under review

இரா. முத்தரசன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
Line 3: Line 3:
== பிறப்பு; கல்வி ==
== பிறப்பு; கல்வி ==
இரா. முத்தரசன் செப்டம்பர் 12, 1958-ல் கோலாலம்பூரில்  இராமசாமி. வீரம்மாள் இணையருக்கு  நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் முத்தரசு.  உடன் பிறந்தவர்கள்  ஐந்து சகோதரிகள்.

இரா. முத்தரசன் தன் ஆரம்பக் கல்வியை செந்தூல் தமிழ்ப் பள்ளியில் 1965-ஆம் ஆண்டு முதல் 1970 வரை பயின்றார். தொடர்ந்து படிவம் ஒன்று முதல் படிவம் ஐந்து வரை செந்துல் எம்பிஎஸ் இடைநிலைப் பள்ளியில் (1971-1976) படித்தார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக ஐந்தாம் படிவம் எஸ்பிஎம் (அப்போது எம்.சி.இ -M.C.E) முடிந்த பின்னர் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும் தொடர்ந்து எஸ்டிபிஎம் (HSC) ‘ஏ’ லெவல் (‘A Levels) என பகுதி நேரமாக மாலை வேளைகளில் தனியார் கல்லூரிகளில் பயின்று வந்தார்.

1990- ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1991-1992-ல் வழக்கறிஞர் தொழிலுக்கான பயிற்சி (Certificate in Legal Practice - CLP) பெற்று1 992 முதல் வழக்கறிஞராகப் பணி  புரிந்தார்.கோலாலம்பூர், மலாயாப் பல்கலைக் கழகத்தில் மேலாண்மைத் துறையில்  முதுகலைப் பட்டம் (MBA) பெற்றார் (2006-2008).  

== திருமணம்; தொழில் ==
== திருமணம்; தொழில் ==
இரா. முத்தரசன் 1984-ல் சா. விக்னேஸ்வரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு தீபன், நந்தனா, சுகந்தா என மூன்று பிள்ளைகள். இரா. முத்தரசன் தனது பத்தொன்பதாம் வயது முதல் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்.  

செய்த தொழில்கள்:
செய்த தொழில்கள்:
* 1977 – 1978: துணையாசிரியர், புதிய சமுதாயம் தமிழ் பத்திரிகை.

Line 21: Line 25:
== பொது வாழ்க்கை ==
== பொது வாழ்க்கை ==
முத்தரசன் தனது பதின்ம வயதுகளில் வாசிப்புக்காகவும், இடைநிலைப் பள்ளி கல்வியின் போது படிப்பதற்கு உகந்த இடம் தேடியும் கோலாலம்பூர், செந்தூல் [[முத்தமிழ் படிப்பகம் (மலேசியா)|முத்தமிழ் படிப்பகத்திற்குச்]] செல்லும்  வழக்கம் கொண்டிருந்தார். அதுவே அவரின் இலக்கிய வாசிப்பை விரிவாக்கிய களமாகவும்,  பொதுவாழ்க்கை செயல்பாடுகளுக்கான தொடக்கமாகவும் அமைந்தது. [[முத்தமிழ் படிப்பகம் (மலேசியா)|முத்தமிழ் படிப்பகத்தின்]] செயலவை உறுப்பினர், இலக்கியப் பகுதி செயலாளர், செயலாளர், வெள்ளிவிழா கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் என பல பொறுப்புகளை [[முத்தமிழ் படிப்பகம் (மலேசியா)|முத்தமிழ்ப் படிப்பகத்தில்]] அவர் வகித்திருக்கிறார். தற்போது படிப்பகத்தின் ஆயுட்கால உறுப்பினராகத் தொடர்கிறார்.

தனது 18-வது வயதில் கோலாலம்பூர் தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் உறுப்பினராக இணைந்து பின்னர் அந்தக் கிளையின் செயலவை உறுப்பினராகவும், செயலாளராகவும் பணியாற்றினார். [[மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்|மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்]] செயலவை உறுப்பினராகவும் அமரர் [[எம். துரைராஜ்|எம். துரைராஜின்]] தலைமையில் பணியாற்றியிருக்கிறார்.  

முத்தரசன் 1980-ஆம் ஆண்டுகளில் மஇகாவில் (மலேசிய இந்திய காங்கிரஸ்)  தீவிர அரசியலில்  ஈடுபட்டதாலும்  பகுதி நேரமாக உயர்கல்வியைத் தொடர்ந்ததாலும், பொதுவாழ்க்கையிலும்,  இலக்கியப் பணிகளிலும் ஈடுபடும் நேரம் குறைந்தது.   

======மஇகாவில் வகித்த பொறுப்புகள்======
======மஇகாவில் வகித்த பொறுப்புகள்======
Line 31: Line 37:
==எழுத்து வாழ்க்கை==
==எழுத்து வாழ்க்கை==
இளமையிலேயே  எழுத்தார்வம் கொண்டிருந்த இரா. முத்தரசன் செந்தூல் தமிழ்ப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும்போது,‘ராமாயணம்’ குறித்து எழுதிய சிறு கட்டுரை தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கென அமரர் கவிஞர் [[சி. வேலுசுவாமி|சி. வேலுசாமி]] 10 காசு விலையில் நடத்தி வந்த ‘திருமகள்’ மாத இதழில் வெளிவந்தது.  

தன் பதின்ம வயதுகளில் தமிழ் நாளிதழ்களில் சிறுகதை, கவிதை, கட்டுரை, வானொலி நாடகங்கள் என எழுதத் தொடங்கினார் இரா. முத்தரசன்.  10 சிறுகதைகளைக் கொண்ட ‘இதுதான் முதல் ராத்திரி’ என்ற சிறுகதைத் தொகுப்பு 1988-ல் வெளிவந்தது.  ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுதி, தமிழிலும், ஆங்கிலத்திலும் அரசியல் ஆய்வு நூல் என இதுவரையில் 5 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். ‘செல்லியல் பார்வை’ என்ற தலைப்பில் தொடர்ந்து அரசியல், சமூகம் குறித்த தனது கண்ணோட்டங்களை செல்லியல் தளத்தில் பதிவு செய்து வருகிறார் இரா.முத்தரசு. தமிழ் நாளிதழ்களிலும் அரசியல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

==பெற்ற விருதுகள்==
==பெற்ற விருதுகள்==

Revision as of 20:09, 12 July 2023

இரா. முத்தரசன்

இரா. முத்தரசன்(செப்டம்பர் 12, 1958) மலேசிய எழுத்தாளர்; இதழாசிரியர். இவர் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், கவிதைகள், அரசியல் பார்வைகள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் ஓர் அரசியல் வரலாற்று நூலும், சமூக,அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். முத்தரசன் செல்லியல் இணைய இதழின் நிர்வாக ஆசிரியர் .

பிறப்பு; கல்வி

இரா. முத்தரசன் செப்டம்பர் 12, 1958-ல் கோலாலம்பூரில் இராமசாமி. வீரம்மாள் இணையருக்கு நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் முத்தரசு. உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள்.

இரா. முத்தரசன் தன் ஆரம்பக் கல்வியை செந்தூல் தமிழ்ப் பள்ளியில் 1965-ஆம் ஆண்டு முதல் 1970 வரை பயின்றார். தொடர்ந்து படிவம் ஒன்று முதல் படிவம் ஐந்து வரை செந்துல் எம்பிஎஸ் இடைநிலைப் பள்ளியில் (1971-1976) படித்தார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக ஐந்தாம் படிவம் எஸ்பிஎம் (அப்போது எம்.சி.இ -M.C.E) முடிந்த பின்னர் வேலைக்குச் சேர்ந்தார். இருப்பினும் தொடர்ந்து எஸ்டிபிஎம் (HSC) ‘ஏ’ லெவல் (‘A Levels) என பகுதி நேரமாக மாலை வேளைகளில் தனியார் கல்லூரிகளில் பயின்று வந்தார்.

1990- ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1991-1992-ல் வழக்கறிஞர் தொழிலுக்கான பயிற்சி (Certificate in Legal Practice - CLP) பெற்று1 992 முதல் வழக்கறிஞராகப் பணி புரிந்தார்.கோலாலம்பூர், மலாயாப் பல்கலைக் கழகத்தில் மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டம் (MBA) பெற்றார் (2006-2008).

திருமணம்; தொழில்

இரா. முத்தரசன் 1984-ல் சா. விக்னேஸ்வரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு தீபன், நந்தனா, சுகந்தா என மூன்று பிள்ளைகள். இரா. முத்தரசன் தனது பத்தொன்பதாம் வயது முதல் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார்.

செய்த தொழில்கள்:

  • 1977 – 1978: துணையாசிரியர், புதிய சமுதாயம் தமிழ் பத்திரிகை.
  • நவம்பர் 1978 – ஏப்ரல் 1980: அலுவலகப் பணியாளர், மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) தலைமையகம்.
  • மே 1980 – ஜூன் 1982: நிர்வாகச் செயலாளர், மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலம்.
  • 1982 – 1988: குமாஸ்தா, ஹாங்காங் அண்ட் ஷங்காய் வங்கி.
  • 1989-1990: சட்டத் துறை விரிவுரையாளர், ரிமா (RIMA) கல்லூரி, கோலாலம்பூர்.
  • 1992-2001: வழக்கறிஞர் பணி
  • 2001-2008: வணிகத் துறையில் பங்கெடுப்பு
  • 2008-2009: ஆசிரியர், indiantoday.net எனும் ஆங்கில, தமிழ் இணைய பத்திரிகை
  • 2009-2010: ஆசிரியர், Malaysian Indian Business என்ற ஆங்கில இதழ்.
  • 2012: செல்லியல் இணைய இதழின் நிர்வாக ஆசிரியர்

பொது வாழ்க்கை

முத்தரசன் தனது பதின்ம வயதுகளில் வாசிப்புக்காகவும், இடைநிலைப் பள்ளி கல்வியின் போது படிப்பதற்கு உகந்த இடம் தேடியும் கோலாலம்பூர், செந்தூல் முத்தமிழ் படிப்பகத்திற்குச் செல்லும் வழக்கம் கொண்டிருந்தார். அதுவே அவரின் இலக்கிய வாசிப்பை விரிவாக்கிய களமாகவும், பொதுவாழ்க்கை செயல்பாடுகளுக்கான தொடக்கமாகவும் அமைந்தது. முத்தமிழ் படிப்பகத்தின் செயலவை உறுப்பினர், இலக்கியப் பகுதி செயலாளர், செயலாளர், வெள்ளிவிழா கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் என பல பொறுப்புகளை முத்தமிழ்ப் படிப்பகத்தில் அவர் வகித்திருக்கிறார். தற்போது படிப்பகத்தின் ஆயுட்கால உறுப்பினராகத் தொடர்கிறார்.

தனது 18-வது வயதில் கோலாலம்பூர் தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் உறுப்பினராக இணைந்து பின்னர் அந்தக் கிளையின் செயலவை உறுப்பினராகவும், செயலாளராகவும் பணியாற்றினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினராகவும் அமரர் எம். துரைராஜின் தலைமையில் பணியாற்றியிருக்கிறார்.

முத்தரசன் 1980-ஆம் ஆண்டுகளில் மஇகாவில் (மலேசிய இந்திய காங்கிரஸ்) தீவிர அரசியலில் ஈடுபட்டதாலும் பகுதி நேரமாக உயர்கல்வியைத் தொடர்ந்ததாலும், பொதுவாழ்க்கையிலும், இலக்கியப் பணிகளிலும் ஈடுபடும் நேரம் குறைந்தது.

மஇகாவில் வகித்த பொறுப்புகள்
  • மஇகாவில் கிளை அளவில் பல பொறுப்புகளை வகித்திருப்பதோடு, 1987-ஆம் ஆண்டில் மஇகா கூட்டரசுப் பிரதேச ஆட்சிக் குழு உறுப்பினராகத் தேர்தலின் வழி தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
  • 1982-ஆண்டில் மஇகா கலாச்சாரக் குழுவின் ஏற்பாட்டில் தலைவர் வழக்கறிஞர் டி.பி. விஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பாரதியார் நூற்றாண்டு விழாவின் ஏற்பாட்டுச் செயலவை உறுப்பினர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.
  • மஇகாவின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி. சுப்பிரமணியம் அவர்களின் தனிச் செயலாளராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
இதழியல்

ஜனவரி 2012 முதல், இணையத்திலும், செல்பேசி குறுஞ்செயலி தளத்திலும் இயங்கிவரும் ‘செல்லியல்’ என்ற இணைய ஊடகத்தின் இணை தோற்றுநரான இரா. முத்தரசன், அந்த ஊடகத்தின் நிர்வாக ஆசிரியராகவும் பங்காற்றி வருகிறார்.

எழுத்து வாழ்க்கை

இளமையிலேயே எழுத்தார்வம் கொண்டிருந்த இரா. முத்தரசன் செந்தூல் தமிழ்ப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும்போது,‘ராமாயணம்’ குறித்து எழுதிய சிறு கட்டுரை தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கென அமரர் கவிஞர் சி. வேலுசாமி 10 காசு விலையில் நடத்தி வந்த ‘திருமகள்’ மாத இதழில் வெளிவந்தது.

தன் பதின்ம வயதுகளில் தமிழ் நாளிதழ்களில் சிறுகதை, கவிதை, கட்டுரை, வானொலி நாடகங்கள் என எழுதத் தொடங்கினார் இரா. முத்தரசன். 10 சிறுகதைகளைக் கொண்ட ‘இதுதான் முதல் ராத்திரி’ என்ற சிறுகதைத் தொகுப்பு 1988-ல் வெளிவந்தது. ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுதி, தமிழிலும், ஆங்கிலத்திலும் அரசியல் ஆய்வு நூல் என இதுவரையில் 5 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். ‘செல்லியல் பார்வை’ என்ற தலைப்பில் தொடர்ந்து அரசியல், சமூகம் குறித்த தனது கண்ணோட்டங்களை செல்லியல் தளத்தில் பதிவு செய்து வருகிறார் இரா.முத்தரசு. தமிழ் நாளிதழ்களிலும் அரசியல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

பெற்ற விருதுகள்

  • ஆஸ்ட்ரோ-மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் ‘மண்மாற்றம்’ நாவலுக்குச் சிறப்புப் பரிசு (2004)
  • தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்க இலக்கியப் போட்டிகளில் சில முறை கட்டுரைகளுக்கான பரிசுகளை வென்றுள்ளார்.
  • மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் 32- வது பேரவைக் கதைகள் – சிறுகதைக்கு ஆறுதல் பரிசு (2018 ஆண்டு)
  • தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய ‘மஇகா தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும்?’ என்ற போட்டியில் முதல் பரிசு (1977)

எழுதிய நூல்கள்

  • இதுதான் முதல்ராத்திரி (சிறுகதைத் தொகுப்பு) 1988
  • அன்வார் இப்ராகிம் வெற்றிப் போராட்டங்கள் (அரசியல் வரலாற்று நூல்) 2009
  • Winning Strategies of Anwar Ibrahim (English Book) 2009
  • மண்மாற்றம் (நாவல்) 2017
  • செல்லியல் பார்வைகள் (கட்டுரைத் தொகுப்பு) 2017

✅Finalised Page