விவேக சிந்தாமணி: Difference between revisions
No edit summary |
m (Created/reviewed by Je) |
||
Line 11: | Line 11: | ||
https://www.thamizham.net/ithazh/oldmag/om/om002-u8.htm | https://www.thamizham.net/ithazh/oldmag/om/om002-u8.htm | ||
{{ | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 12:42, 3 March 2022
விவேக சிந்தாமணி (1892) சென்னையில் இருந்து வெளிவந்த மாத இதழ். இதில் பி.ஆர்.ராஜம் ஐயர், அ.மாதவையா போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். சி. வி சுவாமிநாதையர் என்பவர் 1892-ஆம் ஆண்டு தொடங்கி நடத்திய இதழ் இது (விவேகசிந்தாமணி என்னும் பழைய நெறிநூல் ஒன்று உண்டு)
வெளியீடு
சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியின் Madras Christian College Magazine வில்லியம் மில்லர் வழிகாட்டலில் 1870கள் முதல் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் இலக்கியங்களை வெளியிட்டு வந்தது. அதில் எழுதியவர்கள் தமிழில் எழுத விரும்பியமையால் தொடங்கப்பட்ட இதழ் விவேகசிந்தாமணி .1892ல் இவ்விதழை வி.சுவாமிநாதையர் தொடங்கினார்.
உள்ளடக்கம்
விவேகசிந்தாமணி இன்று பி.ஆர்.ராஜம் ஐயர், அ. மாதவையா போன்றவர்களின் படைப்புகளை வெளியிட்ட இதழ் என அறியப்படுகிறது. 1893-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரியில் விவேக சிந்தாமணியில் தொடர்கதை வடிவத்தில் கமலாம்பாள் சரித்திரத்தை ராஜம் ஐயர் 'அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்' என்ற தலைப்பில் மூன்றாண்டுகள் தொடராக எழுதினார். அ.மாதவையா விவேகசிந்தாமணியில் சாவித்திரியின் கதை என்ற தொடர் நாவலை 1892 ன் இதழில் எழுதத்தொடங்கினார். அதிலிருந்த கடுமையான விமர்சனங்களினால் அத்தொடர் அதன் ஆசிரியரால் நிறுத்தப்பட்டது. இருமாதங்களுக்கு ஒருமுறை என ஆறு அத்தியாயங்கள் மட்டுமே வெளிவந்தன. அந்நாவல் முத்துமீனாட்சி என்றபேரில் நூலாகியது. அ. மாதவையா அதன்பின் விவேகசிந்தாமணியில் 1898-ல் பத்மாவதி சரித்திரம் நாவலை எழுதினார்.
உசாத்துணை
https://www.thamizham.net/ithazh/oldmag/om/om002-u8.htm
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.