபதி சிவாச்சாரியாரின் வழிவந்த அருள்நமச்சிவாயரின் மாணவர்தான் திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமச்சிவாய மூர்த்திகள் என்னும் பஞ்சாக்கர தேவர். அவருக்குப்பின் அவர் மாணவர் ஆதிசிவப்பிரகாசர்தான் இந்த மடத்தை ஒரு பெரிய அமைப்பாக ஆக்கியவர். இந்த மடத்தில் இருந்து பல சைவ மடங்கள் கிளைபிரிந்து வளர்ந்தன.

சைவத்துறவியர் மரபு

சைவத்துறவியர் மரபு திருக்கையிலாய பரம்பரை என்றும் சந்தான மரபு என்றும் அழைக்கப்படுகிறது. சந்தானம் (வாரிசு) என அழைக்கப்படும் இந்த மரபு இரண்டாகப் பகுக்கப்படுகிறது. அகச்சந்தான மரபு, புறச்சந்தான மரபு.

அகச்சந்தான மரபு

அகச்சந்தான மரபு என்பது புராணத்தில் உள்ளது. சிவபெருமானில் தொடங்குவது இம்மரபு. நந்திதேவர், சனத்குமாரர், சத்தியஞானதரிசி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் அகச்சந்தான மரபினர்.

புறச்சந்தான மரபு

பரஞ்சோதி முனிவரின் மாணவர் மெய்கண்டார். மெய்கண்டாரும் அவருடைய மாணவர் வரிசையும் புறச்சந்தான மரபைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு துறவு தொன்மத்தில் சிவபெருமானால் அளிக்கப்பட்டது. நடைமுறையில் பரஞ்சோதி முனிவரிடமிருந்து வழிவழியாக வருவது.

ஆதீனங்கள்

  • திருவாவடுதுறை ஆதீனம்
  • தருமபுர ஆதீனம்
  • மதுரை ஆதீனம்
  • திருவண்ணாமலை ஆதீனம்
  • குன்னக்குடி ஆதீனம்
  • மயிலம் பொம்மபுர ஆதீனம்
  • திருப்பனந்தாள் காசிமடம்
  • திருவையாறு செப்பறை மடம்
  • வேளாக்குறிச்சி மடம்
  • சூரியனார் கோயில் ஆதீனம்
  • தொண்டைமண்டல ஆதீனம்
  • செங்கோல் ஆதினம், பெருங்குளம்
  • நாச்சியார்கோவில் ஆதீனம், நாச்சியார்கோவில்
  • வரணி ஆதீனம், வேதாரண்யம்
  • வள்ளலார் ஆதினம், சீர்காழி
  • சொர்க்கப்புர ஆதீனம், அம்பர்மாகாளம்
  • ஆகமசிவப்பிரகாசர் ஆதீனம், சிதம்பரம்
  • தாயுமானவ ஸ்வாமிகள் ஆதினம், அன்னப்பன்பேட்டை
  • நீலப்படி ஆதினம்
  • இராமேச்சர ஆதினம்
  • கோவிலூர் ஆதீனம்

பொருளாதாரம்

இந்த சைவமடங்கள் அரசர்களால் பேணப்பட்டன. சிறிய அரசுகளைப்போலவே செல்வமும் அதிகாரமும் கொண்டவையாக ஆயின. இவை ஆலயங்களை நிர்வாகம் செய்தன. மடங்களைக் காப்பதற்காக நிலப்பிரபுக்களும், செல்வந்தர்களும், பக்தர்களும் நிலங்களை மடங்களின் பெயரில் எழுதி வைத்தனர். அந்த நிலங்களை குத்தகைக்கு விட்டு அதிலிருந்து மடங்களுக்கு வருவாய் வருகிறது. இந்த வருவாய் கோயில்களின் பராமரிப்பு, சைவ சமயப்பணி, தமிழ் வளர்ப்பு பணி ஆகியவைகளில் செலவிடப்படுகிறது. நாயக்க மன்னர்களாலும் பின்னர் மராட்டியர்களாலும் சைவ மடங்கள் ஆதரிக்கப்பட்டன.

பணிகள்

சமயப்பணிகள்

ஆதீனங்களில் சைவ சமய சித்தாந்தங்களை பரப்புவது, சடங்குகள் மற்றும் வழிபாடுகள் மேற்கொள்வது போன்ற சமயப்பணிகள் செய்யப்படுகின்றன. தத்துவ ஞானிகள் மற்றும் துறவிகள் தனியே ஓர் இடத்திலிருந்து யோகநெறி கலையை பழகுவதற்கான இடமாக உள்ளது. அறநெறிகள் மற்றும் தத்துவம், தத்துவ ஞானங்களைக் கற்க தன்னை நாடி வருபவருக்கு போதிக்கும் ஓர் இடமாக உள்ளது. சைவ சமய நூல்கள் பதிப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்மொழி

திருவாவடுதுறை ஆதீனம் போன்ற ஆதீனங்கள் தமிழ் வளர்ப்பு பணியில் ஈடுபட்டன. தருமபுர ஆதீனம் வடமொழி சார்ந்த வளர்ச்சிப்பணிகளை செய்தது. காரைக்கால் அம்மையார், திருஞான சம்பந்தர் போன்றோர் தமிழில் பாடும் வழக்கத்தை செயல்படுத்தினர். திருவாவடுதுறையின் அறிஞர்களான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இவரது சீடர் உ.வே.சாமிநாதையர் போன்றோர் தமிழ் வளர்ச்சிப்பபணிகளை மேற்கொண்டனர். அரிய பழந்தமிழ் நூல்களைத் தேடி அச்சிட்டனர்.

சமூகப்பணிகள்

அறக்கட்டளைகள் மூலம் பள்ளி, கல்லூரி நிறுவனங்களை நிறுவி கல்விப்பணிகள் செய்யப்படுகின்றன. அன்னதானம் செய்யப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page