பரிபாடல்: Difference between revisions
No edit summary |
|||
Line 28: | Line 28: | ||
!பாடல்களுக்குப் பண் அமைத்தவர் | !பாடல்களுக்குப் பண் அமைத்தவர் | ||
!பாடுபொருள் | !பாடுபொருள் | ||
! | !எண்ணிக்கை | ||
|- | |- | ||
|1 | |1 | ||
|ஆசிரியன் நல்லந்துவனார் | |ஆசிரியன் நல்லந்துவனார் | ||
|மருத்துவன் நல்லச்சுதனார் | |மருத்துவன் நல்லச்சுதனார் | ||
| | |வைகை, | ||
முருகன் | முருகன் | ||
|2 | |2 | ||
|- | |- | ||
Line 44: | Line 40: | ||
|இளம்பெருவழுதியார் | |இளம்பெருவழுதியார் | ||
|நாகனார் மருத்துவன் நல்லச்சுதனார் | |நாகனார் மருத்துவன் நல்லச்சுதனார் | ||
| | |வைகை, திருமால் | ||
| | |2 | ||
|- | |- | ||
|3 | |3 | ||
|கடுவன் இள எயினனார் | |கடுவன் இள எயினனார் | ||
|பெட்டனாகனார் கண்ணன் நாகனார் | |பெட்டனாகனார் கண்ணன் நாகனார் | ||
|திருமால் முருகன் | |திருமால், முருகன் | ||
| | |2 | ||
|- | |- | ||
|4 | |4 | ||
|சுரும்பிள்ளைப் பூதனார் | |சுரும்பிள்ளைப் பூதனார் | ||
|மருத்துவன் நல்லச்சுதனார் | |மருத்துவன் நல்லச்சுதனார் | ||
| | |வைகை | ||
| | |2 | ||
|- | |- | ||
|5 | |5 | ||
Line 70: | Line 60: | ||
|திருமால் | |திருமால் | ||
|1 | |1 | ||
|- | |- | ||
|6 | |6 | ||
Line 76: | Line 65: | ||
|மருத்துவன் நல்லச்சுதனார் | |மருத்துவன் நல்லச்சுதனார் | ||
|முருகன் | |முருகன் | ||
|2 | |2 | ||
|- | |- | ||
|7 | |7 | ||
Line 84: | Line 71: | ||
|கேசவனார் | |கேசவனார் | ||
|முருகன் | |முருகன் | ||
|1 | |1 | ||
|- | |- | ||
|8 | |8 | ||
Line 92: | Line 77: | ||
|மருத்துவன் நல்லச்சுதனார் | |மருத்துவன் நல்லச்சுதனார் | ||
|முருகன் | |முருகன் | ||
|1 | |1 | ||
|- | |- | ||
|9 | |9 | ||
Line 100: | Line 83: | ||
|கண்ணாகனார் | |கண்ணாகனார் | ||
|வையை | |வையை | ||
|1 | |1 | ||
|- | |- | ||
|10 | |10 | ||
Line 108: | Line 89: | ||
|நல்லச்சுதனார் | |நல்லச்சுதனார் | ||
|முருகன் | |முருகன் | ||
|1 | |1 | ||
|- | |- | ||
Line 117: | Line 96: | ||
|திருமால் | |திருமால் | ||
|1 | |1 | ||
|- | |- | ||
|12 | |12 | ||
|நல் வழுதியார் | |நல் வழுதியார் | ||
|நந்நாகனார் | |நந்நாகனார் | ||
| | |வைகை | ||
|1 | |1 | ||
|- | |- | ||
Line 131: | Line 106: | ||
|மையோடக் கோவனார் | |மையோடக் கோவனார் | ||
|பித்தா மத்தர் | |பித்தா மத்தர் | ||
| | |வைகை | ||
|1 | |1 | ||
|} | |} | ||
== நூல் அமைப்பு == | |||
பரிபாடலில் திருமாலுக்கு 8, செவ்வேளுக்கு 31, வைகைக்கு 26, மதுரைக்கு 4, கொற்றவைக்கு 1 என 70 பாடல்கள் இருந்த்தாக [[இறையனார் களவியல் உரை]] குறிப்பிடுகிறது. | |||
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் | |||
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய | |||
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப | |||
செய்யபரி பாடற் றிறம். | |||
இன்றி இருப்பவை திருமாலுக்கு 6,முருகனுக்கு 8, வைகைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்கள். மேலும் தனிநிலையில் கிடைத்த 11 பாடல்கள் இந்த நூலினதாக இருக்கலாம் என்னும் கருத்தோடு ‘பரிபாடல் திரட்டு’ என்னும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பரிபாடல் அகப்பொருளும் புறப்பொருளும் இணைந்த நூல். | |||
==உசாத்துணை== | ==உசாத்துணை== |
Revision as of 02:39, 3 November 2023
பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது ஒரு பண்ணிசை இலக்கியம். ‘பரிபாட்டு’ என்னும் பெயராலும் இது வழங்கப்பட்டிருக்கிறது.
பெயர்க்காரணம்
பரிபாடல் என்னும் பாவகையில் இயற்றப்பெற்றமையால் இந்நூல் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. பரிந்து செல்லும் ஓசையுடைய (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்கும், பல்வேறு அடிகளுக்கும் பரிந்து இடமளிக்கும்) தன்மையால் இப்பாவகை 'பரிபாடல்' எனப் பெயர் பெற்றது. பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்டதால் இப்பெயர் அமைந்தது என்றும் கருதப்படுகிறது.எட்டுத்தொகை நூல்களில் பாவகையால் பெயர் அமைந்தவை கலித்தொகையும் பரிபாடலும்.
தொல்காப்பியர் கூறும் பரிபாடலுக்கான இலக்கணம்
- நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
- வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
- வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
- கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும்.
- பாடுபொருள் அகத்திணை சார்ந்ததாக இருக்கும்
- 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.
தொல்காப்பியர், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் அனைவரும் பரிபாடல் என்னும் பாவகையில் தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றிவரும் என்று குறிப்பிடுகின்றனர்.
சங்கத்தொகை நூலான பரிபாடல் பெரிதும் பெரிதும் தோத்திரப் பாடல்களாகவே அமைந்துள்ளன. அகப்பொருள் பேசப்படவில்ல. எனவே"பரிபாடலின் தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட காலத்தில் புறம்பற்றிய செய்திகளும் பரிபாடலில் பாடப்பெற்றன” என்பது இப்பாக்களால் தெரிகின்றது" என்று மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.
காலம்
எஸ். வையாபுரிப் பிள்ளை அதிக வடசொற்கள் இடம்பெறுவது, பரிபாடல்களைப் பாடிய புலவருள் எவரும் பிற சங்கத்தொகை நூல்களில் பாடாதது போன்ற பல காரணங்களினால் பரிபாடல் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது என்று கருதினார். இரா. இராசமாணிக்கனார் 'தமிழ்மொழி -இலக்கிய வரலாறு' நூலில்[1] இக்கருத்துக்களை மறுத்துரைத்து பரிபாடலும் கலித்தொகையும் பொ.மு. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். பரிபாடல்களைப் பாடிய புலவர்கள் பிறதொகை நூற்பாக்களைப் பாடிய புலவரே எனக் கொண்டாலும், வேறானவர் எனக் கொண்டாலும், அவர்கள் காலம் பொ.யு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதி என்றும் அதனால் பரிபாடல் சங்க காலத்தில் இயற்றப்பட்டதே என்றும் குறிப்பிடுகிறார்.
பாடிய புலவர்கள்
பாடல்களைப் பாடியவர் | பாடல்களுக்குப் பண் அமைத்தவர் | பாடுபொருள் | எண்ணிக்கை | |
---|---|---|---|---|
1 | ஆசிரியன் நல்லந்துவனார் | மருத்துவன் நல்லச்சுதனார் | வைகை,
முருகன் |
2 |
2 | இளம்பெருவழுதியார் | நாகனார் மருத்துவன் நல்லச்சுதனார் | வைகை, திருமால் | 2 |
3 | கடுவன் இள எயினனார் | பெட்டனாகனார் கண்ணன் நாகனார் | திருமால், முருகன் | 2 |
4 | சுரும்பிள்ளைப் பூதனார் | மருத்துவன் நல்லச்சுதனார் | வைகை | 2 |
5 | கீரந்தையார் | நன்னாகனார் | திருமால் | 1 |
6 | குன்றம்பூதனார் | மருத்துவன் நல்லச்சுதனார் | முருகன் | 2 |
7 | கேசவனார் | கேசவனார் | முருகன் | 1 |
8 | நப்பண்ணனார் | மருத்துவன் நல்லச்சுதனார் | முருகன் | 1 |
9 | நல்லச்சுதனார் | கண்ணாகனார் | வையை | 1 |
10 | நல் அமுசியார் | நல்லச்சுதனார் | முருகன் | 1 |
11 | நல் எழுதியார் | பெயர் அழிந்துபட்டது | திருமால் | 1 |
12 | நல் வழுதியார் | நந்நாகனார் | வைகை | 1 |
13 | மையோடக் கோவனார் | பித்தா மத்தர் | வைகை | 1 |
நூல் அமைப்பு
பரிபாடலில் திருமாலுக்கு 8, செவ்வேளுக்கு 31, வைகைக்கு 26, மதுரைக்கு 4, கொற்றவைக்கு 1 என 70 பாடல்கள் இருந்த்தாக இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது.
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.
இன்றி இருப்பவை திருமாலுக்கு 6,முருகனுக்கு 8, வைகைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்கள். மேலும் தனிநிலையில் கிடைத்த 11 பாடல்கள் இந்த நூலினதாக இருக்கலாம் என்னும் கருத்தோடு ‘பரிபாடல் திரட்டு’ என்னும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பரிபாடல் அகப்பொருளும் புறப்பொருளும் இணைந்த நூல்.
உசாத்துணை
தமிழ் இணைய கல்விக்கழகம், பரிபாடல் நூல்
பரிபாடல், உரை பொ. வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.