மண்டயம் திருமலாச்சாரியார்: Difference between revisions

From Tamil Wiki
Line 4: Line 4:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[மண்டயம் மரபு]] என்னும் வைணவப் பெருங்குடும்பத்தைச் சேர்ந்தவர் திருமலாச்சாரியார். [[மண்டயம் சீனிவாசாச்சாரியார்]] , மண்டயம் பார்த்தசாரதி ஆகியோர் இவருடைய சகோதரர்கள். இவர்கள் மண்டயம் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர். புதுச்சேரி சகோதரர்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு.
[[மண்டயம் மரபு]] என்னும் வைணவப் பெருங்குடும்பத்தைச் சேர்ந்தவர் திருமலாச்சாரியார். [[மண்டயம் சீனிவாசாச்சாரியார்]] , மண்டயம் பார்த்தசாரதி ஆகியோர் இவருடைய சகோதரர்கள். இவர்கள் மண்டயம் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர். புதுச்சேரி சகோதரர்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு. ம  தந்தை பெயர் மண்டயம் குந்தளம் கிருஷ்ணமாச்சாரியார். தாயார் வேடம்மா .  கிருஷ்ணமாச்சாரியார் பாண்டிச்சேரியில் வாழ்ந்தமையால் பாரதியாருடன் திருமலாச்சாரியாரும் சகோதரர்களும் புதுச்சேரிக்கு இடம்பெயர்ந்து அங்கே வாழ்ந்தனர்.


== இதழியல் ==
== இதழியல் ==


====== இந்தியா இதழ் ======
====== இந்தியா இதழ் ======
மண்டயம் திருமலாச்சாரியார் சென்னையில் அழகிய சிங்கர் என்பவர் நடத்திவந்த ''பிரதிவாதி'' என்னும் வைணவ வேதாந்தப்பத்திரிகையில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அரசியலிதழ் ஒன்றை நடத்தவேண்டும் என்னும் எண்ணம் கொண்டிருந்த அவர் தன் உறவினர்களான மண்டயம் [[அளசிங்கப் பெருமாள்]] மற்றும் மண்டயம் பி.திருமலாச்சாரியார் ஆகியோரின் உதவியுடன்  [[இந்தியா (இதழ்)|இந்தியா]] என்னும் இதழை மே 9, 1906 அன்று சென்னையில் தொடங்கி வார இதழாக சனிக்கிழமை தோறும் வெளியிட்டார். இரயில்வே ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றிய திருமலாச்சாரியாரின் பள்ளித் தோழரான எம்.சீனிவாச அய்யங்கார் (முரப்பாக்கம் சீனிவாசன்) ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
மண்டயம் திருமலாச்சாரியார் சென்னையில் அழகிய சிங்கர் என்பவர் நடத்திவந்த ''பிரதிவாதி'' என்னும் வைணவ வேதாந்தப்பத்திரிகையில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அரசியலிதழ் ஒன்றை நடத்தவேண்டும் என்னும் எண்ணம் கொண்டிருந்த அவர் தன் உறவினர்களான மண்டயம் [[அளசிங்கப் பெருமாள்]] மற்றும் மண்டயம் [[எம்.பி.திருமலாச்சாரியார்]] ஆகியோரின் உதவியுடன்  [[இந்தியா (இதழ்)|இந்தியா]] என்னும் இதழை மே 9, 1906 அன்று சென்னையில் தொடங்கி வார இதழாக சனிக்கிழமை தோறும் வெளியிட்டார். இரயில்வே ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றிய திருமலாச்சாரியாரின் பள்ளித் தோழரான எம்.சீனிவாச அய்யங்கார் (முரப்பாக்கம் சீனிவாசன்) ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.


====== பாரதியார் ======
====== பாரதியார் ======
Line 19: Line 19:
திருமலாச்சாரியார் புதுச்சேரியில் தன் உடன்பிறந்தவர்களுடன் தங்கினார். அங்கே அவர் அரவிந்தரின் அணுக்கமான நண்பராக ஆனார். பாரதியார் புதுச்சேரியில் வாழ்வதற்கான உதவிகளையும் புதுச்சேரி சகோதரர்கள் செய்தனர்
திருமலாச்சாரியார் புதுச்சேரியில் தன் உடன்பிறந்தவர்களுடன் தங்கினார். அங்கே அவர் அரவிந்தரின் அணுக்கமான நண்பராக ஆனார். பாரதியார் புதுச்சேரியில் வாழ்வதற்கான உதவிகளையும் புதுச்சேரி சகோதரர்கள் செய்தனர்


திருமலாச்சாரியாரின் நண்பரான வில்லியனூர் எஸ். லட்சுமி நாராயண ஐயர் பிணை அளிக்கவே இந்தியா இதழ்  20 அக்டோபர்  1908 முதல் புதுச்சேரியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. மண்டயம் சீனிவாசாச்சாரியார் இந்தியா இதழை பொறுப்பேற்று நடத்தினார்.சரஸ்வதி அச்சகம் என்ற பெயரில் இந்தியா இதழுக்கு ஓர் அச்சகம் அமைக்கப்பட்டது. புதுவை எத்ரான்ஷேர் தெருவில் 58ம் எண் உள்ள வீட்டில் இந்த அச்சகம் நிறுவப்பட்டது.  12 மார்ச் 1910 அன்று இந்தியா வெளிவருவது நின்றது.  
திருமலாச்சாரியாரின் நண்பரான வில்லியனூர் எஸ். லட்சுமி நாராயண ஐயர் பிணை அளிக்கவே இந்தியா இதழ்  20 அக்டோபர்  1908 முதல் புதுச்சேரியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. மண்டயம் சீனிவாசாச்சாரியார் இந்தியா இதழை பொறுப்பேற்று நடத்தினார்.சரஸ்வதி அச்சகம் என்ற பெயரில் இந்தியா இதழுக்கு ஓர் அச்சகம் அமைக்கப்பட்டது. புதுவை எத்ரான்ஷேர் தெருவில் 58ம் எண் உள்ள வீட்டில் இந்த அச்சகம் நிறுவப்பட்டது.  பிரிட்டிஷ் ஆட்சியின் கெடுபிடிகளால் 12 மார்ச் 1910 அன்று இந்தியா வெளிவருவது நின்றது.  


====== விஜயா ======
====== விஜயா ======
மண்டயம் திருமலாச்சாரியார் 1909ல் In 1909, Mandayam Thirumalacharya started a Tamil journal called Vijaya, and later this too was published from Pondicherry, with Bharatiar as editor. Mandayam brothers fought the British and reportedly arrest warrant was pending against them.  Due to the living of Sri S. Krishnamachari, grandfather of Mr Parthasarathi with his three sons in Pondy and their publishing patriotic journal both in French and in English, ‘The Indian Republic’ – their family was popularly known as the Pondicherry Brothers, though they belong to Mandya district in Karnataka.
மண்டயம் திருமலாச்சாரியார் 1909ல் மண்டயம் திருமலாச்சாரியார் [[விஜயா (இதழ்)]] என்னும் மாத இதழை தொடங்கினார். இந்தியா இதழ் பிரிட்டிஷ் இந்தியாவில் தடைசெய்யப்பட்டு வினியோகம் இயலாமலானமையால் இவ்விதழை தொடங்கினார். இந்தியா இதழின் சரஸ்வதி அச்சகத்திலேயே இவ்விதழும் அச்சிடப்பட்டது. இதன் ஆசிரியராகவும் சி.சுப்ரமணிய பாரதியே செயல்பட்டார்.
 
====== The Indian Republic ======
மண்டயம் திருமலாச்சாரியார் தன் சகோதரர்களுடன் இணைந்து The Indian Republic என்னும் ஆங்கில இதழையும் நடத்தினார். அது இந்தியா இதழின் ஆங்கில வடிவமாகவே இருந்தது. சி.சுப்ரமணிய பாரதியார், அரவிந்தர் ஆகியோரின் எழுத்துக்களுடன் மண்டயம் திருமலாச்சாரியார், மண்டயம் சீனிவாசாச்சாரியார் ஆகியோரும் அதில் எழுதி வந்தனர்


== வரலாற்று இடம் ==
== வரலாற்று இடம் ==

Revision as of 10:01, 19 November 2023

மண்டயம் திருமலாச்சாரியார்
மண்டயம் சகோதரர்கள்

மண்டயம் திருமலாச்சாரியார் ( ) இந்திய விடுதலைவீரர், இதழாளர். பாரதி ஆசிரியராக இருந்த இந்தியா இதழின் வெளியீட்டாளர். தமிழகத்தின் தொடக்ககால இதழாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

மண்டயம் மரபு என்னும் வைணவப் பெருங்குடும்பத்தைச் சேர்ந்தவர் திருமலாச்சாரியார். மண்டயம் சீனிவாசாச்சாரியார் , மண்டயம் பார்த்தசாரதி ஆகியோர் இவருடைய சகோதரர்கள். இவர்கள் மண்டயம் சகோதரர்கள் என அழைக்கப்படுகின்றனர். புதுச்சேரி சகோதரர்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு. ம தந்தை பெயர் மண்டயம் குந்தளம் கிருஷ்ணமாச்சாரியார். தாயார் வேடம்மா . கிருஷ்ணமாச்சாரியார் பாண்டிச்சேரியில் வாழ்ந்தமையால் பாரதியாருடன் திருமலாச்சாரியாரும் சகோதரர்களும் புதுச்சேரிக்கு இடம்பெயர்ந்து அங்கே வாழ்ந்தனர்.

இதழியல்

இந்தியா இதழ்

மண்டயம் திருமலாச்சாரியார் சென்னையில் அழகிய சிங்கர் என்பவர் நடத்திவந்த பிரதிவாதி என்னும் வைணவ வேதாந்தப்பத்திரிகையில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அரசியலிதழ் ஒன்றை நடத்தவேண்டும் என்னும் எண்ணம் கொண்டிருந்த அவர் தன் உறவினர்களான மண்டயம் அளசிங்கப் பெருமாள் மற்றும் மண்டயம் எம்.பி.திருமலாச்சாரியார் ஆகியோரின் உதவியுடன் இந்தியா என்னும் இதழை மே 9, 1906 அன்று சென்னையில் தொடங்கி வார இதழாக சனிக்கிழமை தோறும் வெளியிட்டார். இரயில்வே ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றிய திருமலாச்சாரியாரின் பள்ளித் தோழரான எம்.சீனிவாச அய்யங்கார் (முரப்பாக்கம் சீனிவாசன்) ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

பாரதியார்

சுதேசமித்திரன் இதழில் துணையாசிரியராகப் பணியாற்றிய சி.சுப்ரமணிய பாரதியார் செப்டம்பர் 1906 ல் இந்தியா இதழில் ஆசிரியராகச் சேர்ந்தார். பாரதியாரின் முழுப்பொறுப்பில் இந்தியா இதழ் அதன் பின்னர் வெளிவந்தது. பாரதியின் இதழாகவே அறியப்படுகிறது. திருமலாச்சாரியார் இந்தியா இதழை பாரதியின் பொருட்டே தொடங்கியதாக பாரதியுடன் சுதேசமித்திரன் இதழில் துணையாசிரியராக இருந்தவரும் , தேசியத்தலைவர்கள் பலருடைய வரலாற்றை எழுதியவருமான எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் எழுதி 1955-ல் வெளிவந்த 'சுப்பிரமணிய பாரதியார்’" என்ற நூலில் குறிப்பிடுகிறார்

ஆங்கிலேய அரசு அரசத்துரோக நடவடிக்கை எடுத்ததனால் இந்தியா இதழ் 1908-ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதி வாரத்தில் இருந்து சென்னையில் வெளிவருவதை நிறுத்திக்கொண்டது. பாரதியாரும், மண்டயம் திருமலாச்சாரியரும் புதுச்சேரிக்குத் தப்பிச்சென்றனர்

புதுச்சேரி வாழ்க்கை

திருமலாச்சாரியார் புதுச்சேரியில் தன் உடன்பிறந்தவர்களுடன் தங்கினார். அங்கே அவர் அரவிந்தரின் அணுக்கமான நண்பராக ஆனார். பாரதியார் புதுச்சேரியில் வாழ்வதற்கான உதவிகளையும் புதுச்சேரி சகோதரர்கள் செய்தனர்

திருமலாச்சாரியாரின் நண்பரான வில்லியனூர் எஸ். லட்சுமி நாராயண ஐயர் பிணை அளிக்கவே இந்தியா இதழ் 20 அக்டோபர் 1908 முதல் புதுச்சேரியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. மண்டயம் சீனிவாசாச்சாரியார் இந்தியா இதழை பொறுப்பேற்று நடத்தினார்.சரஸ்வதி அச்சகம் என்ற பெயரில் இந்தியா இதழுக்கு ஓர் அச்சகம் அமைக்கப்பட்டது. புதுவை எத்ரான்ஷேர் தெருவில் 58ம் எண் உள்ள வீட்டில் இந்த அச்சகம் நிறுவப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் கெடுபிடிகளால் 12 மார்ச் 1910 அன்று இந்தியா வெளிவருவது நின்றது.

விஜயா

மண்டயம் திருமலாச்சாரியார் 1909ல் மண்டயம் திருமலாச்சாரியார் விஜயா (இதழ்) என்னும் மாத இதழை தொடங்கினார். இந்தியா இதழ் பிரிட்டிஷ் இந்தியாவில் தடைசெய்யப்பட்டு வினியோகம் இயலாமலானமையால் இவ்விதழை தொடங்கினார். இந்தியா இதழின் சரஸ்வதி அச்சகத்திலேயே இவ்விதழும் அச்சிடப்பட்டது. இதன் ஆசிரியராகவும் சி.சுப்ரமணிய பாரதியே செயல்பட்டார்.

The Indian Republic

மண்டயம் திருமலாச்சாரியார் தன் சகோதரர்களுடன் இணைந்து The Indian Republic என்னும் ஆங்கில இதழையும் நடத்தினார். அது இந்தியா இதழின் ஆங்கில வடிவமாகவே இருந்தது. சி.சுப்ரமணிய பாரதியார், அரவிந்தர் ஆகியோரின் எழுத்துக்களுடன் மண்டயம் திருமலாச்சாரியார், மண்டயம் சீனிவாசாச்சாரியார் ஆகியோரும் அதில் எழுதி வந்தனர்

வரலாற்று இடம்

மண்டயம் திருமலாச்சாரியார் விடுதலைப்போராட்ட வீரர், இதழியல் முன்னோடி என்னும் இரு தளங்களில் தமிழக வரலாற்றில் முதன்மையான இடம் உடையவர். பாரதியின் புரவலராகவும் அவர் மதிக்கப்படுகிறார்

உசாத்துணை