under review

சரவணப்பெருமாள் ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 5: Line 5:


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
சரவணப்பெருமாள் ஐயர்  சென்னையில் வசித்த காலத்தில்  பல உரைநூல்களை எழுதினார். 1830-ஆம் ஆண்டில் திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு  முதன்முதலில் விளக்கம் எழுதிப் பதிப்பித்தார்.  இப்பதிப்பில்  [[திருவள்ளுவமாலை]]யையும் உரையெழுதிப் பதிப்பித்தார்''.'' திருவள்ளுவமாலைக்கு முதன்முதலில் உரையெழுதியவர் சரவணப்பெருமாள் ஐயர்.  ''1838-ல்''  இரண்டாம் பதிப்பு வெளிவந்தது''.'' அதன் பிறகு பல பதிப்புகள் வெளிவந்தன''.'' இப்பதிப்பில் இரண்டாம் பதிப்பில் இவர் எழுதிய  திருவள்ளுவர் சரித்திரம் இடம் பெற்றது. திருவள்ளுவரைப் பற்றி அச்சில் வெளிவந்த முதல் வரலாறு இது எனக் கொள்ளலாம்''.'' இதில் பல புராணப் புனைவுகளும் இடம்பெற்றுள்ளன''.'' திருக்குறளைப் பதிப்பித்த அனைவரும் இந்தத் திருவள்ளுவர் வரலாற்றினைச் சிறு மாற்றங்களோடு  தங்கள் பதிப்பில் இணைத்துக் கொண்டனர்''.'' இவ்வரலாற்றினைச் சில பாடல்களோடு பேராசிரியர் சு''.'' அனவரத விநாயகம் பிள்ளை  1908 -ல் தனி நூலாக வெளியிட்டார்''.''
சரவணப்பெருமாள் ஐயர்  சென்னையில் வசித்த காலத்தில்  பல உரைநூல்களை எழுதினார். 1830-ம் ஆண்டில் திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு  முதன்முதலில் விளக்கம் எழுதிப் பதிப்பித்தார்.  இப்பதிப்பில்  [[திருவள்ளுவமாலை]]யையும் உரையெழுதிப் பதிப்பித்தார்''.'' திருவள்ளுவமாலைக்கு முதன்முதலில் உரையெழுதியவர் சரவணப்பெருமாள் ஐயர்.  ''1838-ல்''  இரண்டாம் பதிப்பு வெளிவந்தது''.'' அதன் பிறகு பல பதிப்புகள் வெளிவந்தன''.'' இப்பதிப்பில் இரண்டாம் பதிப்பில் இவர் எழுதிய  திருவள்ளுவர் சரித்திரம் இடம் பெற்றது. திருவள்ளுவரைப் பற்றி அச்சில் வெளிவந்த முதல் வரலாறு இது எனக் கொள்ளலாம்''.'' இதில் பல புராணப் புனைவுகளும் இடம்பெற்றுள்ளன''.'' திருக்குறளைப் பதிப்பித்த அனைவரும் இந்தத் திருவள்ளுவர் வரலாற்றினைச் சிறு மாற்றங்களோடு  தங்கள் பதிப்பில் இணைத்துக் கொண்டனர்''.'' இவ்வரலாற்றினைச் சில பாடல்களோடு பேராசிரியர் சு''.'' அனவரத விநாயகம் பிள்ளை  1908 -ல் தனி நூலாக வெளியிட்டார்''.''


நாலடியார்'','' நன்னூல்'','' நைடதம்'','' திருவெங்கைக் கோவை'','' ஆத்திசூடி'','' கொன்றை வேந்தன்'','' நறுந்தொகை'','' மூதுரை'','' நன்னெறி முதலிய நூல்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்தார்''.''  பிரபுலிங்க லீலையின் முதல் மூன்று அத்தியாயங்களுக்கு ''(''மாயை உற்பத்தி வரை'')'' உரை எழுதினார்''.''நைடதம் மற்றும் பிரபுலிங்கலீலை ஆகியவற்றின் எஞ்சிய பகுதிகளின் உரையை இவரது மகன் கந்தப்ப ஐயர் எழுதி முடித்தார்.
நாலடியார்'','' நன்னூல்'','' நைடதம்'','' திருவெங்கைக் கோவை'','' ஆத்திசூடி'','' கொன்றை வேந்தன்'','' நறுந்தொகை'','' மூதுரை'','' நன்னெறி முதலிய நூல்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்தார்''.''  பிரபுலிங்க லீலையின் முதல் மூன்று அத்தியாயங்களுக்கு ''(''மாயை உற்பத்தி வரை'')'' உரை எழுதினார்''.''நைடதம் மற்றும் பிரபுலிங்கலீலை ஆகியவற்றின் எஞ்சிய பகுதிகளின் உரையை இவரது மகன் கந்தப்ப ஐயர் எழுதி முடித்தார்.

Latest revision as of 11:13, 24 February 2024

சரவணப்பெருமாள் ஐயர் (சரவணப்பெருமாளையர்) (1799 – 1840) தமிழ் உரையாசிரியர். பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதினார். திருக்குறள் பரிமேலழகர் உரை, திருவள்ளுவமாலை ஆகியவற்றுக்கு முதன்முதலில் விளக்கம் எழுதிப் பதிப்பித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சரவணப் பெருமாள் ஐயர் திருத்தணிகையில் 1799-ல்பிறந்தார். இவரின் தகப்பனார் வீரசைவ சமயத்தாரான கந்தப்பையர். கல்லாரகரி வீரசைவ மடத்து அதிபர் வழி வந்தவர். உடன்பிறந்தவர் விசாகப்பெருமாள் ஐயர். இராமாநுஜ கவிராயரிடம் கல்வி கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சரவணப்பெருமாள் ஐயர் சென்னையில் வசித்த காலத்தில் பல உரைநூல்களை எழுதினார். 1830-ம் ஆண்டில் திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு முதன்முதலில் விளக்கம் எழுதிப் பதிப்பித்தார். இப்பதிப்பில் திருவள்ளுவமாலையையும் உரையெழுதிப் பதிப்பித்தார். திருவள்ளுவமாலைக்கு முதன்முதலில் உரையெழுதியவர் சரவணப்பெருமாள் ஐயர். 1838-ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதன் பிறகு பல பதிப்புகள் வெளிவந்தன. இப்பதிப்பில் இரண்டாம் பதிப்பில் இவர் எழுதிய திருவள்ளுவர் சரித்திரம் இடம் பெற்றது. திருவள்ளுவரைப் பற்றி அச்சில் வெளிவந்த முதல் வரலாறு இது எனக் கொள்ளலாம். இதில் பல புராணப் புனைவுகளும் இடம்பெற்றுள்ளன. திருக்குறளைப் பதிப்பித்த அனைவரும் இந்தத் திருவள்ளுவர் வரலாற்றினைச் சிறு மாற்றங்களோடு தங்கள் பதிப்பில் இணைத்துக் கொண்டனர். இவ்வரலாற்றினைச் சில பாடல்களோடு பேராசிரியர் சு. அனவரத விநாயகம் பிள்ளை 1908 -ல் தனி நூலாக வெளியிட்டார்.

நாலடியார், நன்னூல், நைடதம், திருவெங்கைக் கோவை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை, மூதுரை, நன்னெறி முதலிய நூல்களுக்கு உரையெழுதிப் பதிப்பித்தார். பிரபுலிங்க லீலையின் முதல் மூன்று அத்தியாயங்களுக்கு (மாயை உற்பத்தி வரை) உரை எழுதினார்.நைடதம் மற்றும் பிரபுலிங்கலீலை ஆகியவற்றின் எஞ்சிய பகுதிகளின் உரையை இவரது மகன் கந்தப்ப ஐயர் எழுதி முடித்தார்.

திருக்குறள் பரிமேலழகர் உரையை அச்சிட்ட பின் திருவாசகம், திருவிளையாடற் புராணம், நாலடியார் ஆகியவற்றையும் அச்சிட்டார் எனக் கூறப்படுகிறது. நல்வழி, 'வாக்குண்டாம்', 'பழமலையந்தாதி' ஆகிய நூல்களையும் பதிப்பித்தார்..

'குணங்குடி மஸ்தான் நான்மணிமாலை', 'களத்தூர் புராணம்' இவர் இயற்றிய நூல்கள் எனப்படுகிறது. 'பூகோள தீபிகை', 'இயற்றமிழ் சுருக்கம்', 'அணியியல் விளக்கம்', 'குளத்தூர்ப் புராணம்', 'பாலபோத இலக்கணம்' முதலிய நூல்களை இயற்றினார்.

மறைவு

சரவணப்பெருமாள் ஐயர் 1840-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • குணங்குடி மஸ்தான் நான்மணிமாலை
  • களத்தூர் புராணம்
  • பூகோள தீபிகை
  • இயற்றமிழ் சுருக்கம்,
  • அணியியல் விளக்கம்
  • குளத்தூர்ப் புராணம்
  • பாலபோத இலக்கணம்
உரைகள்
  • திருக்குறள் பரிமேலழகர் உரை
  • திருவள்ளுவமாலை
  • திருவாசகம்
  • திருவிளையாடற் புராணம்
  • நாலடியார்
  • நன்னூல்
  • திருவெங்கைக் கோவை
  • ஆத்திசூடி
  • கொன்றை வேந்தன்
  • நறுந்தொகை
  • மூதுரை
  • நன்னெறி
  • நைடதம் (முற்றுப் பெறவில்லை)
  • பிரபுலிங்க லீலை(முற்றுப் பெறவில்லை)

உசாத்துணை



✅Finalised Page