being created

சுபா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 15: Line 15:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[http://ungalrasigan.blogspot.com/2018/01/blog-post_9.html உங்கள் ரசிகன்  கட்டுரை]
[http://ungalrasigan.blogspot.com/2018/01/blog-post_9.html உங்கள் ரசிகன்  கட்டுரை]
{{Being created}}
[[Category:Tamil Content]]

Revision as of 21:35, 2 December 2023

சுபா (டி.சுரேஷ் - ஏ.என். பாலகிருஷ்ணன்) தமிழில் துப்பறியும் கதைகளை எழுதிய எழுத்தாளுமை. டி.சுரேஷ் - ஏ.என். பாலகிருஷ்ணன் என்னும் இருவரின் கூட்டு. இருவரின் பெயர்களின் முதலெழுத்துக்களாலானது சுபா என்னும் பெயர். தமிழில் துப்பறியும் கதைகளை எழுதியவர்களில் இவர்கள் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த முக்கியமான மூவரில் ஒருவர் என மதிப்பிடப்படுகிறார்கள்.

பிறப்பு, கல்வி

இலக்கியவாழ்க்கை

ஆன்மிகம்

சுபா 'காஷ்யபன்’ என்றபேரில் ஆன்மிக ஆசிரியர்கள், திருத்தலங்கள் பற்றி கட்டுரைகள் எழுதினார்கள் .ஆன்மிக ஆசிரியர் ஜக்கி வாசுதேவிடம் பேட்டி கண்டு ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற தலைப்பில் எழுதிய தொடர் அவரை தமிழில் பரவலாக அறிமுகம் செய்தது.

இலக்கிய இடம்

தமிழில் குற்றப்புலனாய்வு எழுத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சுபா. முதல் தலைமுறையில் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் , ஆரணி குப்புசாமி முதலியார் ,ஜெ.ஆர். ரங்கராஜுஆகியோர் முதன்மையானவர்கள். இரண்டாம் தலைமுறையில் மேதாவி, ரா.கி.ரங்கராஜன் , தமிழ்வாணன் போன்றவர்களும் மூன்றாவது தலைமுறையில் புஷ்பா தங்கதுரை ,சுஜாதா , ராஜேந்திரகுமார் போன்றவர்களும் தமிழில் குற்றப்புலனாய்வுக் கதைகளை எழுதியவர்கள். நான்காம் தலைமுறையில் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோர் குற்றப்புலனாய்வுக் கதைகளை எழுதுபவர்களில் முதன்மையானவர்கள்.

சுபாவின் கதைகள் குற்றப்புலனாய்வின் அறிவியல்முறைமைகளை கூடுமானவரை கடைப்பிடிப்பவை என்றும், வாசகர்களில் அடுத்த படிநிலைகளிலுள்ளவர்களுக்கானவை என்றும் மதிப்பிடப்படுகிறது. நகர்ப்புறக்குற்றங்களை புலனாய்வு செய்யும் படைப்புகள் இவை

உசாத்துணை

உங்கள் ரசிகன் கட்டுரை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.